குறளின் குரல் – 458

46: (Avoding Mean company – சிற்றினம் சேராமை)

[Right after the chapter on seeking and being with the eldely great soaked in ethics in knowledge and practice, this chapter focuses on not keeping and avoiding the company of mean and lowly beings Who are such people? Those who refute the good of the goodness as well as the bad of the meanness are such people. Such company, obfuscates the thinking and causes harm in this birth and the future births to come]
20th July 2013
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
                      (குறள் 451: சிற்றினம் சேராமை அதிகாரம்)
Transliteration:
siRRinam anjum perumai siRumaithAn
suRRamAch chUzhnidhu viDum
siRRinam – lowly beings of mean mindedness
anjum – will be feared and shuned
perumai – by great scholars with ethical conduct
siRumaithAn – only like-minded mean and evil people
suRRamAch – will keep them as their around
chUzhnidhuviDum – as their close kith and kin
As it appeals to the senses and ethics of individuals, they seek and form the people that are close to them. Great people of high ethics and erudition will fear and shun even the casual contact with people of mean mindedness and unethical characters and deeds. But, such friendships are accepted gleefully readily, by the like-minded mean people. After all they are already mean and they don’t fear such company and not care about ethical living anyways.
Kambar asks a question if it is proper to be in the company of such people, (“siRRinaththavaroDum seRidhal sIridhO?”).
UlaganAthar in ulaganIdhi work advises thus: not be in the company mean and vile people; also never mix with people that are poisonous in nature. (vanjanaigAl seivArODu iNanga vEnDAm, nanjuDanE oru nALum pazhaga vENDAm).
“Wise and scholarly will shun the company of mean and evil.
 Lowly and mean keep them as close kith and kin as their will”
தமிழிலே:
சிற்றினம் – சிறுமைக் குணத்தரோடு தற்செயலாக ஏற்படக்கூடிய தொடர்பினுக்கும்
அஞ்சும் – பயப்படுவர்
பெருமை – அருங்குணச் செல்வர்களான பெரியோர்
சிறுமைதான் – கீழ்மையே குணமாகக் கொண்டோர்தாம்
சுற்றமாச் – அவர்களை தங்களுக்கு உவந்த சொந்தமாக எண்ணி
சூழ்ந்துவிடும் – அவர்களை தங்களை சூழ்ந்து இருக்கச் செய்யும்
அவரவர் அறிவுக்கும், அறவழி சிந்தனைகள் ஒழுக்கக் கோட்பாடுகளுக்கும் ஏற்றார் போல்தான் அவர்களுக்கு அமையக்கூடிய சுற்றமாம் உறவும், நட்பும். பண்பும், அறமும் உடைத்தாய பெரியோர், சிறுமைக் குணத்தரோடு எவ்வித சேர்க்கையையுமே அஞ்சும். ஆனால் கீழான குணங்களோடு, அறநெறிகளில் ஒழுகாதோர்க்கு, அத்தகைய சிறுமை குணத்தரே உற்ற சுற்றமாகிப் போவர்.
கம்பர், “சிற்றினத்தவரொடும் செறிதல் சீரிதோ?” என்று கேட்கிறார். மற்றொரு கேள்வியும் கேட்கிறார் அவரே ஊர்தேடு படலத்தில், “ தெளிந்த சிந்தையரும் சிறியார்களோடு அளிந்த போதறிதற்கு எளிதாவரோ?” என்று.
கீழ்மையான குணமுடையவர்களே வஞ்ச நெஞ்சம் கொண்டவர்களும் ஆதலின், “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்”, ‘நஞ்சுடனே ஒருநாளும் பழகவேண்டாம்” என்றும் உலகநாதரின் உலக நீதியில் சொல்லப்பட்டிருக்கிறது.
இன்றெனது குறள்:
பெரியோர்தாம் கீழ்குணத்தர் சூழவஞ்சும் – கீழோர்
உரியசுற்றம் என்றுகொஞ் சும்
periyOrthAm kIzhguNaththa sUzhavanjum – kIzhOr
uriyasuRRam enRukon jum

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment