Monthly Archives: January 2016

ஆலமும் அரசும்! – ஒரு மடக்குக் கவிதை…

மடக்குக் கவிதைகள் எழுதுவது ஒரு சுவையான அனுபவம். இதோ வேடிக்கையாக ஒரு கவிதை.. ஆலமும் அரசும்!   ஆலம் அருந்தி அகிலம் புரந்தாரே ஆலம் அடியமர் ஆதியவன் – நீலம் அரசன் கழுத்தில் அடக்கினாள் சூலி! அரசல் புரசலாய்ப் பேச்சு!   பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விடத்தை அருந்தியதால், தேவர்களையும், அசுரர்களையும் மட்டுமா, சிவன் … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

பொங்கல் வாழ்த்துக்கள்

பாரத நாட்டின் பழமை      பாரம் பரியச் செழுமை ஏரதன் உழவோர் கெழுமை      ஏற்றம் தருமவர் விழுமை நாரம் மலையொடு காடு     நனியாய் நிறைந்த நாடு பாரில் உண்டோ ஈடு     பரவ சத்தோடு பாடு! அருவியில் பொங்கி மலர்ந்து    ஆறாய் ஓடி விரிந்து மருவியே … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 2

திராவிட செவ்விசை முன்னோடி – சீர்காழி முத்துத்தாண்டவர் [சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் Novermber – 2015 பதிப்புக்காக திராவிட செவ்விசை முன்னோடியாம் சீர்காழி முத்துத்தாண்டவரைப் பற்றி எழுதிய கட்டுரை] அடிநாதம்: கருநாடக இசையென்று பரவலாக அறியப்படும் திராவிட செவ்விசையின் மரபு சங்ககாலத்திற்கும் முற்பட்டது என்று ஏற்கனவே பலரும் பலமுறை நிறுவியாயிற்று. சிலப்பதிகாரம், … Continue reading

Posted in Articles (எண்ணங்கள்), பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

தமிழிசை வளர்த்த செம்மல்கள் – 1

சிவபுண்ய கானமணி சிவன் [சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் October – 2015 பதிப்புக்காக சிவபுண்ய கானமணி, தமிழ் தியாகய்யா பாபநாசம் சிவன் அவர்களின் 125 வருட நினைவு நாளுக்காக எழுதிய கட்டுரை] இதோ! மார்கழி இசை மாதம் மலர ஆரம்பிக்க இன்னும் சிறிது நாட்களே! சென்னையின் ஒவ்வொரு மூலையிலும், முறையாகக் கட்டப்பட்ட … Continue reading

Posted in Articles (எண்ணங்கள்), பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

எம்.எஸ்.வி – மெல்லிசையின் வடிவம், விளக்கம்

[சென்னையில் வெளிவரும் இலக்கிய வேல், மாத இதழின் செப்டம்பர் – 2015 பதிப்புக்காக எம்.எஸ்.வீ-யென்னும் மெல்லிசை மேதையை நினைவு கூறுமுகமாக எழுதிய கட்டுரை] “மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்   உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும்” தெய்வத்தாய் படத்தில் மக்கள் மனத்தில் நீங்காமல் இடம் பெற்ற மூன்றே … Continue reading

Posted in Articles (எண்ணங்கள்), பொதுக் கட்டுரைகள், Thoughts, Articles (எண்ணங்கள், கட்டுரைகள்) | Leave a comment

அனுமனைத் துதிப்போம்

அனுமன் ஜெயந்தி: அஞ்சனை மைந்தன் அனுமானே ஆற்றல் அளித்திடுவான் அஞ்சுதல் போக்கி அகத்தை உறுதியாய் ஆக்கிடுவான் அஞ்சுமாப் பூதத்தால் ஆய அவத்தை  அறுத்துலகில் அஞ்சும டங்கிட ஆறளிப்  போன்தாள் அணிதலையே añcaṉai maintaṉ aṉumāṉē āṟṟal aḷittiṭuvāṉ añcutal pōkki akattai uṟutiyāy ākkiṭuvāṉ añcumāp pūtattāl āya avattai  aṟuttulakil añcuma ṭaṅkiṭa āṟaḷip  … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

கட்டளைக் கலித்துறை ஷோடஸ கணபதி (முழுவதும் + கவிப்பயனுடன்) 

1. சுமுகன் (இன்முகன்) ஆனந்த இன்முகம் அன்புடன் காட்டிடும் ஆனைமுகம் வானவர் போற்றிடு வாரணம் பூரண வாழ்வருளும் ஏனமும் ஊனமும் இன்றிட வேண்டுவோர் ஏற்றமுற மோனத் தொடுஞானம் மொய்ம்புகழ் ஈயும் முழுமுதலே ஏனம் – குற்றம் 2. ஏகதந்தர் (ஒற்றைத்தந்தன்/ஒற்றைக் கொம்பன்) ஒடித்தொரு கொம்பால் உயர்காவி யங்கீறு உன்னதனை வடிவைத் துறப்பினும் வாழ்வை பிறர்க்கீயும் வாரணனை பிடிக்கப் பதந்தரும் … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | 2 Comments

ஷோடஸ கணபதி 16 – ஸ்கந்தபூர்வஜர் (கந்தனுக்கு மூத்தோன்)

ஸ்கந்த பூர்வஜர் பற்றி காஞ்சி மஹா ஸ்வாமிகள் கூறியதிலிருந்து… கடைசிப் பேருக்கு வந்துவிட்டோம். ‘ஸ்கந்த பூர்வஜர்’ என்பது ஷோடச நாமாவில் கடைசி. ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமிக்குத் தமையனார் என்று அர்த்தம். முருகனுக்கு மூத்தவர். அதைவிட, ‘முருகனுக்கு முன்னவர்’என்றால் அழகாக இருக்கிறது. ‘பூர்வஜர்’என்றால் முன்னால் பிறந்தவர். ‘அக்ரஜர்’என்றும் சொல்வதுண்டு. ‘உடன்பிறப்பு’என்று தமிழில் சொல்வதுபோல் ஸம்ஸ்க்ருதத்தில் ‘ஸஹோதரர்’. ‘ஸஹ’என்றால் ‘உடன்’.ஸஹோதரர் என்றோ … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

ஷோடஸ கணபதி 15 – ஹேரம்பர் (ஐம்முகர்)

15- நாமா ஹேரம்பரைப் பற்றி மஹாஸ்வாமிகளின் அருள் வாக்கு: ஹேரம்பர்: ‘ஹேரம்பர்’ என்பது அடுத்த பெயர். எனக்குத் தெரிந்தவரையில் அந்த வார்த்தைக்கு தாது பிரித்து யாரும் இதுவரை ‘கன்வின்ஸிங்’காக அர்த்தம் சொல்லவில்லை. நான்தான் ஸரியாகத் தெரிந்து கொள்ளவில்லையோ என்னவோ? பாஸ்கர ராயர் என்று மஹான்கள் கோஷ்டியில் வைத்து மரியாதை செய்யவேண்டிய ஒரு மந்த்ர சாஸ்த்ர மஹாபண்டிதர். அவருடைய … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment

ஷோடஸ கணபதி 14 – சூர்ப்பகர்ணர் (முறக்காதர்)

14- நாமா சூர்ப்பகர்ணர் பற்றி மஹாஸ்வாமிகளின் அருள் வாக்கு: வக்ரதுண்ட : சூர்பகர்ணோ ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ : “சூர்ப்பகர்ணர்‘என்பது அடுத்த பேர். அதற்கப்புறம் இரண்டு பேர்கள்தான். சூர்ப்பகர்ணர் என்றால் முறம் போன்ற காதுகளை உடையவர். சூர்ப்பம் என்பது முறம். சூர்ப்பணகை என்றால் முறம் போன்ற நகம் உடையவள். ‘சூர்ப்ப-நகா’என்பது ஸம்ஸ்க்ருதப் புணர்ச்சி விதிகளின்படி ‘சூர்ப்பணகா‘என்று ஆகும். … Continue reading

Posted in Poems (கவிதைகள்) | Leave a comment