263. ஸர்வாவஸ்த்தா விவர்ஜிதா – ( सर्वावस्थाविवर्जिता – அனைத்து அவஸ்தை நிலைகளையும் கடந்தவள் )
ஜீவர்கள், யோகியர்களாகி, துரியாவஸ்தையும் கடந்து, அவை இல்லாமல் இருக்கின்ற, அவஸ்தை ரஹிதமாக இருக்கும் பரப்ரம்ஹத்துடன் கலக்கும் நிலையை துரியாதீதம் என்று சொல்வது வழக்கம். இதுவே “நிலை”யென்ற குறியீடுகளையெல்லாம் கடந்த இறுதிக் கட்டம். மனத்தின் விகாரங்களே அவஸ்தைகள்; ஏனெனில் மனமோ மாறுபடும் தன்மையது. அவை வருவதும் போவதும் அவள் சித்தம். பராசக்தியோ ஶுத்த சைதன்யம். அதனால் அவள் எல்லா அவஸ்தைகளுக்கும் அப்பாற்பட்டவளாக, இருக்கிறாள்.
அவத்தை அனைத்தும் அகன்ற அதீதம்
சிவமும் அணந்திடு சித்தாம் – பவத்தை
அவிக்கும் பரையே அமலை, துரியக்
குவியமாம் யோகியர்க் கொம்பு
கொம்பு – பற்றும் கோல்
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!