628. த்ரிமூர்த்தி: ( त्रिमूर्तिः – மும்மூர்த்தி வடிவானவள் )
மும்மூர்த்திகளான ப்ரம்ஹா, விஷ்ணு, ருத்திரன் ஆகிய மூவருமே அன்னையின் வடிவினரே. அதனால்தான் அவர்கள் மூவுலகோராலும் வணங்கப்படுகின்றனர். தேவியின் வழிபாட்டில் திருதியை அன்று மூன்று வயதுள்ள கன்னிப்பெண்ணை த்ரிமூர்த்தியாக வழிபடுவது வழக்கம். குருமண்டல் தியான முறையில் மூன்று ஆதிகுரு தம்பதியர்கள் வடிவிலும், இச்சா, க்ரியா,ஞான என்னும் மூன்று ஶக்திகள் வடிவிலும், ப்ராம்மீ, வைஷ்ணவீ, ரௌத்ரீ என்ற மூன்று தேவிகள் வடிவிலும், ஶாம்பவீ, ஶ்ரீவித்யா, ஶ்யாமளா என்ற மூன்று மந்த்ர ஶக்திகளாகவும் அன்னை அனைத்து மூன்று மூர்த்திகளின் வடிவிலும் இருப்பவள் தேவியே.
முத்தொழி லாற்றிடும் மூவரும்தா யேயெனச்
சத்தியைச் சாற்றும் சதுர்மறை – முத்தியைச்
சித்திக்க மூவடிவாய் சித்வடிவாய் தாயவளே
எத்தனைக் கோலமுற்றாள் ஏற்று?