ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 367

367. ப்ரத்யக்சிதீரூபா ( प्रत्यक्चितीरूपा – உள்முகமாக நோக்கச் செய்யும் பேரறிவு வடிவினள் )

பொறிகளுக்கு புலனுகர்வுக்கான, “பராக்”, அதாவது வெளி நோக்கு எளிதானது; அது இயற்கையை ஒட்டியது. தன் முயற்சியின்றி தானே நடப்பது. சித்தம் கட்டுப்பாடின்றித் திரியச் செய்வது.ஆனால் “ப்ரத்யக்” (உள் நோக்கிய பார்வை) என்பது எதிர் நீச்சல் செய்வதுபோன்றது; மிகவும் கடினமானது. தியானம், யோகமுறைகளால் இது சாத்தியமே ஆயினும், கடுமையான பயிற்சியும், நியமங்களும் தேவை அவ்வாறு உண்முகமாகத் திரும்பப் பண்பட்ட மனம் வடிவற்ற “சித்”-தாம் பேரறிவைக் காண்கிறது. அத்தகையப் பேரறிவின் வடிவானவள் அன்னை. அதனாலே அவள் ப்ரத்யக் சிதீ ரூபா எனப்படுகிறாள் இந்நாமத்தில்.

உள்முகமாய் நோக்க உதவிடுவாள் பேரறிவில்
ஒள்ளொளியள் நிட்டை உவந்தளித்து – துள்ளும்
பொறியைந்தும் வேண்டும் புலனுகர்வைக் கட்டும்
அறிவளிப்ப தன்னை அருள்

ஒள்ளொளியள் – பிரகாசிப்பவள்; நிட்டை-தியானம்;

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s