Monthly Archives: April 2020

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 685

685. ராஜ்யதாயினீ ( राज्यदायिनी – அரசாளும் போகத்தை அளிப்பவள் ) மேலே சொல்லப்பட்ட ஆளும் திக்தேவர்கள், மும்மூர்த்திகள் என்று அனத்து அரசர்களுக்கும், அப்போகத்தை அளிப்பவள் அன்னையே. தவிர, இவர் இதைச் செய்தால் சரியாக இருக்கும் என்று ஒரு தேர்ந்த நிர்வாகியாக, அவரவருக்குண்டான பதவிகளையும், செயல்களையும், அவற்றுக்குண்டான உபரிதேவதைகளாம் பரிவாரங்களோடு படைத்தவள் அன்னையே. அண்டமகா ஈச்வரியே … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 684

684. ராஜராஜேஶ்வரி ( राजराजेश्वरी – மன்னாதி மன்னார்களுக்கெல்லாம் தலைமையாக இருப்பவள் ) மன்னாதி மன்னர்களுக்கெல்லாம் அவளே தலைவியாம்;  எண்திசைக் காக்கும் இந்திரனாதி திக்தேவர்களுக்கும், அவர்களின் தலைவர்களான ப்ரும்ஹா, விஷ்ணு, ருத்திரன் என்னும் மும்மூர்த்திகளுக்கும்,  என்று அனைத்து ஆள்பவர்களும் அன்னையே ராணி. தேவர்களுள்ளே மிகவும் கீர்த்தி மிக்கவர் மஹாதேவராம் காமேஶ்வரர். அவரையும், அவர் உள்ளத்தையும் ஒருங்கே … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 683

683. ஶோபனா ஸுலபா கதி: ( शोभनासुलभागतिः – உன்னதமானவையும், எளிதில் அடையக்கூடிய இடமாகவும் இருப்பவள் ) தர்மார்த்த காமமோக்ஷமாம் சதுர்வித புருஷார்த்தங்களின் வடிவில் இருப்பதால் அவள் எளிமையாக வழிப்பட்டு, இலகுவாக அடையும் வழிதருபவள் அன்னை. புண்ணியம், நிலைத்த ஆனந்தம் இவற்றோடு மங்களமும் நல்குவதால் அவள் ஶோபனா ஆகிறாள். உயர்ந்தவை என்பதால் அவை அடையக்கூடிய உயரத்தில் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 682

682. ஸூபகரீ ( शुभकरी – மங்களமானவற்றையே செய்பவள் ) அன்னை மங்களமான நலன்களையே நல்குபவள். வழிபடுதலில் குறைகள் இருப்பினும், அவற்றைப் புறந்தள்ளி, பக்தியையும், அன்னையின் அருள் கிடைக்கவேண்டும் என்னும் ஆத்ம விழைவே அவள் விரும்புவது. அஶுபமானவற்றையும் அவள் ஶுபமாக்கி ஸாதகர்க்கு அருளும் கருணாமூர்த்தி அவள். மங்களமே செய்பவளாம் வாமியன்னை பத்தியினைப் பங்கமுறச் செய்கின்றப் பத்தருக்கும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 681

681. ஸுகாராத்யா ( सुखाराध्या – இன்பமாக வழிபடக்கூடியவள் ) அன்னையின் வழிப்பாட்டிற்கு மெய்வருந்தத் தேவையில்லை. மனவடக்கம் வேண்டாம். அவள் இன்ன வடிவினள், இப்படித்தான் வழிபடவேண்டும் என்னும் வரையறைகள் கிடையாது. ஒரு நிலையில் இருந்துதான் வழிபடவேண்டும் என்னும் கட்டுப்பாடும் கிடையாது. எந்த வடிவமாக அவளை மனத்தில் நிறுத்துகிறோம் என்பதை உணரவேண்டியதொன்றே நாம் செய்யவேண்டியது. ஸத்வ குணம் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 680

680 பாவாபாவ விவர்ஜிதா ( भावाभावविवर्जिता – தோற்றம், ஒடுக்கமென்னும் இரண்டுமில்லாதாள் ) பாவம் என்பது தோற்றம்; அபாவம் என்பது அழிந்து ஒடுங்குதல் என்ற இரண்டுமில்லாதாள் அன்னை. இது சிறிது குழப்பமாக இருக்கலாம். அவளேதான் மூச்சின் வெளியிடுதலிலும், உள்ளிழுத்தலிலும் பேரண்டங்களை உண்டாக்கி, அழிக்கிறாள் என்றுதான் இதுவரை கூறிய நாமங்கள் உணர்த்தின. இப்போது இல்லையென்றால் எது உண்மையென்ற … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 679

679 ப்ருஹத்ஸேநா ( बृहत्सेना – பெரிய படையை உடையவள் ) அன்னை அளப்பரிய பெரும் படையை உடையவள். அளே அனைத்துமாயினும், அவள் நடத்தும் ப்ரபஞ்ச நாடகமென்னும் ஒரு அரசாங்க நிர்வாக அமைப்புக்குத் தேவையான படையும் தேவையல்லவா? தனியொருவளாகவே பேரண்டங்களை, ஒரு மூச்சுக்காற்றிலே படைத்தவளுக்கு, தானாகவே அனைத்து எதிரிகளையும் அழிக்கும் வல்லமையுண்டு. இங்கு படையென்றது போரிடுவதற்காக … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 678

678.பாஷாரூபா ( भाषारूपा – அனைத்து மொழிகளின் வடிவுமானவள் ) அன்னையே அனைத்து மொழிகளின் வடிவமாகவும் உள்ளாள். அவள் மொழியென்னும் கூட்டுக்குள் அடைபட்டவள் அல்ல. அவளுக்கு தேவபாஷை, மற்றவை என்ற பாகுபாடெல்லாம் இல்லை.மொழிகள் அவளைப் பற்றிய ஒரு வடிவத்தை நமக்குள் கொடுப்பதற்கே. அவ்வாறு கிடைத்த வடிவத்தை, எம்மொழியானாலும், மீண்டும் மீண்டும் சொல்லும்போது, அவளின் ப்ரபாவ வடிவத்தை … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 677

677. பலிப்ரியா ( बलिप्रिया – பலஶாலிகளிடம், நிவேதனங்களில் ப்ரியமுள்ளவள் ) பலி என்பது பலசாலிகளையும், அன்னைக்குப் படைக்கப்படும் நிவேதனங்களையும் குறிக்கும். எங்கெல்லாம் “நான்”, “எனது” என்னும் மமகாராம் தள்ளப்படுகிறதோ, அங்கெல்லாம் அன்னை தங்குகிறாள்.  கோவில்களின் நுழைவாயிலில் உள்ள பலிபீடத்தில் பக்தர்கள் தங்களுடைய அகந்தையை நிவேதனமாக சமர்ப்பித்துவிடவேண்டும், விட்டுவிடவேண்டும். அதுவே உயர்ந்த தியாகமாகவும் திகழ்கிறது. நிலையற்றவற்றையும், … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 676

676. ப்ரம்ஹானந்தா ( ब्रह्मानन्दा – ப்ரும்ஹானந்தம் கொண்டவள் ) ப்ரும்ஹ, ஆத்ம ஐக்கியத்தின் அனுபவமாம் ஆனந்தத்தைத் தன் வடிவாகக் கொண்டவள் அன்னை. பொதுவாக முழுமையான, கனவுகளற்ற தூக்கத்தினால் கிடைப்பதே மிகச் சிறந்த ஆனந்தமாக நினைக்கிறோம். அது பொறிகளெல்லாம் அடங்கி, வெளி விவகாரங்களில், விகாரங்களிலிருந்து விலகி இருப்பதால் பெறுஞ் சுகம். ஆனால் அதுவும் அஞ்ஞான நிலையில் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment