Monthly Archives: September 2019

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 47

47. மராளீ மந்த கமனா ( मरालीमन्दगमना – பெண் அன்னம்போல் மென்னடையை உடையவள் ) பெண் அன்னத்தைப் போன்று மென்னடையினள் அன்னை. “ஸோ” என்னும் உச்வாசமும், “ஹம்” என்னும் நிச்வாசமும் சேர்ந்து “ஸோஹம்” என்றாகும். மீண்டும் மீண்டும் நடக்கும் அந்த மூச்சின் ஒழுங்கிலே “ஹம்ஸம்” என்ற சொல் பிறக்கும். அது எழிலுக்கும் நடை ஒழுங்கிற்கும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 46

46. ஶிஞ்ஜான மணி மஞ்ஜீர மண்டித ஶ்ரீ பதாம்புஜா – ( शिञ्जान मणि मञ्जिर मण्डित श्री पदाम्बुजा – ஒலிக்கும் மணிகளையுடைய சிலம்புகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய, திருப்பாதங்களையுடையவள் ) அன்னை, ஒலிக்கும் மணிகளையுடைய சிலம்புகள் அணிசெய்யும் தாமரைத் திருப்பாதங்களை உடையவள். ஶ்ரீ என்று குறிப்பிடப்பட்டதால் அப்பாதங்களைப் பற்றியவருக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களும் சேரும் என்பது … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 45

45. பதத்வய ப்ரபாஜால பராக்ருத ஸரோருஹா ( पदद्वय प्रभाजाल पराकृत सरोरुहा – தன்னிரு பாதங்களின் ஒளிக்கூட்டால் தாமரை மலர்களைத் தோற்கடிப்பவள் ) அன்னை தன்னிரு பாதங்களின் ஒளிக்கூட்டால் தாமரை மலர்களின் அழகையும் ஒளியையும் தோற்கடிப்பவள் என்கிறது இந்த நாமம். அன்னையானவள் நம்மில் ஆசைகளாம் மாயைகளை அறுத்து அத்துவிதப் பொருளாய், அதாவது தானும், தனிப்பொருளும் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 44

44. நகதீதிதி ஸம்சன்ன நமஜ்ஜன தமோகுணா ( नखदीधिति संछन्न नमज्जन तमोगुणा – தன் பாதங்களில் இருக்கிற நகங்களின் காந்தியினால் தன்னை நமஸ்கரிக்கும் பிரம்ஹா, விஷ்ணு இவர்களின் அஞ்ஞான இருளைப் (தமோகுணம்) போக்குகிறவள் ) அன்னையின் பாதங்களைத் தியானம் செய்வதால் அறியாமை அகலுகிறது என்கிறது பத்மபுராண ஸ்லோகம். அவளது பாத நகங்களின் ஒளியால், அவளை … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 43

43. கூர்மப்ருஷ்ட ஜயிஷ்ணு ப்ரபதாந்விதா – ( कूर्मपृष्ठ जयिष्णु प्रपदान्विता – ஆமையின் முதுகு ஓட்டைவிட அழகாய் வளைந்த புறங்கால்களை உடையவள் ) ஆமையின் ஓடு உறுதியைக் காட்டுவது, வளைந்திருக்கும். அதைவிடவும் அழகாக வளைந்த, புறங்கால்களை உடையவள் என்கிறது நாமம். வளைவுக்கு எத்துணையோ எடுத்துக்காட்டுக்கள் இருப்பினும் ஆமையின் ஓட்டினைக் குறிப்பிட்டது, அந்த ஓட்டின் உறுதியை, … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 42

42. கூடகுல்பா ( गूढगुल्फा – உருண்டு திரண்ட குதிக்கால்களை உடையவள் ) அன்னையின் மென்னடைக்கு ஏற்றவாறு உருண்டு திரண்டு இருக்கும் குதிக்கால்களை உடையவள் என்கிறது இந்த நாமம். ஒருவேளை அவளது அன்ன நடையழகுக்கு அவ்விரண்டு குதிக்கால்களே காரணமாயிருக்குமா? எப்படியாயினும் அவற்றை வருணிக்க சொற்களில்லை வாய்க்கு. மென்னடைக் கேற்ற மிகவுருண்டு மேல்திரண்ட சன்னக் குதிக்கால்கள் தாமுடைத்தாள் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 41

41. இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மர தூணாபஜங்கிகா ( इन्द्रगोप परिक्षिप्त स्मर तूणाभजङ्घिक – மின்மினிப் பூச்சிகளை வாரி இறைத்தார்போல் மின்னும் மன்மதனுடைய அம்புறாத் துணிகள்போன்ற முழங்கால்களை உடையவள் ). மின்மினிப் பூச்சிகளை வாரி இறைத்ததுபோல் மினுமினுக்கும் மன்மதனுடைய அம்புறாத்துணிகள் அன்னையின் முழங்கால்களாக உள்ளனவாம். சிறிது சிந்தித்தால், தங்கமயமாக சொலிக்கும் அன்னைக்கு, சோடனையாக அமைந்தனவா அவை? … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 40

40. மாணிக்ய முகுடாகார ஜானுத்வய விராஜிதா ( माणिक्य मकुटाकार जानुद्वय विराजिता – மாணிக்கக் கற்கள் பதிக்கபட்ட மணிமுடிபோலிருக்கும் இரு முழங்கால் சில்லுகளை உடையவள் ) அன்னையின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கின்றார்போல், இந்த நாமம் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட மணிமுடி போலிலிருக்கும் இரு முழங்காற் சிற்களை உடையவள் அன்னை என்கிறது. மாணிக்கக் கல்வேய்ந்த … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 39

39. காமேஶக்ஞாத சௌபாக்ய மார்த்தவோரு த்வயான்விதா ( कामेशज्ञातसौभाग्यमार्दवोरुद्वयान्विता ) ( காமேஶ்வரால் மட்டும் அறியப்பட்ட அழகையும், மென்மையும் உடைய துடைகளைக் உடையவள் ) அன்னையின் அந்தரங்கங்கள் அத்துணையும் காமேசரான சிவபரனுக்கே என்று கூறும் இன்னொரு நாமம்..அவள் காமேசரின் பார்வைக்கு மட்டுமே உரிய அழகையும் மென்மையும் கொண்ட துடைகளை உடையவள் என்கிறது இந்த நாமம். அழகொடு … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 38

38. ரத்ன கிங்கிணிகாரம்ய ரஶனாதாம பூஷிதா ( रत्न किङ्किणिकारम्य रशनादाम भूषिता )( ரத்னமயமான கிங்கிணி மணிகளோடு மனோஹரமாக இருக்கும் இடுப்புக்கொடியால் (மேகலைக் கொடி, ஒட்டியாணம் ) அலங்கரிக்கப்பட்டவள். ஒளிரும் இரத்தினமயமான கிங்கிணி என்று கிணுங்கும் ஒலி மணிகள் கோர்க்கப்பட்டு உளத்திற்கு இன்பம் சேர்க்கும் மேகலைக் கொடியால் அலங்கரிக்கப்பட்டவள் அன்னை என்பதே இந்த நாமம். … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment