206. ஸர்வ தந்த்ர ரூபா ( सर्वतन्त्ररूपा – அனைத்து வழிமுறைகளாகவும் இருப்பவள் )
அனைத்துக் கருவிகளின் ஆன்மாவாகவும், இயக்கமாகவும் உள்ளவள், அவற்றை இயக்கும் வழி முறைகளுக்கு அதிபதியாகவும், அவைகளாகவேயாயும் இருப்பாளன்றோ? இயந்திரங்களை இயக்கும் வழி முறைகளாகவும், ஆணைகளின் நிரலாகவும் இருப்பவள் அன்னை. இயந்திரங்களை இயக்கும்போது எதிர் நோக்காத சிக்கல்களையும், அவற்றால் நிகழக்கூடிய ஆபத்துக்களையும், விலக்குகிற, நீக்குகிற தந்திரம், உபாயம், மாற்று வழி முறைகள, ஆணை நிரல்கள் என்று எல்லாமாகவும் இருக்கக்கூடிய தந்திரங்களாக அன்னையே இருக்கிறாள். தவிரவும் அனைத்துத் தந்திரங்களும், அன்னையை அனைத்துமென நிறுவுவதாலும், அன்னையின் உடலின் அவயங்களாக இருப்பதாலும், அவள் இந்நாமத்தால் அழைக்கப்படுகிறாள்.
தந்திரம னைத்துமாய் தாயே இருப்பளி
யந்திரம னைத்துமி யங்கிட – அந்தரி
வந்துறும் ஆபதம் மாற்றியே சந்ததம்
தந்தருள் வாளே தயை
ஆபதம் – ஆபத்துக்கள்; அந்தரி-அன்னை உமை