Category Archives: Lalitha Sahasranamam

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 1000

1000. லலிதாம்பிகாம் ஓம்: ( ललिताम्बिका – அழகிய அன்னையே ஓம்! ) ஆயிரம் நாமங்களில் இறுதியானது. சிறப்புள்ள அன்னை என்று தொடங்கிய நாம வரிசை, அழகிய தாய் என்று நிறைவுறுகிறது. விளையாட்டாகவே ஜகத்தையும், ஜீவகோடிகளையும் படைத்ததோடு, அழகியலோடு அவற்றையெல்லாம் செய்திருக்கிறாள். அவளுடைய ஸாந்நித்தியமே அவள் படைப்பத்தனையிலும் காணப்படுகின்றன, இந்த எளிய முயற்சி உட்பட. பிரணவ … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 999

999. ஶிவ ஶக்த்யைக்ய ரூபிணி ( शिवशक्तैक्यरूपिणी – ஶிவனும், ஶக்தியும் ஒன்றான வடிவினள் ) அன்னையை ஶிவ வடிவமென்றோ, ஶக்தி வடிவமென்றோ எண்ணாமல், ஒன்றான வடிவாகவே எண்ணவேண்டும். இதற்கு பல உவமைகளைக் கூறலாம். எள்ளில் உள்ள எண்ணெய் போலவும்,  சந்திரனில் உள்ள குளிர் கிரணங்கள் போலவும், ஸுர்யனும், வெப்பமும் போலவும், சொல்லும்–பொருளும் போலவும் என்று … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 998

998. ஶ்ரீ ஶிவா ( श्रीशिवा – திருமிக்க ஶிவை ) அன்னை ஶிவனுடைய பத்தினியாயிருப்பதோடு, அவருடன் அபேதமாக இருப்பதால், ஶிவனும், ஶிவையும் ஒருவரே. அவளே திருமிக்க மங்கள வடிவினளாக இருக்கிறாள்.. சிவனோ(டு) அபேதமாய் தேவித் திகழ்வாள் சிவையென ஒன்றித் திருவாய் – பவத்தின் அவத்தை அறுத்தே அளியால் அணைக்கும் நவநிதியாம் மங்களமே ஞாய்

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 997

997. ஶ்ரீமத் த்ரிபுர ஸுந்தரீ ( श्रीमत्त्रिपुरसुन्दरी – சிறந்த திரிபுராந்தகரான பரமஶிவனின் அழகிய பத்தினியாக இருப்பவள் ) திரிபுரராம் பரம ஶிவன், ப்ரும்ஹா, விஷ்ணு, ருத்திரன் என்ற மூவரின் உடல்களாம் திரிபுரங்களைக் கொண்டவர். அவருடைய பத்தினியாகவும், திருவோடு கூடியவளாகவும் இருப்பதால் அன்னைக்கு ஶ்ரீமத் த்ரிபுரஸுந்தரீ என்று பெயர். தவிரவும் ஸ்தூலம், ஸுக்ஷ்மம், காரணம் என்னும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 996

996. ஶ்ரீசக்ரராஜ நிலயா ( श्रीचक्रराजनिलया – ஶ்ரீ சக்கரத்தைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவள் ) சக்கரங்களுக்குள் மிகவும் உயர்ந்த ஶ்ரீசக்கரம் ஒன்பது மதில்களைக் கொண்டது. அதனைத் தன் இருப்பிடமாகக் கொண்டவள் அன்னை. ஶிவ–ஶக்தி ஐக்கிய ஸ்தானமாக ஶ்ரீசக்கரத்தைச் சொல்லுவது வழக்கம். இங்கு ஶ்ரீசக்கரராஜம் என்னும் தேருக்குள் இருப்பவள். திருவாழி ராசமெனும் தேருக்குள் வீற்ற உருவே … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 995

995. ஸர்வா நுல்லங்க்ய ஶாஸனா ( सर्वानुल्लङ्घ्यशासना – யாரும் மீறக்கூடாதக் கட்டளைகள் கொண்டவள் ) அன்னையின் கட்டளைகளை ப்ரும்ஹா உள்ளிட்ட மூவரும் நிறைவேற்றுகிறார்கள். அவர்களாளும் கூட அன்னையின் கட்டளைகளை மீற முடியாது. அவளுடைய புருவ நெரிப்பாலேயே இடும் கட்டளைகளை ப்ரும்ஹா முதலியவர்கள் ஜகத்தில் ஶ்ருஷ்டி முதலான பஞ்ச க்ருத்யங்களையும் செய்கிறார்கள் என்று ஶங்கர பகவத்பாதாள் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 994

994. ஆபால கோப விதிதா ( आबालगोपविदिता – சிறுவர்களாலும், இடையர்களாலும்கூட அறியப்படுகிறவள் ) அக்ஞானமுடையவர்களுக்குக் காட்டாக குழந்தைகளையும், இடையர்களையும் சொல்வது வழக்கம்.  ஏனெனில் குழந்தைகளுக்கு அறிவு முதிர்ச்சியிராது. இடையர்களோ அவர்கள் தொழிலிலேயே மூழ்கி தெய்வத்தை நினைக்கவும் இயலாதவர்கள். அவர்கள் கூட அறியக்கூடிய வடிவில் அன்னையைத் தெய்வமாக அறிவார்கள். இன்னொரு விதமாகச் சொல்வதென்றால் ப்ரும்ஹா முதலிய … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 993

993. அக்ஞான த்வாந்த தீபிகா ( अज्ञानध्वान्तदीपिका – அறியாமையாம் இருளைப்போக்கும் சிறு விளக்கினைப் போன்றவள் ) அன்னை எவ்வித காரணமுமில்லாத கருணையாதலால், அவள் ஜீவர்களிடம் உள்ள அறியாமையாக இருளை அகற்றி அவர்களுக்கு தேவையான அளவுக்கு ஒளியைத் தந்து நலத்தை நல்குகிறாள். அன்னையோ பேரறிவு. அந்தகாரத்தில் இருந்தவர்க்குப் பேரொளியைக் காட்டினால், கண்கள் காணும் திறனை இழக்குமென்பதால், … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 992

992. அவ்யாஜ கருணா மூர்த்தி: ( अव्याजकरुणामूर्तिः – எதிர்பார்ப்புகளற்ற கருணை வடிவினள் ) அன்னையின் கருணை எதிர்பார்ப்புகள் இல்லாத ஒன்று. இதைச் செய்தால் இது பலனாகக் கிடைக்கும் என்று ஒரு காரணம்பற்றி விளையும் கருணையல்ல அது காரணமின்றி பெருகும்  கருணையது; அவளே கருணை வடிவானவள் தானே. ஸௌந்தர்யலஹரியில் ஶங்கரர், “செந்நிறக் கருணை ஒருத்தி விளங்குகிறாள்” … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 991

991. ஷடத்வாதீதரூபிணி ( षडध्वातीतरूपिणी – ஆறு வழிகளைக் கடந்த வடிவினள் ) அம்பிகையை உபாஸிக்கும் மார்க்கங்கள் ( அத்வாக்கள் ) ஆறாகும். அவை வர்ண, பத, மந்த்ர, கலா, தத்வ, புவன என்பனவாம். ‘அ’ முதல் ‘க்ஷ’ வரையுள்ள அக்ஷரங்களின் ஶக்தியை விளக்குவது வர்ணத்வா;  அக்ஷரச் சேர்கையில் பொருளுள்ள பதங்கள் அமைய, அவற்றின் ஶக்தியை … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment