342. க்ஷேத்ரேஶீ ( क्षेत्रेशी – க்ஷேத்திரத்தை ஆள்பவள் )
புண்ணியக் க்ஷேத்திரங்களுக்கெல்லாம் அதிபதியானவள். மற்றொரு விதமாக சொல்வதெனில், ஜீவர்களில் தூய்மையாக இருந்து, வழிபாடு, யோகம், ஜபதபங்களால் நெறியாக வாழ்பவர்களின் ஶரீரங்களாகிய க்ஷேத்திரங்களை ஆளுபவள் அன்னை எனலாம். இன்னொருவிதமாகச் சொல்வதென்றால் க்ஷேத்திரங்களையெல்லாம் ஆளுகின்ற ஈசனுடைய மனைவி என்றாகிறது. ஆனால் அன்னையை அவ்வாறெல்லாம் வரையறைகளுக்குள் கொண்டுவருவது பொருந்தாதவொன்றே. அண்டங்களைப் படைத்துக் காத்து மாயையினால் பலவித ஜீவர்களாய் தோன்றி, இருந்து மறைவதென்னும் செயல்களெல்லாமும் அவளுடையவைதாமே? க்ஷேத்திரத் தொகுப்பாம் அண்டாண்டங்களையெல்லாம் அவளே ஆள்கிறாள் என்பதைக் குறிக்கும் நாமமிது.
எல்லையிலா அண்டவெளி எல்லாமும் அன்னையாட்சி
நல்லுயிர்க்கெல் லாமவளே நாயகி – எல்லோர்க்கும்
நாதனாம் நம்மீசன் நன்மனையாம் என்றெல்லாம்
ஓதவுயர் நாமமென்று உள்ளு