Category Archives: Poems (கவிதைகள்)

In this category, assorted Poems will be published from time to time

கற்பக அந்தாதி

எப்போதோ எழுதிய கற்பக அந்தாதி வெண்பா! எடுத்துப்பார்க்கையில் எத்தனையோ பிழைகள். மோனைத் தொடை முற்றிலும் தொலைந்திருந்தது..! அந்தாதியில் உள்ள விதிப்படியே முதற்பாட்டின் முதற் சீர்/சொல்/எழுத்து இறுதிப் பாடலில் இறுதி சீர்/சொல்/எழுத்தாக வந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. இதுபோன்ற பிழைகளையெல்லாம், செப்பமிட்டு மீண்டும் பதிவு செய்திருக்கிறேன். பி.கு: காப்புச் செய்யுள் அந்தாதிக்குள் அடங்காது காப்புச் செய்யுள்: ஓங்குபுகழ் மாமயிலை … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | 2 Comments

குழந்தைகள் தினச் சிந்தனைகள் – 2019

குழந்தைகளின் தினமென்று …..குதுகலிக்க நாளொன்று வழக்கம்போல் வந்ததின்று …..வருடத்தில் ஒருநாளாய் பழக்கத்தில் நேருவின்நாள் …..பாப்பாக்கள் நாளென்று புழக்கத்தில் கொண்டுவந்து …..புத்தியிலே புதைத்துவிட்டார் அதைகூடப் பொறுத்திடலாம் …..அரசியலின் அவலமென்று! கதைச்சொல்லிக் காசுபார்க்கும் …..கயவர்களின் களவிலொன்றாய்! விதையிருந்து முளைவிட்டு …..வெளிவந்த உடனேயும் சிதைத்தந்தப் பிஞ்சுகளை …..சீரழிக்க எத்தனைபேர்? பிஞ்சுகளைத் திருடுகின்ற …..பேடிகளாய் ஒருபக்கம் அஞ்சவவர் உடல்சிதைத்து …..அவலராகக் கையேந்திப் … Continue reading

Posted in Poems (கவிதைகள்), Thoughts | Leave a comment

தீபாவளி – 2019

மீண்டும் ஒரு தீபாவளித் திருநாள்.. நாம் திருந்தாமல் திரைக்கு வந்து சிலநாட்களேயான சூப்பர்ஹிட் படங்கள் என்கிற குப்பைகளோடு கொண்டாடுகிற நாள். பட்டாசுகள் எப்போது தீபாவளிக்குள் வந்தன என்று தெரியாது.. ஆனால் சிறுவயதில் அவை சுற்றுப்புறத்துக்கு ஏற்படுத்தும் மாசு, குப்பைகளைப் பற்றிக் கவலைப்படாமல் வெடித்திருந்தாலும், அவை வயதானவர்களும், நோயாளிகளுக்கும் எவ்வளவு தொந்தரவைத் தரக்கூடியவை என்று சிந்திக்காமலும் வெடித்திருக்கிறேன்/றோம். … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

பொந்தில் வைத்த அக்னிக்குஞ்சு – பாரதி

பொந்தொன்றில் வைத்தவக்னி பொங்கியது எழுந்ததாலே …….போயினவே மிடிமைகளும்! பொடிந்தனவே விலங்குகளும்! அந்தகனாய் வந்துதித்தான் ஆக்ரோஷக் கவியொருவன் …….அவன்வளர்த்த யாகத்தீ அவிந்திடவோ கவிதந்தான்? மந்திகளின் கூட்டமாக மக்களாட்சி மாறுமென்று …….மறந்துமவன் நினைந்திருந்தால் மாசக்தி அருள்வேண்டி நொந்தழுது விடுதலைக்காய் நோற்றிறுப்பா னோதவமும்? …….நுகத்தடியைச் சுமந்துபெரும் நோவும்பெற் றிருப்பானோ? அந்தோயெம் மக்களெல்லாம் அறிவழிந்து அறமழிந்து …….அந்நியர்கள் பிச்சைக்காய் அனுதினமும் ஆடினரே! … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

மாசக்தி… மாசக்தி… மாசக்தி!

நேற்று “அண்டத்தின் சரித்திரம்” என்கிற காணொளித் தொடரின் முதற் பகுதியைப் பார்த்துவிட்டுத் தூங்கப்போனேன். அதன் விளைவு காலையிலிருந்து பிடித்துக்கொண்ட கவிதைக் காய்ச்சல். ஏதோ எழுதத் தொடங்கி எல்லாம் சக்தியென்று முடிந்தது.. அண்டத்தின் மூலைகளில் அனுதினமும் ….அழித்தழித்து ஆக்குகின்ற அணுவுலைகள்! விண்ணதனின் வீதிகளில் வெடிவேட்டு ….விளையாட்டில் விளைக்கின்ற விந்தைமிக்க கண்ணறியா ககனத்தூள் காற்றலைகள்! ….கட்டியிறுக் கும்போதில் கருவாகி … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

இப்படி எப்படி – கவியரங்கக் கவிதை.

ஜனவரி மாதம், கவிவேழம் இலந்தை இராமசாமியவர்களின் ஆன்ற தலைமையில் நடந்த இணையக் கவியரங்கத்திற்காக எழுதிய கவிதை.. ———————————————————————— கவியரங்கம் – 44 தலைப்பு: : இப்படி எப்படி? தொடக்கநாள்: 28-திசம்பர்-2017 இட்டநாள்: 11-சனவரி-2018 ——————————————————————- வேழமுகன் போற்றி! வேழமுகம் போற்றி வினைகள் துவங்குவோர்க்குப் பாழாமோ ஏதுமிந்த பாரினிலே? – வாழுமிந்த வையத்தில் செந்தமிழாய் வந்துளத் தேகுதுதிக் … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

ஆலமும் அரசும்! – ஒரு மடக்குக் கவிதை…

மடக்குக் கவிதைகள் எழுதுவது ஒரு சுவையான அனுபவம். இதோ வேடிக்கையாக ஒரு கவிதை.. ஆலமும் அரசும்!   ஆலம் அருந்தி அகிலம் புரந்தாரே ஆலம் அடியமர் ஆதியவன் – நீலம் அரசன் கழுத்தில் அடக்கினாள் சூலி! அரசல் புரசலாய்ப் பேச்சு!   பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விடத்தை அருந்தியதால், தேவர்களையும், அசுரர்களையும் மட்டுமா, சிவன் … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

பொங்கல் வாழ்த்துக்கள்

பாரத நாட்டின் பழமை      பாரம் பரியச் செழுமை ஏரதன் உழவோர் கெழுமை      ஏற்றம் தருமவர் விழுமை நாரம் மலையொடு காடு     நனியாய் நிறைந்த நாடு பாரில் உண்டோ ஈடு     பரவ சத்தோடு பாடு! அருவியில் பொங்கி மலர்ந்து    ஆறாய் ஓடி விரிந்து மருவியே … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

அனுமனைத் துதிப்போம்

அனுமன் ஜெயந்தி: அஞ்சனை மைந்தன் அனுமானே ஆற்றல் அளித்திடுவான் அஞ்சுதல் போக்கி அகத்தை உறுதியாய் ஆக்கிடுவான் அஞ்சுமாப் பூதத்தால் ஆய அவத்தை  அறுத்துலகில் அஞ்சும டங்கிட ஆறளிப்  போன்தாள் அணிதலையே añcaṉai maintaṉ aṉumāṉē āṟṟal aḷittiṭuvāṉ añcutal pōkki akattai uṟutiyāy ākkiṭuvāṉ añcumāp pūtattāl āya avattai  aṟuttulakil añcuma ṭaṅkiṭa āṟaḷip  … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

கட்டளைக் கலித்துறை ஷோடஸ கணபதி (முழுவதும் + கவிப்பயனுடன்) 

1. சுமுகன் (இன்முகன்) ஆனந்த இன்முகம் அன்புடன் காட்டிடும் ஆனைமுகம் வானவர் போற்றிடு வாரணம் பூரண வாழ்வருளும் ஏனமும் ஊனமும் இன்றிட வேண்டுவோர் ஏற்றமுற மோனத் தொடுஞானம் மொய்ம்புகழ் ஈயும் முழுமுதலே ஏனம் – குற்றம் 2. ஏகதந்தர் (ஒற்றைத்தந்தன்/ஒற்றைக் கொம்பன்) ஒடித்தொரு கொம்பால் உயர்காவி யங்கீறு உன்னதனை வடிவைத் துறப்பினும் வாழ்வை பிறர்க்கீயும் வாரணனை பிடிக்கப் பதந்தரும் … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | 2 Comments