Category Archives: ThirukkuraL (திருக்குறள்)

In this category all Kural Commentary postings will be posted

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 909

909. ஸாமகானப்ரியா ( सामगानप्रिया – ஸாம கானத்தில் விருப்பமுள்ளவள் ) வேள்விகளில் அவிசினைப் பெறவரும் தேவதைகளின் பெருமைகளைப் பாராட்டும் வகையில் மந்திரங்களை கானமாகப் பாடும் ஸ்வர அமைப்பையும், பாங்கையும் கொண்டது ஸாமவேதம். தேவி வேள்விகளில் பாடப்படும் ஸாமகானத்தை மிகவும் விரும்புகிறாள். அதிலே மிகவும் நிறைவடைபவள். இசையிலே மயங்காத உயிர்களே இல்லை. அன்னையே அனைத்து உயிர்களாகவும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam, ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 742

742. பவதாவ ஸுதாவ்ருஷ்டி: ( भवदावसुधावृष्टिः – பிறவியெனும் காட்டுத் தீயை அவிக்கும் அமுத மழையானவள் ) துன்பமோடின்பம் கலந்தது ப்ரபஞ்சம். இன்பத்தை மட்டுமே நோக்கியிருக்கும் ஜீவர்களுக்கு, துன்பம் கலவாத இன்பம் இவ்வுலகில் இல்லையெனும் உண்மை பல ஜென்மங்களுக்குப் பிறகே புரிகிறது, பவத்தீயை அணக்கும் அம்ருதவர்ஷத்துக்காக அன்னையைச் சரணடைகின்றன. “தாவ” என்னும் பதம் ஆரண்யத்தையும், தீயையும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam, ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 174

174. நிர்பவா ( निर्भवा – ஆதி/பிறப்பில்லாதவள் ) ஶக்தியும் சிவமும் ஒன்று. இவை இணைந்த உருவகத்தை அர்த்தநாரீஶ்வரன் என்று அழைக்கிறோம். மெய்ப்பொருளுக்கு ஆதியும், அந்தமும் இல்லை. அதனால் அது பிறப்பிறப்பற்றது, பிறப்பிறப் பில்லா பெருஞ்சத்தி என்னும் சிறப்புடைத்த சீரதாம் சித்து! – புறம்பாய் பிறவற்று ஆதியற்றப் பேரொளி அன்னைத் திறமது வென்று தெளி திறம் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 172

172. நிஸ்ஸம்ஶயா ( निःसंशया – ஸந்தேஹம்/ஐயப்பாடு இல்லாதாவள் ) அன்னை ஐயங்கள் அற்றவள் என்றபடியால், எல்லாவற்றிலும் உறுதிப்பாடு கொண்டுள்ளாள் என்பது வெளிப்படை. உலக ஜீவன்கள் எல்லாவற்றின் இருப்பு, மற்றும் செயல்களும் அவள் உள்ளபடி அறிந்தவள். அவள் அறியாததொன்றில்லை; அதனால் அவளுக்கு எதிலும் ஐயமென்பதும் இல்லை. தனக்குப் புறம்பாய் ஒன்றில்லாததாலும், தானே அனைத்துமாய் இருப்பதால் அவளுக்கு … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 169

169. க்ரோதஶமனீ ( क्रोधशमनी – கோபத்தை துடைப்பவள் ) காமம் இருக்கும் இடத்தில் கோபமும் இருக்கும். காமமாகிய விருப்பும், குரோதமாகிய வெறுப்பும் ஜீவனை பரஞானம் அடையவிடாமல் தடுக்கின்றன. பரஞானம் அடைவதற்கு, தான், தனதென்ற சித்தத்தின் எண்ணங்கள் அடங்கவேண்டும், அழியவேண்டும். அவை அறும்போது காமமும் குரோதமும் ஆகியவை இராமல்போகும். அன்னையை வழிபடுபவர்களுக்கு இவை இல்லாது துடைத்திடுவாள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 105

105. ஸஹஸ்ராராம்புஜாரூடா ( सहस्राराम्बुजारूढा – ஸஹஸ்ர/ஆயிரம் இதழ்களை உடைய தாமரையில் எழுந்தருளியிருப்பவள் ) ஸஹஸ்ராகாரச் சக்கரத்திலுள்ள ஆயிரம் இதழ்களை உடைய அம்புயத்தில் (தாமரையில்) வீற்றிருப்பவள். ஆறு சக்கரங்களுக்கு மேலே உள்ள துரிய கூடத்தில் இருக்கும் ஏழாவது சக்கரமே உணர்வு நிலையின் மூலஸ்தானமும், மெய்யறிவுக் கடலும், ஒளியுமாகும். நல்ல நேர்மறையான சிந்தனைகளும், உயர் அறிவாற்றலும் முக்கியமாக … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 102

102. விஷ்ணுக்ரந்தி விபேதிநீ ( மணிபூரக, அனாஹத சக்கரங்களுக்குமேல் உள்ள முடிச்சாம் விஷ்ணுக்ரந்தியை அவிழ்த்து வெளிப்படுபவள் ) சூர்ய கண்டத்தில் மணிபூரக, அனாஹத சக்கரங்களுக்குமேல் உள்ள முடிச்சுக்கு விஷ்ணுக்ரந்தி என்று பெயர். இந்த முடிச்சை அவிழ்த்து வெளியே வந்து, ஸ்திதி வாசனையைப் போக்கியருளுவாள். இங்கு விஷ்ணு வடிவாக அன்னை இருக்கிறாள். விண்ணு முடிச்சை விலக்கி வெளிவந்தாள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 80

80.கராங்குளி நகோத்பன்ன நாராயண தஶாக்ருதி: ( कराङ्गुलि नखोत्पन्न नारायण दशाकृतिः – மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் தன்னுடைய நகக்கண்களிலிருந்துத் தோன்றச் செய்தவள் ) தன்னுடைய விரல் நகக்கண்களிலிருந்து மாலோன் எடுத்த பத்து அவதாரங்களையும் தோற்றுவித்தவள் அன்னை. தன்னுடைய அச்சாக பண்டாஸுரன் உண்டாக்கிய துர்மதா, அர்ணவஸ்த்ரா, ஹிரண்யாக்ஷ, ஹிரண்யகஶிபு, மஹாபலி, அங்குஶ்தா, ராவண, கும்பகர்ண, வ்யானயாசிக, … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 76

76. விஶுக்ர ப்ராணஹரண வாராஹீ வீர்ய நந்திதா ( विशुक्र प्राणहरण वाराही वीर्य नन्दिता – விஶுக்ரனின் உயிரைப் போக்கடித்த வாராஹியின் வீரியத்தினால் மகிழ்வுற்றவள் ) விஶுக்ரனும், விஷங்கனும் பண்டாஸுரனால் அவனுடைய இரு புஜங்களிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள். விஶுக்ரன் உலக இச்சைகளையும், காமத்தையும் தூண்டுபவன். அவனைக் கொல்வதன் உருவகமே மனிதர்கள் காமத்தை வெல்ல வாராஹி துணையிருக்கிறாள் … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 29

29. அனாகலித ஸாத்ருஶ்ய சிபுகஶ்ரீ விராஜிதா ( अनाकलित सादृश्य चिबुकश्री विराजिता ) ( ஒப்பிட்டுச் சொல்லவியலாத முகவாய்க்கட்டின் அழகினால் ஒளிபெற்றவள் ) சௌந்தர்யலஹரியில் 67வது ஸ்லோகத்தில், ஆதிசங்கரர் அன்னையின் முகவாயை (மோவாய்) ஈடு இணையற்றதாகக் கூறி, ( கதம்காரம் ப்ரூமஸ்தவ சுபுக மௌபம்ய ரஹிதம்) முகமாகியக் கண்ணாடியின் பிடியாக இருக்கும் அந்த முகவாயை … Continue reading

Posted in ThirukkuraL (திருக்குறள்) | Leave a comment