கற்பக அந்தாதி

எப்போதோ எழுதிய கற்பக அந்தாதி வெண்பா! எடுத்துப்பார்க்கையில் எத்தனையோ பிழைகள். மோனைத் தொடை முற்றிலும் தொலைந்திருந்தது..! அந்தாதியில் உள்ள விதிப்படியே முதற்பாட்டின் முதற் சீர்/சொல்/எழுத்து இறுதிப் பாடலில் இறுதி சீர்/சொல்/எழுத்தாக வந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. இதுபோன்ற பிழைகளையெல்லாம், செப்பமிட்டு மீண்டும் பதிவு செய்திருக்கிறேன்.
பி.கு: காப்புச் செய்யுள் அந்தாதிக்குள் அடங்காது

காப்புச் செய்யுள்:

ஓங்குபுகழ் மாமயிலை ஊர்கற் பகக்கோட்டத்(து)
ஊங்கியருள் பாலிக்கும் உத்தமனே – நீங்காமல்
வீங்காடும் ஞான விநாயகா! அந்தாதி
ஈங்கிசைக்கக் காப்பருள்வாய் ஈண்டு

அந்தாதி:

கற்றுன் கழல்பற்றக் காக்கின்ற கற்பகமே
நற்றமிழால் பாடவுன்னை ஞானம்தா – பற்றறுக்கும்
பொற்பேநீ பைந்தமிழாய்ப் பூத்தெமைப் பாலித்து
வற்றா தருள்செய்ய வா ……………………………………………….1

வாக்கருள்வாள் வாணியள் வற்றா வளமருள்வாள்
பூக்கமலத் தேயுறையும் பொன்மகள் – தீக்கழற்கைத்
தேக்கியோன் தன்தேவி தேயமருள் கற்பகமுன்
தாக்கமென்னுள் தங்கத் தா ………………………………………….2

தாயே உனையன்றி தாரணியில் யாருண்டு
சேயேனுக் காதாரம் செய்மகா – மாயேகாப்
பாயே பரிந்துள்ளம் பற்றிக்கண் பார்த்தருள்
நேயே பராபரி நீ ………………………………………………………….3

நீயே எனக்குள்ளே நித்தம் இருந்தாள்வாய்
நேயேநின் சீர்கழல்கள் நெஞ்சிலே – தீயேபோல்
நோயே மனம்பட்டு நோகாமல் செய்திடும்
தூயே துடைப்பாய் துயில் ………………………………………………4

துயிலாத் துரங்கம் துலக்கும் துணையே
அயிலோனின் அன்னை அழகே – ஒயிலாய்
மயிலின் உருவில் மகேசரையர்ச் சிக்கும்
எயிலாம் பராசக்தி யே …………………………………………………..5

ஏகன் அநேகனாம் ஈசர்க்கும் சக்தியே
ஆகமம் போற்றிடும் அன்னையே! – தேகத்தில்
போகமும் மோகமும் போக்குவாய்; புக்தியாம்
தாகம்தீர்! வாரியாய் தா ………………………………………………….6

தாவென வேண்டாது தந்தேன் எனவருள்வே
தாவெனும் கற்பகத் தண்பொழிலே – பாவெண்ணி
நாவென்றும் உன்புகழை நன்கிசைக்கப் பாடுமே
காவென்றும்! நீகருணைக் கா ………………………………………….7

காபாலி என்றே கடிதேகி வந்தேனென்
காபாலி தேவனுடன் காணவுன்னை – நீபாலி
மாபாதம் தந்துன்றன் மங்காப் புகழையென்
பாபாடச் சொல்லில் பதம் …………………………………………………8

பதமுற்றப் பத்தியால் பாடவுனைத் தந்தாய்
பதமும் பொருளும் பரிந்து – நிதமற்
புதம்செய்யும் கற்பகப் புண்ணியப் பேறே!
அதன்றோ அடியேற்கு அருள்? ………………………………………….9

அருள்தந்தாய் பாப்பூவால் அன்னையுனைப் பாட
இருமையினி யுண்டோ எனக்கே? – கருதும்
மருவில்லந் தாதிப்பா மாலையை ஏற்றென்
கருத்தில்மா சில்லாத கற்று ……………………………………………..10

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Poems (கவிதைகள்). Bookmark the permalink.

2 Responses to கற்பக அந்தாதி

 1. தெவிட்டாத தேன்சுவைசேர் செந்தமிழில் என்றன்
  செவிக்கினிய அந்தாதி செய்தீர் – கவிப்பெருக்கால்
  கற்பகத்தாய் தன்பொற் கழல்தொழுதீர் அன்பின்
  அற்புதத்தால் கொண்டீர் அருள்.

  – இமயவரம்பன்
  https://solvelvi.blogspot.com

  • ashoksubra says:

   நன்றி இமயவரம்பன்.. உங்களுடைய அழகான வெண்பாவை இன்றுதான் கண்டேன். அன்னையருள் இருந்தால் ஆகாததுண்டோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s