314. ராகேந்துவதனா ( राकेन्दुवदना – முழு நிலவினைப்போன்ற முகமுடையவள் )
பௌர்ணமி நிலவினைப்போல் வட்டமாக, முழுமையாக, குறையில்லா குளிரொளியோடு, கண்கள் பார்க்க இனிமையாக உள்ளவளே அன்னை. நிறைநிலவைப் போன்ற முகலாவண்யம் எவரிடத்தில் உள்ளதோ அவர்களிடம் அன்னையே குடிகொண்டிருக்கிறாள்.
முழுநில வைப்போல் முகமுடைத் தேகாண்
அழகொளி தண்கதிராள் அன்னை – விழுமம்
ஒழுகும் வதனத்தாள் ஒண்மையோ டின்பம்
பழகும் இயல்பாள் பரை
விழுமம்-தூய்மை; ஒண்மை – விளக்கம், இயற்கை அழகு
Like this:
Like Loading...
Related
About ashoksubra
A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate!
So, you have figured me out right? I hope not!