231 மஹாபைரவ பூஜிதா ( महाभैरवपूजिता – மஹாபைரவரால் பூஜிக்கப்பட்டவள் )
பைரவர் என்ற நாமம், பரணம் (ஸ்ருஷ்டி), ரமணம் (ஸ்திதி), வமனம் (ஸம்ஹாரம்) என்ற மூன்றின் முதல் எழுத்துக்களால் உருவான நாமம். பரமஶிவனாரே முத்தொழிலுக்கும் அதிபதியாவதால், அவரே பைரவர் என்றறியப் படுகிறார். அன்னை மஹாபைரவரால், மஹாயாகக்ரமத்திலே சிதக்னி குண்டத்தில் ஆஹுதி செய்யப்பட்டு லலிதாம்பிகையாக வெளியானதை லலிதோபாக்யானம் விரிவாகச் சொல்கிறது. மஹாபைரவர் பூஜிப்பது பைரவியையே! அவளும் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய செயல்களில் இருக்கிறாள் என்பதே பைரவி என்கிற நாமம். இது பைரவரும் பைரவியும் வேறில்லாத அபேத ஸ்வருபங்களே என்பதையும் குறிக்கிறது,.
ஆக்கியும் காத்தும் அழித்தும் செயலாற்றும்
வாக்கியைப் பங்கர் மகாபைரவர் – நீக்கமற
எங்குமுள அன்னையை ஏத்தியவர் பூசிப்பார்
துங்கமெனப் போற்றித் துதித்து
வாக்கியை – பார்வதி; துங்கம் – உயர்ச்சி, பெருமை, பரிசுத்தம்