ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 877

877. நிராலம்பா ( निरालम्बा – பற்றுக் கோடேதும் இல்லாதவள் )

அன்னை பராஶக்தியேதான் அனைத்திற்கும் ஆதாரமாகவும், பற்றுக்கோடாகவும் இருக்கிறாள். அவளுக்கு வேறொன்று பற்றுக்கோடாக இருக்காது, இருக்குமென்று நினைப்பதும் பொருந்தாது. ஒருவரது வினைகள் அவரது ஜீவனை உடலுடன் பிறவிகள் தோறும் பிணைக்கின்றன. அந்த உடல் தாங்கிய ஜீவனும் வேறொன்றையோ அன்றி பலவற்றையோ பற்றாகக் கொள்கிறது. அத்துணை வினைப்பிடிப்புகளும் நீங்கிய ஒரு ஜீவன் பரத்தோடு ஒன்றாகி, அதுவும் பற்றுக்கோடு இல்லாமல் ஆகிறது.

ஆதாரப் பற்றென்று அன்னையை ஓதுமறை

வேதாக மங்கள் விரித்துரைக்கும் – வேதாவோ

போதாவாய் பற்றில்லாப் பூரணமாம் ஆதியவள் 

பாதாரம் பற்றவறும் பற்று

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in Lalitha Sahasranamam. Bookmark the permalink.

Leave a comment