Monthly Archives: February 2020

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 435

435. ஶாம்பேய குஸுமப்ரியா ( चाम्पेयकुसुमप्रिया – புன்னாகப்/சம்பகப் பூவில் விருப்பமுள்ளவள் ) வானத்துத் தாரகைகளும், பூமியில் மலர்களும் அன்னையின் அளவிறந்த ஆனந்த நிலையை அனுதினமும் நமக்கு உணர்த்துகின்றன. புஷ்பங்களில் பாரிஜாதம், சம்பகம், மல்லிகை, முல்லை, சம்பங்கி போன்ற பல மணமுள்ளவை இருந்தாலும், சம்பகப் பூ சிறந்த ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. அழகும், மணமும் ஒருங்கே … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 434

434. சந்தனத்ரவ திக்தாங்கி ( चन्दनद्रवदिग्धाङ्गी – நன்கரைக்கப்பட்ட சந்தனக் குழம்பால் உடல் முழுக்கப் பூசப்பட்டவள் ) நன்கு மைய அரைக்கப்பட்ட சந்தனக் குழம்பால் பூசப்பட்ட உடலை உடையவள் அன்னை. மங்கள நிகழ்ச்சிகளில் வரவேற்கும் முகமாக, உபசாரக் கிரமமாக சந்தன நீர் தெளித்தல், மற்றும் அரைத்தக் குழம்பைப் பூசுதல் போன்றவை செய்யப்படுவதைக் கண்டிருப்போம். தவிர பூஜைகளில் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 433

433. மதபாடல கண்ட பூ: ( मदपाटलगण्डभूः – பேரானந்தத்தில் பாதிரிப் புஷ்பங்களைப்போல் வெண்சிவப்பு நிறக் கன்னங்களை உடையவள் ) ஆனந்தக் களிப்பில் அன்னையின் கன்னங்கள் மெருகில் பாதிரிப் (பாடல) புஷ்பங்களைப்போல் வெண்சிவப்பாக இருக்கும்.  மதம் என்பது கஸ்தூரியைக் குறிக்கும். அது கஸ்தூரி மானின் நாபியிலிருந்து எடுக்கப்படும் ஒரு வாசனைப் பொருள். அந்த கஸ்தூரியையும், செந்நிற … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 432

432. மதகூர்ணிதரக்தாக்ஷீ (मदघूर्णितरक्ताक्षी –  பேரானந்தத்தில் சுழல்கின்ற சிவந்த கண்களை உடையவள் ) சென்ற நாமத்தில் கூறப்பட்ட அன்னையின் எல்லையிலா இன்பக் களிப்பிற்கு, ஆனந்தத்திற்கு இங்கு சாட்சியாக அவளுடைய இரத்தச் சிவப்பேறிய, சுழலும் கண்கள் சொல்லப்படுகின்றன. மதுபானம் அருந்துகிறவர்களுக்கு கள்வெறியில் கண்கள் இரத்தச் சிவப்பேறி சுழலும். அது அவர்கள் போதையின் ஆனந்தத்தில் ஏற்படும் வெளிப்பாடே. அவ்வேளையில் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 431

431. மத ஶாலினீ – (मदशालिनी – ஆனந்தமொன்றையே உணர்ந்த நிலையில் ப்ரகாஸிப்பவள் ) ஆனந்தக் களிப்பொன்றை மட்டுமே உணர்ந்த நிலையில் இருப்பவள் அன்னை என்கிறது இந்த நாமம். அன்னை தன் எல்லையிலா விரிவில், இளமையில், அண்டாண்டங்களைப் படைத்துக், காத்து, ரக்ஷிக்கும் வேலையில் பெருமையும், களிப்பும் கொள்கிறாள்; இது மனிதர்கள் கொள்ளும் கருவமும், அதனால் ஏற்படும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 430

430. நித்யயௌவனா ( नित्ययौवना – என்றும் இளமை குன்றாதவள் ) தோற்றமும் அழிவுமில்லா தொன்மைப் பரபொருளான அன்னைக்கு வளர்ச்சியும் தேய்வுமென்றும் இல்லை. காலம் தொடாத, காலத்தால் மாறாத இளமையுள்ளவள். நித்ய என்றதனால் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் அவள் இளமைமாறா எழிலளாகவே இருக்கிறாள் என்பதையே இந்த நாமம் குறிக்கிறது. தோற்றம் அழிவில்லா தொன்மைப் பரம்பொருள் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 429

429. நிஸ்ஸீம மஹிமா (निःसीममहिमा – எல்லையிலா/எண்ணவியலா பெருமைகளைக் கொண்டவள் ) அன்னை அளவிறந்த, எல்லையில்லா பெருமைகளையும், மகிமைகளையும் கொண்டவள். மஹிமை என்ற சொல்லுக்கு வலிமை, பெருமை, பருமை, மகிமை, கம்பீரம் என்று பலவிதங்களில் பொருள் கொள்ளலாம். இவை அனைத்துமே பரம்பொருளாம் அன்னைக்குப் பொருந்துவனவே. அட்டமா ஸித்திகளில் ஒன்றும் மஹிமாவாகும். அன்னையே அளவிறந்தவள், எண்ணுதற்கறியவள், எல்லைகளில்லாதவள். … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 428

428. பஞ்சகோஶாந்தரஸ்திதா (  पञ्चकोशान्तरस्थिता  – ஐந்து உறைகளின் மேல் உறைந்திருப்பவள் ) ஜீவனைச் சுற்றி, அதன் ஆத்மதத்துவத்தை சூழ்ந்து ஐந்து உறைகள் (கோஶங்கள் ) உள்ளன. அவை, அன்னமயம் (ஸ்தூல உடல்) , பிராணமயம் ( ஸூக்ஷ்ம வடிவு, க்ரியா ஶக்தி மிக்க 5 கர்மேந்திரியங்களும், பிராணனும் சேர்ந்தது), மனோமயம் (ஸூக்ஷ்ம வடிவு,  ஞானஶக்தி … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 427

427. அயீ ( अयी – அன்புடன் அழைக்கப்படுபவள் ) தாயையும், சஹோதரிகளையும் அன்புடன் அழைக்கும்போது “அயி” என்ற பதம் சொல்லப்படும். பெண்ணுருவ தெய்வங்களை வேண்டும்போதும் அவ்வாறே. (உம்: அயி கிரி நந்தினி). அய: என்பது மங்களத்தைக் கொடுக்கும், அத்ருஷ்டத்தையும் கொடுக்கும் நாமம். பல மொழிகளில் அன்னையை, சஹோதரி உறவாய் கொண்டாடும் பெண்களை, பெண் தெய்வங்களை, … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 426

426. த்வம் ( त्वं – நீ ஆக இருப்பவள் ) அது என்றது பரம்பொருளாகிய அன்னையை. அவள் என்பது அவளை அன்னை லலிதையாகக் கொண்டாடுவதால். அறியாமை இருளால், ஜீவர்கள் தங்களை அதுவிலிருந்து வேறாக உணர்கிறார்கள். அவர்களுக்காக,  அந்த அது நீயே என்னாமல், அதாக நீ இருக்கிறாய் என்று கூறப்பட்டது. அதிலிருந்து வேறாக உணராதே.. அன்னையாகிய … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment