964. பந்தூக குஸுமப்ரக்யா ( बन्धूककुसुमप्रख्या – மஞ்சள் நிற வேங்கைமர பூ நிறத்தவள் )
வங்க தேசத்தில் காணப்படும் வேங்கை மரத்தின் மஞ்சள் இழையோடிய சிவப்பு நிறமுள்ள புஷ்பத்தைப்போன்ற நிறமுள்ளவள் அன்னை. அன்னை அனைத்து நிறங்களாயும் இருப்பவளே! ஆனாலும் அவளது காரண வடிவைவிட கார்யவடிவே இப்ப்ரபஞ்ச ஶ்ருஷ்டிக்கும், இயக்கத்துக்கும் காரணமாக உள்ளதால், அவளது ரஜோ குணப்ரபாவமே பெரிதாகப் பேசப்படுவது. அதன் நிறம் சிவப்பு. அதனால் அன்னையின் நிறத்தைக் காஷ்மீர குங்குமப்பூ நிறத்துக்கு ஒப்பாக முன்பும், இப்போது வேங்கை மர புஷ்பத்தின் சிவப்புக்கும் ஒப்பாகக் கூறப்படுகிறது.
வங்கத்தின் வேங்கைப்பூ மஞ்சட் சிவப்பைப்போல்
அங்கநிறம் கொண்டவள் அன்னைபரை – துங்கமுற
சிங்கத்தில் ஏறியவள் சீற்றமுடன் செற்றசுரர்
பங்கமுறக் கொன்ற பகர்
துங்கம்–வெற்றி; பங்கம்–கேடு, துண்டு; பகர்–ஒளி