Monthly Archives: July 2014

குறளின் குரல் – 833

31st Jul 2014 சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். (குறள் 827: கூடாநட்பு அதிகாரம்) சொல்வணக்கம் – வணக்கமாக பேசுவதை ஒன்னார்கண் – பகைவரிடமிருந்து கொள்ளற்க – எடுத்துக்கொள்ளக்கூடாது வில்வணக்கம் – வில் வளந்து, வணங்குவதுபோன்றது தீங்கு – எதிரிக்கு தீமையை செய்வதைக் குறித்தமையான் – குறிப்பது போன்றதாகும் பகைவர் வணங்கி … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 832

30th Jul 2014 நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். (குறள் 826: கூடாநட்பு அதிகாரம்) நட்டார்போல் – நண்பரைப்போல் நல்லவை சொல்லினும் – நல்லன கூறுவனபோல் சொல்லுகின்ற ஒட்டார்சொல் – பகைவர்தம் சொல்லில் உண்மையின்மையை ஒல்லை – விரைவிலேயே உணரப்படும் – உணர்ந்து கொள்ளலாம். கூடா நட்பில் இருக்கும் போலி நண்பர்கள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 831

29th Jul 2014 மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. (குறள் 825: கூடாநட்பு அதிகாரம்) மனத்தின் – உள்ளத்தினால் அமையாதவரை – உண்மையாக நட்பு கொள்ளாதவரை (மேல்பூச்சான நட்புறவில் இருப்பவரை) எனைத்தொன்றும் – எச்செயலிலும் சொல்லினால் – அவர் கூறுகின்ற சொற்களினால் தேறற்பாற்று அன்று – நம்பி செய்தல் கூடாது. எச்செயலைச் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 830

28th Jul 2014 முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். (குறள் 824: கூடாநட்பு அதிகாரம்) முகத்தின் – தம்முடைய முகத்தில் காண்போருக்கு இனிய நகாஅ – இனிய புன்சிரிப்பையும் அகத்து இன்னா – தம்முடைய நெஞ்சத்தில் துன்பத்தை விளைக்கக்கூடிய நஞ்சன்ன எண்ணத்தையும் வைத்த வஞ்சரை – வஞ்சக எண்ணம் உடையவரின் நட்பையும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 829

27th Jul 2014 பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. (குறள் 823: கூடாநட்பு அதிகாரம்) பல நல்ல – நல்லவற்றைப் பல நூல்களிலிருந்து கற்றக் கடைத்து – கற்று தேர்ந்தும் மனநல்லர் ஆகுதல் – மனம் செம்மைபடுதல் என்பதும், அதனால் நட்புறவில் நிலைபெறுதலும் மாணார்க்கு – சால்பிலார்க்கு (நண்புறவில் உள்ளார்ந்து கூடாதவர்க்கு), … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 828

26th Jul 2014 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். (குறள் 822: கூடாநட்பு அதிகாரம்) இனம்போன்று – நமக்கு உற்றவர்போல் தோற்றமளித்து இனமல்லார் – உண்மையில் அவ்வாறில்லார்தம் கேண்மை – நட்புறவு மகளிர் மனம்போல – பெண்களின் உள்ளம்போல் வேறுபடும் – நிலையில்லாது மாறுபடும் தன்மையது. இக்குறள் சொல்லும் கருத்து: நமக்கு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 827

83: (Façade Friendship – கூடாநட்பு) [This chapter is about identifying façade friendship that is nothing but a charade. Regardless of how truthfully one extends his hand in friendship, there are people that look only for their benefit and would be … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 826

24th Jul 2014 எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. (குறள் 820: தீநட்பு அதிகாரம்) எனைத்தும் – சிறிதாகிலும் குறுகுதல் – தன்னை அணுகுவதை ஓம்பல் – விலக்குக மனைக் – வீட்டிலே கெழீஇ – நட்பாடி இருந்துவிட்டு மன்றில் – பலர் கூடியுள்ள அவையிலே பழிப்பார் – தூற்றிப் பழிக்கின்றவருடைய … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 825

23rd Jul 2014 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. (குறள் 819: தீநட்பு அதிகாரம்) கனவினும் – கனவிலும் வந்து உறுத்தும் இன்னாது மன்னோ – துன்பம் அன்றோ? வினைவேறு – செய்யும் செயல் வேறாய் சொல் வேறுபட்டார் – ஆனால் சொன்ன் சொல் வேறாய் இருப்பவர்கள்தம் தொடர்பு – நட்புறவு! … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 824

22nd Jul 2014 ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். (குறள் 818: தீநட்பு அதிகாரம்) ஒல்லும் – தம்மால் இயன்ற கருமம் – செயலையும் (உதவியையும்) உடற்றுபவர் – முடியாதது போல் காட்டி செய்யாமல் விடுபவருடைய கேண்மை – நட்பு சொல்லாடார் – அவரிடம் சொல்லாமலேயே சோர விடல் – கைகழுவி … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment