404. பக்தஹார்த்த தமோபேத பாநுமத் பானு ஸந்ததி: ( भक्तहार्दतमोभेदभानुमद्भानुसन्ततिः – பக்தர்களின் ஹ்ருதயத்திலுள்ள அந்தகாரத்தை நீக்குவதில் ஒளிக்கிரணங்கள் அடர்ந்த ஸூரியர்களின் வரிசையாக இருப்பவள் )
கார்த்திகை மாதத்து நிலவினைப்போல் குளிர்ச்சியைத் தருகின்ற அன்னையே, இருளைப்போக்கும் ஸூரியக் கிரணங்களாக, உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞான இருளையும் போக்குகிறாள். தெய்வத்தன்மைய ஜீவர்களின் உள்ளங்கள் உணராதவாறு அஞ்ஞான இருள் மண்டிக்கிடக்கிறது. ஸூரியனின் கிரணங்கள் எவ்வாறு இருளை யார் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் போக்குகின்றனவோ, அதேபோல் தமோ குணத்தினால் இருளும், உடலில் சூடற்ற நிலையும் இருப்பதை, அன்னையாம் ஸூரியக்கதிர்கள் ஒளியும், வெப்பமும்தந்து மாற்றுமாம்.
அன்பர் இதயத்(து) அறியாமை அல்லகற்ற
அன்னையே பாமமாய் ஆகுவள் – பொன்னென
மின்கதி ராவலியாய் மிக்கவளால் வெப்பமிருள்
குன்றிக் குறையும் குளிர்ந்து
ஆவலி – வரிசை