குறளின் குரல் – 6

9th April, 2012

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
                                    (kuraL128: அடக்கமுடமை அதிகாரம்)
Transliteration:
ondREanum  thIchchol poruTpayan uNDAyin
nandRAgAdaGi viDum
ondRAnum : Even if one word happens to be a curse among many words spoken, good and bad.
thIchchol:   bad words, curse, abusive word
porutpayan: the bad/undesired out come
                     (for example we often hear a parent cursing the child out of frustration that
                     He/She wished the child was not born or would die on the day it was born!)
undAyin: if comes true
nandRu AgAdhu:  undesirable outcome (because the words were not spoken from the heart)
Agi vidum – it would be.
Reading through several commentaries on this kuraL, it is evident, most of the commentators are very vague in explaining this kuraL and seem to be confused with the word “poruT payan”. Typically, the word “ payan” (பயன்) is used for utility. 
The intended meaning of this verse in the “adakkamudami chapter, under illaraviyal or araththup pAl , is indeed very straight forward.
We are often told not to use abusive or cursing expression, because even if one of them comes true, we may end up regretting for rest of our lives. For example, in most families, sometimes, between parents and children, or siblings or relatives, and sometimes between friends, out frustration, curses are hurled that somebody should die a horrible death or become a pauper or meet with some cruel fate.
Most of the times, these would be forgotten between the persons that were in some fight or misunderstanding. But, if something were to happen for the person that was cursed, the person cursed, regardless of how many other good words were spoken by the same, earlier or after would regret for rest of the life for having spoken such a curse.
Even if one bad/evil word comes true, that would bring an unpleasant out come within families.  This goes with the meaning of kuraL (128)  “yAkAvArAyinum nAkAkka” in the same chapter.
The very fact “vaLLuvan” (வள்ளுவர்) says “ nAndRu AgAdhu” (நன்று ஆகாது), and not “thIdhu Agi viDum” (தீது ஆகிவிடும்) , he implies that the curse words were spoken unintentionally among many nice words probably spoken prior to or after, may possibly come true. In our households, we normally hear our elders say, “speak auspicious words always and avoid ominous ones” for the same reason. There are “asthu” devathAs that may simply say, “asthu” meaning, “So be it!“.
 “Even if one evil word, that unintended brew
  May not bring good, and can bear true!”
தமிழிலே:
ஒன்றானுந் – பேசியவற்றுள் ஒரு சொல்லே (நல்லவை பேசினாலும், அல்லவை பேசினாலும்)
தீச்சொல் – தீய சொல்லாக, தீங்கு விளைவிக்கும் சொல்லாக இருந்து
பொருட்பயன் – விரும்பத்தகாத விளவு (உதாரணத்துக்கு, பெற்றோர்கள் சில சமயங்களில் “நீ பிறந்திருக்கும் போதே இறந்திருக்கலாம்” என்று கோபித்துச் சொல்லும் சுடுச்சொற்கள் கூட)
உண்டாயின் – அது உண்மையாகி விட்டால்
நன்றாகா(து) – அது நல்லது அல்ல.
ஆகி விடும் – ஏனெனில் அப்படி ஆகிவிடுவது உண்டு.
இந்த குறளுக்கான பலருடைய உரைகளும் ஒரே குழப்பமயமாக இருக்கின்றன. “பொருட்பயன்” என்ற சொல்லுக்கும் ஏன் இத்தனைக் குழப்பம்? பயன் என்பது ஒரு பொருளின் பயனாகும் தன்மை. சொல்லப்பட்ட பொருள் மிகவும் நேரானது.
பொதுவாக நம் வீடுகளிலில் சபிக்கும்படியாகவோ, தீங்கைக்குறிக்கும் சுடு சொற்களையோ பேசுதல் தவிர்க்கப்பட வேண்டுமென்பார்கள். ஏனெனில், அவற்றுள் ஏதேனும் ஒருசொல் உண்மையாகி விட்டால், பாதிக்கப்பட்டவர் மட்டுமன்றி பேசியவர்களும் கூட வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட நேரிடும்.  ஒரு குடும்பத்தில் பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும், அல்லது சகோதர சகோதரிகளுக்கிடையே, அல்லது சுற்றத்தார் மற்றும் நண்பர்களுக்கிடையே, சிறு கோபங்கள், வருத்தங்கள் காரணமாக, சொல்லத்தகாத சொற்களை சொல்லிவிடுவது உண்டு, பலசமயங்களில் அப்படியே நடந்துவிட்டால் அது உண்மையில் யாரை பாதிக்கும் என்று சிந்திக்காமல்.  (எடுத்துக்காட்டாக, ஒருவரை ஓட்டாண்டியகிவிட வேண்டுமென்று சபிப்பது, ஒருவருக்கு மிகவும் கொடி நோய் தாக்கவேண்டுமென்று கோபத்தில் சொல்வது).
சொன்னவரேகூட மறந்து, மீண்டும் இயல்புநிலைக்கு வந்து யாரைப்பற்றி சொன்னாரோ, அவரோடு மீண்டும் இயல்பான உறவில் இருக்கும்போது, சபிக்கப்பட்டவருக்கு முன்னர் சபித்தது உண்மையாகிவிட்டால்,  முன்னர் எத்தனத்தான் நல்லவை செய்திருந்தாலும், சொல்லியிருந்தாலும் அவையெல்லாம் பயனற்றுபோய்,  வாழ்நாள் முழுவது வருந்துவதுவல்லவா உண்மையாகிவிடும்?
முந்தைய குறளில் சொல்லப்பட்ட கருத்துக்கு அணுக்கமான கருத்தைத்தான் இக்குறளும் சொல்கிறது. தீது ஆகிவிடும் என்று உறுதிப்பட சொல்லாது, நன்று ஆகாது ஆகிவிடும் என்றதனால், “ஒருவேளை ஆகிவிடலாம்” என்கிற பொருளைத் தருகிறது.  வீட்டிலே பெரியவர்கள், நல்ல சொற்களேயே பேசவேண்டும், தீமையைச்சொல்லும் சொற்களைத் தவிர்க்கவேண்டும் என்பார்கள். ஒருவேளை, “நடக்கட்டும்” என்று சொல்லக்கூடிய தேவதைகள் இருந்து அவை தீயவற்றைச் சொல்லும் போது அவ்வாறு சொல்லிவிட்டால்? அதற்காகத்தான்.
இன்றெனது குறள்:
நாவூறும் தீயசொல் ஒன்றாலே நட்டமுறும்
நாசமுந்தான் சேர்ந்தி டலாம்!
nAvUrum thIyasol ondRAlE naTTamuRum
nAsamumthAn sErndhiDalAm

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment