86. கண்டாத: கடிபர்யந்த மத்யகூட ஸ்வரூபிணீ ( कण्ठाधः कटिपर्यन्त मध्यकूट स्वरूपिणी – கழுத்திலிருந்து, இடை வரையிலுள்ள பஞ்சதஶி மந்திரத்தின் இடையாறு அக்ஷரங்களைக் (ஹ ஸ க ஹ ல ஹ்ரீம் ) கொண்டதும், நடுபாகமுமான காமராஜ கூடத்தை தன்னுடைய ரூபமாக உடையவள் )
இச்சாஶக்தி பாகமான மத்யகூடம், தொண்டையிலிருந்து, நாபி வரைக்கும் பகுதியிலான ஸ்தூல வடிவத்தால், ஸூக்ஷ்ம வடிவிலான பஞ்சதஶி மந்திரத்தின் இடைப்பாகத்தைக் குறிக்கிறது. அண்டத்தைப் படைக்கும் விருப்பை அம்மை ஹ்ருதயஸ்தானத்தில் கொண்டுள்ளாள். ஹ்ருதயமே விருப்பங்களை உண்டாக்குகிறது. அம்மையோ ஹ்ருதயங்களை ஆள்பவள். மூளையே செயல்படாவிட்டாலும், ஹ்ருதயத் துடிப்பு உள்ளவரை இயக்கம் உண்டல்லவா? அம்மையை ஹ்ருதயபூர்வமாக உணர்பவர்கள் பிறப்பிறப்பு சுழற்சியிலிருந்து விடுபடுகிறார்கள் என்பதையும் உணர்த்தும் நாமம் இது.
கண்டம் முதலாய் கடிவரைத் தூலமாய்
கொண்டனள் தாயிடைக் கூட்டினில் – அண்டம்
படைக்கும் விருப்பை பரைதன் உளத்தில்
உடைத்திட ஏற்ற உரு
கண்டம் – தொண்டை; கடி – இடை; தூலம் – ஸ்தூலம்; இடைக்கூட்டு – மத்யகூடம்