Monthly Archives: March 2020

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 565

565. மித்ர ரூபிணீ ( मित्ररूपिणी – அன்பனும், நண்பனுமான ஸூரியனுடைய வடிவினள் ) உலகிற்குத் தன்னுடைய வற்றாத கொடையான ஒளியைத் தந்து, உயிர்களைப் புரக்கும் நண்பனாக இருப்பவன் சூரியன்; உடுக்கை இழந்தவன் கைபோல் உதவி செய்வதால் அவனே மித்திரனுமாம்! த்வாதஸ (12) சூரியர்களாம் மித்ரன், ரவி, ஸுர்யன், பானு, ககன், பூஷா, ஹிரண்யகர்பன், மரீசி, … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 564

564. ம்ருடானீ ( मृडानी – ம்ருடன் எனப்படும் ஶிவனாரின் மனையாள் ) ஜீவர்களுக்கு கருணையும், ஸுகத்தையும், நயத்தோடு தருவதால் ஶிவபிரானுக்கு ம்ருடன் என்றொரு பெயரும் உண்டு. சம்ஹார மூர்த்தியாகச் சொல்லப்படும் ஶங்கரனாரே அளவில்லா கருணையும் கொண்ட மூர்த்தியாகிக் காக்கவும் செய்வார். அவருடைய ஶக்தியாக, பத்தினியாக அன்னை இருக்கிறாள். அவளும் நமக்கு ஶுகத்தைத் தருவதோடு, காக்கவும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 563

563. முக்யா ( मुख्या – முதலாய் எண்ணப்படுபவள் ) குழந்தைப் பிறக்கையில் முதலில் தோன்றுவது முகம். எனவே அதுதான் முதலாவதாகக் கருதப்படும் முக்கியமாகும். ஜீவன்களில் சிந்திக்கும் மூளை இருப்பதும் முகமல்லவா? அதுவே முக்கியமாகும். ஆக எது முதலாகுமோ அதுவே முக்கியமாகும். ஒரு புது வியாபாரத்தைத் தொடங்கவும் முக்கியம் முதலல்லவா? உலகுக்குக்கே மூலஸ்தானமான ஶ்ரீசக்ரத்தில் ப்ரம்ஹா, … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 562

562. மோஹினி ( मोहिनी – மயங்கச்செய்யும் அழகினள் ) அனைத்துலகங்களையும் மோஹிக்கச் செய்வதால் அன்னையை மோஹினீ என்பர். அமுதத்திற்காகப் பார்க்கடலைக் கடைந்தபோது மஹாவிஷ்ணு, அம்பிகையை அபேத பாவத்தோடு தியானம் செய்து, தானே மோஹினியாக அவதாரம் எடுத்தாராம். ஆதியில் ப்ரம்ஹாவினுடைய தியானத்தினால் அம்பிகை ப்ரக்ருதியாக உருவெடுத்தாள். பின்னர் எடுத்த இரண்டாவது அவதாரம் இந்த மோஹினியவதாரமே. தேவியிடமே … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 561

561. ம்ருகாக்ஷீ ( मृगाक्षी – மானைப்போல் கண்களை உடையவள் ) காதலுற்றப் பெண்கள் தங்கள் நாயகனிடம் காதலைச் சொல்லவும், சொல்லாமலிருக்கவும் முடியாமல், நாணத்தால் மான்களின் மருண்ட பார்வையைப்போல் ஓரிடத்தில் நில்லாமல் கண்களால் நோக்கியும் நோக்காமலும், உயர்த்தியும், தாழ்த்தியும், அங்குமிங்குமென அலைந்து கொண்டுமிருப்பர். அன்னையும் அவ்வாறே! தன்னுடைய உள்ளங்கவர்ந்த ஶிவபிரானோடு காதல் வயப்பட்டவளாகக் கண்களால் அளைந்துகொண்டும், … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 560

560. தாடிமீ குஸுமப்ரபா ( दाडिमीकुसुमप्रभा – மாதுளம் பூவைப்போல் ஒளிருபவள் ) பூத்துக் காய்க்காத மாதுளை மலர் செம்மை நிறம் சிறந்தது. அன்னையின் பூஜைக்கு ஏற்றது. அன்னை அந்த நிறத்தைப்போல ஒளிர்கிறாளாம். அபிராமிபட்டரும், “மாதுளம் பூ நிறத்தாளை” என்று அம்மையின் நிறத்தைப் பாடியிருக்கிறார். தாம்பூலம் தரித்த வாயினளாக அன்னை எப்போதும் இருப்பதால், அதனாலேயே அவளுடைய … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 559

559. தாம்பூல பூரிதமுகி ( ताम्बूलपूरितमुखी – தாம்பூலம் தரித்து நிறைந்த வாயினள் ) மங்கலம் நிறைந்த, குடும்பப் பெண்கள் தாம்பூலத்தை விரும்பித் தரிப்பர். தேவியின் தாம்பூலச் சாறு மேலே தெரித்ததால் வாக்கருள் பெற்றவர்கள் காளிதாஸர், காளமேகம் போன்றவர்கள். பெருங் கவிஞர்களாகவும் ஆனார்கள். அன்னைக்குத் தாம்பூலச் சக்கையைத் துப்பும் பாத்திரத்தை தேவேந்திரனே ஏந்தி நிற்பானாம். தேவியின் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 558

558. கமலாக்ஷ நிஷேவிதா ( कमलाक्षनिषेविता – கமலக்கண்ணனால் ஆராதிக்கப்பட்டவள் ) அன்னையை கமலக்கண்ணனார் நாரணன் மிகவும் சிறப்பாக வழிபடுகிறார். பார்க்கடல் கடையும்போது விஷ்ணு மோஹினியாக மாறுவதற்கு அன்னையை வேண்டியே அவ்வவதாரம் எடுத்து, அஸுரர்களை மாயையால் ஏமாற்றி, தேவர்களுக்கு அமுதத்தை வழங்கினாள். பின்னர் சாஸ்தா அவதாரத்திற்கும் அன்னையின் அருளாலே அவளை வழிபட்டே மோஹினியவதாராம் எடுத்தார் தாமரைக் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 557

557. காலஹந்த்ரீ ( कालहन्त्री – காலனை/காலத்தை அழிப்பவள் ) அன்னையை நினைப்பவரை காலன் அணுகான் என்றும் கொள்ளலாம். அல்லது அன்னைத் தன் பக்தருக்குப் பரகதியைத் தந்து காலம், இடம் என்னும் வரையரைகளிலிருந்து அவர்களை விடுவிப்பாள்.அவர்களைப் பொருத்தவரை காலம் என்பது காலமாகிய ஒன்றாகவே இருக்கும். சிவபெருமானுடைய ஶக்தியாக இருந்து, மார்க்கண்டேயனுக்காக, காலனை மாய்த்தவள் அல்லவா அவள்?  … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 556

556. காத்யாயினி ( कात्यायनी – காத்யாயினி தேவியின் வடிவினள் ) அன்னையின் அனைத்து தேவதைகளின் ஶக்தி வடிவங்களின் தொகுப்பாயுள்ளவள் காத்யாயினி தேவி. ஓட்யாண பீடத்தின் தேவதைக்கும் காத்யாயினி என்று பெயர். கதர் என்ற ரிஷியின் பெண்ணாகத் தோன்றியவள் காத்யாயினி. கோபிகைகள் மார்கழியில் இவளை வழிபட்டு பகவான் க்ருஷ்ணனின் அருள்பெற்று அவரோடு ராஸ லீலைகளில் பங்கு … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment