193. துஷ்டதூரா ( दुष्टदूरा – துஷ்டர்களால் நெருங்க முடியாதவள் )
அசத்தான செயல்களில் ஈடுபட்டு சத்தான சுகத்தை அடைய விழையாதவர்கள் துஷ்டர்கள். இவர்கள் கனியிருப்பக் காய் கவர்பவர்கள். துஷ்டத்தனத்தினால் விளையும் துன்பங்களில் உழன்றுகொண்டே அவற்றிலிருந்து சற்றும் வெளியேவர முயலாதவர்கள்; அத்தகையக் கீழ் நிலையில் உள்ளவர்களுக்கும் அன்னையின் அருளுக்கும் வெகுதூரம். அவர்களால் அன்னையை நெருங்குவது இயலாததாகிறது. அன்னையின் அருளுக்குப் பாத்திரமானவர்களையும் துஷ்டர்கள் நெருங்குவதற்கு அனுமதியாள்.
சத்தாம் சுகம்விட்டு சக்கையாம் துன்பத்தில்
நித்தமுழல் துட்டர் நெருங்கவிடாள் – பத்தராய்
முத்தியில் நாட்டம் முனைபவர் கட்குமன்னை
அத்திறமே செய்வாள் அணைத்து
திறம் – வகை;
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!