364. சிதேக ரஸரூபிணீ ( चिदेकरसरूपिणी – ஞானத்துடன் ஒரே ரஸ வடிவினள் )
எப்படி சக்கரையினால் செய்யப்பட்ட பல வடிவங்களிலுள்ள இனிப்புப் பண்டங்களும், இனிப்பு என்கிற ஒன்றையே சுவையாகக் கொண்டுள்ளனவோ, அதேபோல் அன்னை “சித்” ஆகிய ஞானம் என்ற ஒன்றையே தனது பல வடிவங்களிலும் கொண்டுள்ளாள். அதனாலேயே அவள் “சித் ஏக ரஸ ரூபிணீ ) தோற்றங்கள் மாறினாலும் ரஸம், ஞானமாகிய ஒன்றேதான். இன்னொரு விதமாக பார்த்தால், அன்னை வெவ்வேறு உருக்களில் தன்னை வெளிப்படுத்துகிறாள். அன்பு, ஆனந்தம், ரௌத்திரம் என்று பதவித தோற்றங்களிலும், அடிப்படையாக அவளுடன் ஞானமென்னும் ரஸம் இருக்கிறது.. ஞானக்கேடான ஒன்றுமே இல்லை
“தத்”தென்னும் தத்துவத்தின் சத்தாகும் தேவியாம்
சித்தே இரசமொன்றாய் சீர்த்தவளாம் – எத்துணைத்
தோற்றங்கள் ஏற்றாலும் தொல்லவட்கு பேரறிவாம்
ஊற்றின் இரசமொன்றே ஒன்று
தொல் – தொன்மையானவள்