ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 150

150. நிரவத்யா ( निरवद्या – குற்றங்களேதுமில்லாதவள் )

‘அவித்தை’ என்னும் அறியாமையின் காரணமாக ‘அவத்யமென்னும்’ குற்றம் ஏற்படுகிறது. ஞான முழுமுதலாக இருக்கிற அன்னையிடம் அவித்தையும் அதன் காரணமாகக் குற்றங்களும் இருப்பதற்கு இடமேயில்லை; தவிரவும் ‘அவத்யம்’ என்பது ஓரு நரகத்தின் பெயர். அன்னை தன்னுடைய பக்தர்களை அந்த நரகத்திலிருந்து விடுவிப்பதால் அவளுக்கு ‘நிரவத்ய’ என்று பெயர். ஶ்ருதி வாக்கியமான ‘நிரவத்யம் நிரஞ்ஜனம்’ என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

பாவமும் குற்றமும் பற்றிடாத ஞானமெனும்
வாவியே அன்னை வசிக்குமிடம் – தேவியே
பத்தர் அவத்தியப் பாழ்நரகம் வீழாது
முத்தி யளிக்கும் முதல்

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s