Monthly Archives: June 2020

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 915

915. ஸ்வபாவமதுரா ( स्वभावमधुरा – இயல்பாகவே இனிமையானவள் ) ஒன்றோடு சேர்வதால் பல/பலர் இனிமையாக இருக்கும்/இருப்பர். அவளோ தன்னிலையிலேயே இருக்கிறாள்; எவ்விதச் சேர்க்கையுமில்லாமல், இயற்கையாக தன் இயல்பிலேயே இனிமை உடைத்திருக்கிறாள். தன்னுடைய இருப்பிடமாக மதுரா நகரைக் (மதுரை) கொண்டவள் (மீனாக்ஷியின் இருப்பிடம்). மற்றொருவிதமாகச் சொல்வதெனில், ஆத்ம ஞானத்தில் உள்ள உத்தமரின் அத்துணைப் பொறுப்புகளையும் அவளே … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 914

914. ஸ்வஸ்தா ( स्वस्था – தன்னிலையில் உள்ளவள் ) துன்பமோ, அதனால் ஏற்படும் மன சஞ்சலமோ ஜீவருள் அவரது நிலையை கெடுக்கும். தன்னிலை கெடுகையில் நோயாகிறது. கெடாத ஜீவருக்கு ஆரோக்கியம் சித்திக்கிறது. ஸத்–சித்–ஆனந்தம் என்று இருக்கும் தேவி, தன்னிலையில் இருப்பதா நோய், அதனால் பயமென்று பீடிக்கப்படாள். “ஸ்வ” எனப்படும் மேலுலுகத்தைத் (ஸ்வம்) தன்னிடமாகக் கொண்டவள். … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 913

913. ஸர்வாபத்விநிவாரிணீ (  सर्वापद्विनिवारिणी – அனைத்து வித ஆபத்துகளிலிருந்தும் உயிர்களைக் காத்துப் புரப்பவள் ) அம்பிகையைச் சரணடைந்தார்க்கு அனைத்து ஆபத்துக்களையும் விலக்கிவிடுவாள்.  மற்ற வகையாக அவளைத் தொழாவிடினும் அவள் நாமத்தை மட்டுமாவது நினைப்பவர்க்கு மலைபோல ஆபத்துக்களையும் அகற்றிவிடுவாள் அன்னை. ஆபத்துக்காலங்களில் அவளது நாம ஸ்மரணையொன்றே ப்ரம்ஹாதி மூவரையும் கூட காப்பாற்ற வல்லது. அன்னைச் சரண்கள் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 912

912. ஸவ்யாபஸவ்யா மார்கஸ்தா ( सव्यापसव्यमार्गस्था – வலம், இடம் மற்றும் இடை வழிகளிலும் உள்ளவள் ) அன்னை லலிதாம்பிகை வலம், இடம் மற்றும் வழியிலும் நமக்குத் துணையாக உள்ளவள். ஸவ்யம், வலத்தையும், அபஸவ்யம், இடத்தையும் குறிப்பவை. ஸூர்ய மண்டலத்திற்கு உத்தரம், தக்ஷிணம், மத்யம் ஆகிய மூன்று வழிகள் உள்ளன. ஸவ்யம் படைத்தலையும், அபஸவ்யம் ஒடுக்கத்தையும், … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 911

911. ஸதாஶிவ குடும்பிநீ ( सदाशिवकुटुम्बिनी – ஸதாஶிவனாரது மனைவி ) எப்போதும் மங்களமான சொல்லும், செயலும், எண்ணமும் கொண்டவர் ஸதாஶிவன். அவரின் இயல்புக்கு ஏற்ற ஒருமித்த இல்லத்தரசி அன்னை. எப்போதும் மங்களகரமானவராய் இருக்கும் ஸதாஶிவப் பத்தினியாக இருப்பவள். மங்களச் சொல்லினர் மாசில் செயலராம்  திங்களைச் சூடினார் தேவியாம் – பங்கினள் அங்கையற் கண்ணி அரன்மனை … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 910

910. ஸோம்யா ( सौम्या  – சந்திரனைப்போல் மனதிற்கு இதமானவள், ஸோம யாகத்திற்கு அர்ஹமானவள் ) பரமஶிவன் உமையோடு கூடியிருக்கும் உருவுக்கும் ஸோமனென்று பெயர். அவரைத் தன்பாதியில் உடையவள் ஆதலால், அவள் ஸோம்யாவென்று அறியப்படுகிறாள். ஸோம யாகத்தில் பங்குகொள்பவள். இதே நாமத்திற்கு ஸௌம்ய என்றும் சொல்லுவதுண்டு. அதுவும் அழகானவள், ஶாந்தமானவள் என்றும் பொருள். சோமனைத் தாங்கியச் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 909

909. ஸாமகானப்ரியா ( सामगानप्रिया – ஸாம கானத்தில் விருப்பமுள்ளவள் ) வேள்விகளில் அவிசினைப் பெறவரும் தேவதைகளின் பெருமைகளைப் பாராட்டும் வகையில் மந்திரங்களை கானமாகப் பாடும் ஸ்வர அமைப்பையும், பாங்கையும் கொண்டது ஸாமவேதம். தேவி வேள்விகளில் பாடப்படும் ஸாமகானத்தை மிகவும் விரும்புகிறாள். அதிலே மிகவும் நிறைவடைபவள். இசையிலே மயங்காத உயிர்களே இல்லை. அன்னையே அனைத்து உயிர்களாகவும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam, ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 908

908. தத்வமர்த்த ஸ்வரூபிணீ ( तत्त्वमर्थस्वरूपिणी – தத், தவம் என்ற பரமாத்ம ஜீவாத்ம ஐக்கியத்தை விளக்குபவள் ) இந்த நாமத்திற்கானப் பொருளைச் சென்ற நாமத்திலேயே ஏறக்குறையச் சொல்லியாகிவிட்டது. தத்வம் என்னும் சொல்லில் உள்ள தத் மற்றும் த்வம் என்ற இரண்டு பதங்களும் மஹாவாக்கியமான தத்வமஸியில் உள்ளவை. முறையே ஶிவன், ஜீவன் என்றும், பரமாத்மா, ஜீவாத்மா … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 907

907. தத்வமயீ ( तत्त्वमयी – தத்துவங்களின் வடிவானவள் ) மேலே சொல்லப்பட்ட அத்துணைவிதமான தத்துவங்களின் வடிவானவளும் அன்னையே. ஸத் என்னும் ஆத்ம, சித் என்னும் வித்யா, ஆனந்தம் என்னும் ஶிவ தத்துவங்களின் ஸமஷ்டியாக அனைத்துத் தத்துவங்களாகவும் இருப்பதால் அன்னையைத் தத்வமயீ என்றும், அவற்றையும் விஞ்சியதால் அவளைத் தத்வாதிகா என்றும் சொல்லலாம். தவிர மஹாவாக்கியங்களில் ஒன்றாம் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 906

906. தத்வாதிகா ( तत्त्वाधिका – தத்துவமெல்லாம் கடந்தவள் ) பிரபஞ்சத் தோற்றத்திற்குக் காரணமான தத்துவங்களை 25, 36, 51, 94 என்று பலவித எண்ணிக்கைகளில் சொல்வர். பிரளயம் வரை நிலைத்திருப்பவை. அப்போது அவை வெவ்வேறு தோற்றங்களைப் பெறும். இவையெல்லாம் ஒவ்வொரு ஶ்ருஷ்டியிலும் தோன்றி, ஸ்திதியில் பலவித மாற்றங்களை அடைந்துப் பின் பிரளயத்தில் அழியும். அம்பிகைக்கோ … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment