Monthly Archives: September 2014

குறளின் குரல் – 894

30th Sep 2014 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி.                         (குறள் 888: உட்பகை அதிகாரம்) அரம் பொருத – கொல்லன் கை பொன்னைத் தேய்க்கும் கருவியால் தேய்க்கப்பட்ட பொன் போலத் தேயும் – பொன் தேய்வது போல தேய்ந்தழியும் உரம் பொருது – தங்கள் வலிமையால், யார் வலிமிக்கவர் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 893

29th Sep 2014 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி.                         (குறள் 887: உட்பகை அதிகாரம்) செப்பின் – செப்புத் தகடினால் ஆகிய பாத்திரத்தின் மூடி புணர்ச்சிபோல் – அதனுடைய பாத்திரத்தோடு சேர்ந்திருப்பதுபோல் கூடினும் கூடாதே – சேர்ந்திருப்பினும் இரண்டும் தனியாக ஒன்றொடொன்று உள்ளத்தால் கூடாதவையாம் உட்பகை உற்ற – … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 892

28th Sep 2014 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. (குறள் 886: உட்பகை அதிகாரம்) ஒன்றாமை – உள்ளத்தாள் ஒன்றாது, உட்பகை ஒன்றியார்கட்படின் – உற்றாரோடு இருக்குமாயின் எஞ்ஞான்றும் – எப்போதும், எக்காலத்தும் பொன்றாமை – அழிவில்லாமை ஒன்றல் அரிது -கூடுதல் அரிதாம் உள்ளத்தால் ஒன்றாது உற்றத்தாரோடு உட்பகைக் கொள்வார்க்கு எக்காலத்திலும், … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 891

27th Sep 2014 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்.                         (குறள் 885: உட்பகை அதிகாரம்) உறல்முறையான் – உறவினர்களிடையே உட்பகை தோன்றின் – ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளுகின்ற அளவுக்கு உட்பகை உருவாகுமானால் இறல்முறையான் – அது அவர்கள் எல்லோருமே இறந்து அழிகின்ற ஏதம் பலவும் – குற்றங்கள் பலவற்றை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 890

26th Sep 2014 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும்.                         (குறள் 884: உட்பகை அதிகாரம்) மனமாணா – உள்ளத்தில் மாட்சிமை இல்லாது, குன்றி உட்பகை தோன்றின் – தம்மனோர்க்கே கேடு செய்யும் உட்பகை கொண்டால் இனமாணா – தம் சுற்றம், உற்றார்க்கே மாட்சிமை இல்லாது செய்யும்படியான ஏதம் பலவும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 889

25th Sep 2014 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்.                       (குறள் 883: உட்பகை அதிகாரம்) உட்பகை – அருகிலிருந்துகொண்டே பகையாக இருப்பவர்களை அஞ்சித் – அஞ்சுக, அவரிடமிருந்து தற்காக்க – தன்னைக் காத்துக்கொள்ளவேண்டும் உலைவிடத்து – (ஏனெனில் நாம் ஏற்கனவே) வருந்தி தளர்வுறும்போது, மட்பகையின் – மட்பாண்டத்தை வனையும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 888

24th Sep 2014 வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக  கேள்போல் பகைவர் தொடர்பு.                         (குறள் 882: உட்பகை அதிகாரம்) வாள்போல – கொல்லும் ஆயுதமான வாளினைப் போல் பகைவரை – கொல்லும் பகைவரைக்கூட அஞ்சற்க – அஞ்ச வேண்டாம் அஞ்சுக – (ஆனால்) அஞ்சவேண்டும் கேள்போல் – உறவினரைப்போல இருந்து பகைவர் – உட்பகைகொண்ட வஞ்ச நெஞ்சத்தினரின் தொடர்பு – உறவினை. உடனிருந்து கொல்லும் நோய் போலாம், உட்பகையோடு உதட்டுறவில் இருக்கும் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 887

89: (Enemy within – உட்பகை) [This chapter talks about the internal enemies, enemies within, their ways, how to identify them, who they are, how they should be feared and watched, and what such internal enemies can do. Though almost all … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 886

22nd Sep 2014 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்.                         (குறள் 880: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்) உயிர்ப்ப – உயிரோடு உளரல்லர் – வாழ்வருக்கு ஒப்பாகமாட்டார் மன்ற – தெளிவாக செயிர்ப்பவர் – பகைவர் செம்மல் – செருக்கினை சிதைக்கலாதார் – அழிக்காதவர். தமது பகைவரது செருக்கினை தெளிவாக அழிக்காதவர் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

குறளின் குரல் – 885

21st Sep 2014 இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து.                         (குறள் 879: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்) இளைதாக – பிஞ்சாக இருக்கையிலே முள்மரம் – முள் மரத்தை கொல்க – வெட்டி எறிந்துவிடவேண்டும் களையுநர் – இல்லையெனில், அது களைபவரின் கைகொல்லும் – கையினை பதம் பார்த்து வருத்தும் காழ்த்த … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment