ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 322

322. காமகலாரூபா ( कामकलारूपा – காமகலை வடிவினள் )

காமேஶ்வரனும், காமேஶ்வரியும் ஒன்று சேர்ந்துள்ள வடிவமே காமகலாவாம். எந்திர உருவிலே “ஈ” என்பது சக்தியின் வடிவம்; பிந்துவானது சிவ வடிவம். இரண்டும் சேர்ந்ததே காமகலா எனப்படுவது. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு புருஷார்த்தங்களில், இன்பமான காமத்தினாலேயே ப்ரபஞ்ச வாழ்வே நடக்கிறது. இச்சைகள் இல்லையென்றால் இயக்கமில்லை, இயங்காததொன்றும் இகத்தில் இல்லை; இச்சைகளை நிறைவேற்றிக்கொள்வதால் ஜீவர்கள் மனப்பரிபக்குவம் அடைந்து இகத்தின் நிலையாமையை உணர்ந்து பரத்தை நோக்கி முன்னேறுகிறார்கள். காமகலா வடிவினளான தேவியே அக்கருவியாக இருக்கிறாள்.

இச்சைகள் இன்றேல் இயக்கங்கள் இல்லையெனும்
விச்சையைக் காமகலா வேதருவாள் – நச்சுதலை
எச்சமின்றி இவ்வுலகில் இன்பமாக்கி ஏற்றிடுவாள்
உச்சத் துயர்த்தும் உமை

விச்சை – அறிவை; நச்சுதல் – விருப்பங்கள்; எச்சம் – மிச்சம், மீதி; உச்சம் – சிறப்பு (பரஸ்திதி)

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a comment