Monthly Archives: October 2019

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 120

120. பக்திவஶ்யா ( भक्तिवश्या – பக்திக்குக் கட்டுப்பட்டவள், வசியப்பட்டவள்) அனாசாரமாகப் பூஜைசெய்தாலும், அபரிமிதமான பிரேமையில் செய்யப்பட்ட கண்ணப்ப நாயனாரின் பக்திக்கு, ஶிவபிரான் வசியமாகி, அவருக்கு நேரே தோன்றி காட்சியளித்ததே, பக்தரின் பக்திக்குப் பரம்பொருள் எப்படி வசப்படுகிறது என்று காட்டுகிறது. அப்பனோடு அபேதமாக இருக்கும் அம்மையும் அதேபோல்தானே இருப்பாள்? பத்தர்தம் பத்தியிலே பங்கம் இருப்பினும் சத்திப் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 119

119. பக்திகம்யா ( भक्तिगम्या – பக்தி மார்க்கத்தால் அடையக்கூடியவள்; பக்தரின் உபாஸனைக்கு வசப்பட்டு தோன்றுகிறவள் ) பக்தியின் உறுதியால் பரமாத்மாவின் உருவை நேரில் தரிசனம் செய்யமுடியுமென பல பக்தி இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. பக்தி என்னும் வழியைப்பற்றிச் சென்றால் சென்றடையக்கூடிய (கம்யமான) இடமான அம்மையை, பக்திகம்யா என்று சொல்லப்படுகிறது. பக்தி என்பதற்கு இலக்கணம் என்றும் பொருளுண்டு. … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 118

118. பக்திப்ரியா ( भक्तिप्रिया – சிரத்தையோடு பக்தி செய்யும் அன்பர்கள்பால் பிரியம் உள்ளவள் ) பக்தியில் இருவகை உண்டு. முக்கிய, ஸாமான்ய என்ற இரண்டுமாகும் அவை. முக்யபக்தி எப்படி ஊசியானது காந்தத்தால் ஈர்க்கப்படுகிறதோ, நதியோடி கடலைச் சேர்கிறதோ, அதுபோல ஈசன்பால் ஈர்க்கப்பட்டு மதுர அல்லது பிரேம பக்தியோடு இருப்பது. ஸாமான்ய பக்தியென்பது, பரம்பொருளுக்குச் சேவை … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 117

117. பக்த சௌபாக்யதாயினி ( भक्त सौभाग्यदायिनी – பக்தர்களுக்கு அனைத்துவித மங்களங்களும், ஒளியும் (புகழ்) நிறைந்த நலன்களைத் தருகிறவள் ) “பக” என்றால் ஆறுவிதச் செல்வங்களின் கூட்டைக் குறிக்கும் என்கிறது அக்னிபுராணம். அருட்செல்வம், வலிமை, புகழ், பொருட்செல்வம்அருட்செல்வம், ஞானம், வைராக்கியம் என்பன அவை. இவையெல்லாம் சேர்ந்த நலன்களை அம்மை நமக்குத் தருபவள் என்கிறது இந்த … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 116

116. பத்ர மூர்த்தி: ( भद्रमूर्तिः – மங்களமான உருவத்தை உடையவள் ) எல்லாவித மங்களமான ஜட, ஜீவப் பொருட்களுக்குள்ளும் அன்னையே குடிகொண்டிருப்பதால், அவளே மங்களங்களின் இருப்பிடமும் ஆகிறாள். மங்களம் தங்கும் மனையும் உருவதும் சங்கரன் தேவிநம் தாயவளே – துங்கமிகு சங்கமத் தாவர தத்துவம னைத்திலும் பொங்குவாள் மங்களமாய் புக்கு துங்கம் – உயர்வு; … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 115

115. பத்ரப்ரியா ( भद्रप्रिया – மங்களத்தில் விருப்புள்ளவள் ) “பத்ர” என்பதற்கு காப்பாற்றுபவர், ஶிவம், மங்களம், சிறந்தது, மற்றும் யானைகளில் ஒரு வகை என்று பலவிதங்களில் பொருள் கொள்ளலாம். அனைத்தும் அவளாகவே இருக்கும்போது, அனைத்தும் மங்களமாகவேதான் இருக்கமுடியும். தக்ஷனைக் கொல்ல ஶிவனுடைய ஜடைமுடியிலிருந்து உருவாகி வெளிவந்த வீரபத்திரன், அதை முடித்ததும், ஶாந்த மூர்த்தியாக “பத்ர” … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 114

114. பவாரண்ய குடாரிகா ( भवारण्यकुठारिका – ஸம்ஸாரமாகிய காட்டிற்கு கோடாலி போன்றவள் ) பவம் என்பது ஸம்ஸாரம் என்ற பொருளில் இங்கு சொல்லப்படுகிறது. அம்பாளுடைய ஞானம் தோன்றிவிட்டால், அந்த ஸம்ஸாரபந்தம் அற்றுவிடும் என்று பொருள். ஸம்ஸாரபந்தம் என்னும் அடர்ந்த காடு இருளும், கொடிய விலங்குகளும் நிறைந்தது. இவற்றிலிருந்து வெளிவர, ஞானமெனும் ஒளி ஏற்பட வழியுண்டாக்கும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 113

113. பாவநாகம்யா ( भावनागम्या – பலவித பாவனைகளினால் அடையக்கூடியவள் ) அன்னையின் அருளை பாவனையான தியானத்தினால் அடையலாம் என்கிறது இந்த நாமம். தியானத்திலும் கூட மந்திர ஒலி வடிவாகவும் ( குரு மூலமாக ), பொருள் வடிவாகவும் என்று இரண்டு வழிகள் சொல்லப்படுகின்றன. அன்னையை கர்ம மார்க பாவனையும் செய்து, மனதைத் தூய்மையாக்கி, அடையலாம். … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 112

112. பவானீ ( भवानी – “பவ” என்றால் மஹாதேவர், ஸம்ஸார ஸாகரம் என்று பொருள். மஹாதேவருடன் ஸம்ஸார ஸாகரத்தில் அன்னை ஆழ்ந்துள்ளதால், அவளுக்குப் பவானீ என்று பெயர்) பாஸ்கரராயர் உரையில், பவ என்றால் மஹாதேவர், ஸம்ஸார ஸாகரம் மற்றும் மன்மதன் என்று பொருள் சொல்லப்படுகிறது. இங்கெல்லாம் ஜீவனைத் தருவதால் அன்னைக்குப் பவானீ என்று பெயராம். … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 111

111. பிஸதந்து தநீயஸீ ( बिसतन्तुतनीयसी – தாமரைத் தண்டிலிருக்கும் நாரின் இழைபோல் மெல்லியவள் ) 90-வது நாமம் முதல் 111 வரை (இந்த நாமம் வரை) ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கும் அதிசய ஆன்மீக சக்திகள். புனிதாக்ஷரங்களும் பிறகு ஆன்மீக ஸ்தானங்களும், மனோசக்திகளும் விளக்கப்பட்டன. இந்த நாமத்தின் வாயிலாக அம்மையின் நுண்மை விளக்கப்படுகிறது. ஶ்ருதியில் சொல்லியிருப்பதுபோல், … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment