125: ஶர்மதாயினி ( शर्मदायिनी – ஸுகத்தை/மகிழ்வு/உவகை கொடுப்பவள் )
எது சுகத்தை, மகிழ்வைக் கொடுக்கிறதே அதுவே “ஶர்ம” என்றாகும். அன்னை தன் பக்தர்களுக்கு சுகத்தைத் தருவதால், ஶர்மதாயினி என்றழைக்கப்படுகிறாள். உள்ளம் அமைதியுடன் அமைந்தால், உவகை மீதுறும். உவகை மீதுற அதுவே நிலைத்த மகிழ்வுக்கு ஆதாராமாகும். தேவி பாகவதமும் “ஸுகம் ததாதி பக்தேப்ய: தேனைஷ ஶர்மதாயினி” உண்மையான மகிழ்ச்சி என்பது நியமத்தோடு கூடிய வாழ்விலும், நிலைத்த பக்தியிலும், தன்னலமற்று பிறருக்குச் சேவை செய்வதிலும், அன்னையின் சரணத்தில் தஞ்சமடைந்திருத்தலிலும்தான்.
உள்ள அமைதியே உண்மைச் சுகந்தரும்
அள்ளித் தருவதும் அன்னையளி – ஒள்ளொளி
தந்ததைக் கூட்டுவள் தாய்சர் மதாயினி
அந்தமே இல்லா அருள்
அளி – தயை/கருணை; ஒள்ளொளி – பிரகாசம்
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!