About

இவ்வலைப்பூவை – “திருக்குறள் – ஒரு மறு ஆய்வு” என்ற தலைப்போடுத்தான் தொடங்கினேன். பிறகு அதை “அவனிவன் பக்கங்கள்” என்று மாற்றிவிட்டேன், ஏனெனில் இவ்வலைப்பூவில் மற்றவற்றையும் பொருள்வாரியாகப் பிரித்து எழுதிவிடலாமே என்று தோன்றியதால். ஆனால் பெரும்பாலும் இங்கு “குறளின் குரல்” என்ற தலைப்பிலே தினமும் ஒரு குறளுக்குப் பொருள் எழுதிவருகிறேன். அதற்கான காரணம்?

ஒன்றைப் பலரும் பலகாலமாகப் பாராட்டி வருகிறார்கள், பலமொழிகளில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்,  பலரும் உரைகள் எழுதியிருக்கிறார்கள், பட்டிக்காடுகளிலிருந்து, பட்டணங்கள், பல தேசங்களைக் கடந்து அறிஞர்களும், எழுத்தாளர்களும், பட்டிமன்ற பேச்சாளர்களும் மேற்கோள்களாகப் பல குறள்களையே எடுத்துக் கையாளுகிறார்கள்…! இதை நாமும் முழுவதுமாகப் படிப்போமே, நம் வாழ்வைப் புரட்டிப்போடுகிறதா என்று பார்ப்போமே என்று விளையாட்டாக ஆரம்பித்த ஒன்று தான் என்னுடைய ஆய்வுப்பயணம்.

எனக்கு மனதில் பிடித்த இரண்டு குறள்கள், “எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும்…” என்ற குறளும், “எப்பொருள் எத்தன்மைத்தாயினும்…” என்ற குறளும். இது வள்ளுவருக்கும் பொருந்தும். கேட்கப்படவேண்டிய சில கேள்விகள்

 • வள்ளுவரின் எல்லா கருத்துக்களுமே எல்லா காலங்களுக்கும் பொருந்துமா?
 • வள்ளுவரின் முப்பால், 133 அதிகாரங்கள், அதிகாரத்துக்குப் பத்துக்குறள்கள் என்ற முறைமை சரியானதா?
 • எல்லா அதிகாரங்களில் பத்துக்குறள்களுக்கான செய்திகள் இருந்ததா? அல்லது 10 என்றுவிட்டோமே என்று சொன்னதையே திருப்பிச் சொன்னதோ, அல்லது பொருந்தாமல் சொன்னதோ, அல்லது முன்சொன்னதிற்கு முரணாகச் சொன்னதோ நிகழ்ந்ததா ?
 • அதிகமாகச் சொல்லக்கூடிய தலைப்புகளுக்குப் பத்துக் குறள்கள் என்பது ஒரு நெருக்கலாக அமைந்ததா?
 • வள்ளுவர்காலத்திலோ, அல்லது பின்வந்தவர்களோ அவரை மறுத்துச் சொல்லக்கூடிய செய்திகள் இருந்தனவா, அவரை மேற்கோளாகக் கொண்ட செய்திகள் யாவை?
 • குறள்களில் சொற்களுக்காக சொல்லவந்ததை இழந்த குறள்கள் என்ன?
 • குழம்பிய, குழப்பிய உரைகள், குருட்டாம்போக்கில் பிறரை அப்படியே எடுத்துக் கையாண்ட உரைகள் என்ன?

போன்ற பல என்ன, எதற்கு, யாவை, ஏன், எப்படி போன்ற கேள்விகளுக்கு விடைகள் தேடுவதும், கூடியவரைக்கும், பாராட்ட வேண்டியவற்றை பாராட்டியும், மறுக்க வேண்டியவற்றை மறுத்தும், உண்மையான ஆய்வு உரை எழுதவேண்டும் என்கிற அவா ஒன்றே இவ்வலைப்பூ பிறக்கக் காரணம்.

இங்கு ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் மூலக்குறளின் பதவுரை மற்றும் பொழிப்புரை, ஆய்வுச் சிந்தனைகள், மற்ற இலக்கியங்கள், பழமொழிகள் இவற்றிலிருந்து ஒத்த, மாற்றுக் கருத்துக்கள்,  ஒவ்வொரு குறளுக்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாற்று குறள்கள் அதே வெண்பா முறையில், ஆனால் “கட்டாய அடி எதுகை” என்ற முறைமையில் செய்திருக்கிறேன்.

விளையாட்டாகத் தொடங்கியது.. ஏறக்குறைய 500 குறள்களை எட்டியுள்ளது, ஒருநாளுக்கு ஒரு குறள் என்ற அளவில்..  படிக்க, சிந்திக்க, ஒப்பு நோக்க, எழுத என்று எல்லாவற்றுக்குமாக நேரம் தேவைப்படுகிறது..

இறைவன் அருள் இருந்தால் இன்னும் 3 வருடங்களில் முடிப்பேன் என்று நினைக்கிறேன். கொள்பவர்கள் கொள்ளவும். குறை கூறுபவர்களும் வரவேற்கப்படுகிறார்கள். எழுத்திலே குறைகளிருக்கலாம், சிந்தனையிலே குறைகளிருக்கலாம், ஆனால் முயற்சியிலே இல்லை என்று உறுதியாகக் கூறமுடியும்..

உங்களுடைய கருத்துக்கள், குறை/நிறை சுட்டிகள் வரவேற்கப்படுகின்றன.

அன்பன்

அசோகன் சுப்பிரமணியம்

பி.கு: இன்றிலிருந்து, “வேர்ட் ப்ரஸ்” வலைப்பூவாகவும் மலருகிறது….! (26, சூலை, 2013)

13 Responses to About

 1. Excellent work. Thiru Ashokan…

  Where are you based.? Please visit the website http://www.voiceofvalluvar.org
  http://www.karursiddharbalusamy.org

  Currently we are in Visakhapatnam. Please mail me your details. If you are in India, I will call you.
  I hope you have also seen kuralthiran.com and kuraltranslations.blogspot.in….
  Warm Regards
  Best Wishes
  C. Rajendiran IRS
  Principal Commissioner
  Visakhapatnam

  • ashoksubra says:

   Dear Sir,

   I live in California for the past 30 years. Originally from North Arcot District (Keezh Pennathur, though I have seen it only once in my life), due to my fathers’ posting as ADE and DE in Tamil Nadu Highways Dept, lived in several towns in TN and finally settled in Chennai Mylapore for college studies. I do visit Home in Mylapore, Chennai during Music Season in December every year. If you let me know your number, I will be able to call you for sure from US.

   Thanks for your encouraging words!

   Best,
   Ashok Subramaniam…

 2. வைத்திய லிங்கம் says:

  அனைத்தும் மக்களின் பண்புகளை உணர்த்துவதும்.. வெளிப்படுத்துவதுமாக உள்ளது..

 3. Ashraf, NVK says:

  Interesting attempt. In fact I was planning to quantify and find out an answer to all these possibilities, but going chapter by chapter. Would be interesting to see your results! All the best/

  • ashoksubra says:

   Thanks. Yeah, did begin as an exploration and was absorbed so deep into it complete it by last december. Continue to read as many verses as possible and leave your thoughts!

 4. V.Ramesh says:

  I chanced upon your blog today and was amazed on reading your Kuralin Kural ! Great work . I have started a blog in the recent past – http://www.kanithottam.blogspot.com _ where I post my Tamil poems which I have started writing after my retirement last year. I have written a few Kural MelVaippu Venbakkal in which I try to relate a well known story/episode to a Kural. Would appreciate if you can go through and share your comments. Best Regards.

 5. Good morning Thiru Ashokan Subramaniam,

  I frequently refer your pages for Kural.. You have analysed, very systematically Kural with open mind. I have given reference to your page in http://www.voiceofvalluvar.org..( This is still under consideration.)

  Now we are in Chennai. Whenever 3 you come to Chennai, please do let me know..

  Warm Regards and Best Wishes
  C. Rajendiran

  • ashoksubra says:

   அன்பு இராஜேந்திரன் அவர்களுக்கு,

   நீங்கள் என்னுடைய திருக்குறள் வலைப் பக்கங்களை அவ்வப்போது உசாத்துணயாகக் கொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. மீண்டும் ஒருமுறை எல்லாப் பக்கங்களையும் சரிபார்த்து, செப்பனிடவேண்டியவைகளைச் செப்பம் செய்து ஒரு மின்புத்தகமாகவாவது வெளியிட வேண்டுமென்ற ஆசை. நான் இப்போதுதான் என்னுடைய மகளின் திருமணத்தை முடித்துவிட்டு அமெரிக்காவிற்கு திரும்பினேன். மீண்டும் டிசம்பர் மாதம் வருவேன். அப்போது உங்களோடு தொடர்புகொள்ளுகிறேன். உங்கள் தொலைபேசி எண்ணைப் பகிர்ந்து கொண்டால், என்னால் கூப்பிடமுடியும்.

   நன்றியுடன்

   அஷோக் சுப்பிரமணியம்.

 6. Murugaiyan Vinayagamoorthy says:

  Well done…..Sir… Congrats a lot….Naveena urai for thirukkurral…If it is released as book, It will be good…Expecting as a book soon…..Now I am referring your pages to read Thirukkural.

 7. I found it as well.. Looking forward to meet you in December in Mylapore.
  I lived in Mylapore for 5 years and then moved to France.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s