Monthly Archives: January 2020

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 352

352. வஹ்னி மண்டல வாஸினி ( वह्निमण्डलवासिनी – அக்னி மண்டலத்தின் நடுவிலிருப்பவள் ) முன்னரே அன்னையைச் சூரிய, சந்திர மண்டலங்களில் வசிப்பவளாகக் கூறும் நாமங்களைக் கண்டோம். இப்போது இந்த நாமத்தின் வாயிலாக, அக்னி மண்டலத்தில் வசிப்பவளாகக் காண்கிறோம். மூலாதாரச் சக்கரத்தில் மூண்டெழு கனலாகும் சக்தி, அக்னி மண்டலமாக விளங்கும் மூலாதாரம்-ஸ்வாதிஷ்டான சக்கர இரட்டைகளில் வசிப்பவள். … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 351

351. வாமகேஶி ( वामकेशी – அழகிய கூந்தலுடையவள் ) வாம கேஶீ என்றும் வாமக ஈஶீ என்று இருவிதமாகவும் பிரிக்கக்கூடிய பதம். வாம என்றால் அழகிய என்று பொருள். கேஶீ என்றால் கூந்தல். அதனால் அழகிய கூந்தலை உடையவள் என்ற பொருள். இது முதல்விதம். வாமசாரம் எனப்படும் வழிபாடு செய்பவர்களின் ஈஶன் என்று பொருள்வரும்படியாக … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 350

350. (வாக்வாதினீ – वाग्वादिनी – பேசுகிற ஆற்றலைத் தருகிற தேவியாயிருப்பவள் ) கல்வி,கேள்விகளையும், கலைகளையும் தருகிற வாணியின் வடிவே வாக்வாதினி தேவியாம். இவள் ஶ்யாமளா தேவியின் துணை தேவதை. தாமரை மலர் மேல், எழுத்தாணி மற்றும் ஏடுகளையும் தாங்கியமர்ந்திருப்பாள். வெண்ணிறத்தாள், பேசும் ஆற்றலைத் தருகிறவள். வாக்கைத் தருமருள் வாணி வடிவிலே வாக்வா தினியாய் வருவாள்தாய் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 349

349. வந்தாரு-ஜந -வத்ஸலா (वन्दारुजनवत्सला – தன்னை வணங்குபவர்கள் பால் தாயன்பைக் கொண்டவள் ) பக்தர்களைக் குழந்தைகளாகப் பாராட்டித் தாயன்பைப் பாராட்டுவாள் அன்னை. மேற்கண்ட நாமத்தில் எல்லோராலும் வணங்கத்தக்கவளாய் அன்னையைக் கண்டோம். இந்த நாமத்தில் அவ்வாறு அன்னையை வணங்குதலையே விடாமல் செய்பவரான “வந்தாரு”க்களில் பிறந்திளைத்திறக்கும் “ஜந” எனப்படும் ஜீவர்களைத் தேற்றுவதில் தாய் குழந்தைபால் கொள்ளும் வாத்ஸல்யத்தைக் … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 348

348. வந்த்யா ( वन्द्या – வணங்கத்தக்கவள் ) எப்போதும், எல்லோராலும் எல்லாவித வளங்களும், நலங்களும் பெறுதற்காக மட்டுமல்லாது, பரகதிக்காகவும் வணங்கத்தக்கவள் அன்னை. எல்லோரும் எப்போதும் எல்லா வளங்கட்கும் நல்லவைக்கும் நாடுவது ஞாயையே – அல்லவை இல்லையென் றாக்கியே ஏற்றிப் பரஞ்செய வல்லாளை வாழ்த்தி வணங்கு

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 347

347. விமலா ( विमला – அப்பழுக்கற்றவள் ) அன்னை அவித்தையாம் ஞானக்கேட்டால் விளையும் எவ்வித அழுக்குமற்று (மலமற்று) விளங்குபவள். புருஷோத்தமம் என்றறியப் பட்ட ஜகன்னாதா க்ஷேத்திரத்தில் இப்பெயரிலே ஒரு ஶக்திபீடம் உள்ளது. அவ்விடத்தில் குடிகொண்ட அன்னைக்கு விமலா என்று பெயர். தேவச் சிற்பியாம் விசுவகர்மாவினால் நிர்மாணிக்கப் பட்ட “விமலம்” என்னும் மாளிகை வடிவில் உள்ளவள். … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 346

346. விஜயா ( विजया – தனித்துவமான வெற்றி கொள்பவள் ) அன்னையின் வெற்றி அகிலத்தின் வெற்றி; ஆக்கம் செய்யும் வெற்றி; சுயநலத்துக்கான வெற்றியல்ல. அதனால் அது சிறப்பு மிக்கது; தனித்துவம் வாய்ந்தது. காஶ்மீரத்தில் இருக்கும் ஶிவமூர்த்திக்கு விஜயன் என்று பெயர். அவரது வடிவாகவே இருப்பதால் அன்னைக்கும் விஜயா என்று பெயர். விஜயா என்றால் ஒரு … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 345

345. க்ஷேத்ரபால ஸமர்ச்சிதா ( क्षेत्रपालसमर्चिता – க்ஷேத்ரபாலரால் நன்கு ஆராதிக்கப்பட்டவள் ) பைரவ ஶிவ மூர்த்திகளில் ஒருவர் க்ஷேத்ரபாலர். ஶிவன், காலகண்டி என்னும் காளி அவதாரத்தை தாருக அஸுர வதத்திற்காக உற்பவித்தார். ஸம்ஹாரத்திற்குப் பிறகும் அவளின் கோபம் அடங்காததால், ஶிவனே ஒரு குழந்தை வடிவில் வந்து அழவும், தாய்மை உணர்வில் காளி அக்குழந்தையை எடுத்து … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 344

344. க்ஷயவ்ருத்தி விநிர்முக்தா ( क्षयवृद्धिविनिर्मुक्ता – குறைவதும்/தேய்வது, பெருகுவதும்/வளர்வது இல்லாதவள் ) அன்னையிடமிருந்தே க்ஷேத்திரம், க்ஷேத்திரஞ்சன் என்றவை தோன்றினாலும், அவற்றுக்குத் தேய்தலும், வளர்தலும் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன. இவை அன்னையின் அழிவில்லாத் தன்மைக்கு மாறானவை அல்ல. ஏற்கனவே பார்த்த விலாஸினி என்ற நாமத்தின்படி, இவையும் அவளின் அலகிலா விளையாட்டுகள். அன்னை முழுமையானவள்; ஒன்றைச் சேர்வதாலோ, … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம வெண்பாமாலை – 343

343. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ பாலினீ ( क्षेत्रक्षेत्रज्ञपालिनी – க்ஷேத்திரத்தையும், க்ஷேத்திரக்ஞனையும் காப்பாற்றுபவள் ) புலன்களுக்கும் பொறிகளுக்கும் எட்டாத, கருத்துக்கள் என்னும் கட்டுக்குள் அடக்கவியலாத அண்டாண்டங்களைப் படைத்து அவற்றுக்குள் எல்லாமாயும் இருக்கிற நித்திய மாயயையாம் அன்னை, தான் படைத்தவற்றையும், அவற்றுக்குள் இருக்கும் எண்ணுதலுக்கும் அரிதான எண்ணிக்கையிலுள்ள ஜீவர்களையும் காப்பாற்றுபவள் என்பதே இந்நாமம். அவளது நொடி நேர … Continue reading

Posted in Lalitha Sahasranamam | Leave a comment