குறளின் குரல் – 26

May 4th, 2012
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
                                             (குறள் 14: வான்சிறப்பு அதிகாரம்)
Transliteration:
eRin uzhAar uzhavar puyal ennum
vAri vaLankundrik kAl
eRin – with the plough (tilling implement for turning the soil)
uzhAar – won’t plough or till the soil
uzhavar– the ploughmen, farmers
puyal ennum – pregnant clouds that can pour to sumptuous rains
vAri – water
vALamkundrikkAl – if it is diminished in its wealth (of water content)
The farmers will not be able to till and farm the land to grow grains, vegetables and fruits if the clouds that gives water for the farmers, diminish in their wealth of water carried in them. Here is another verse which stresses the importance of rains from the perspective of farmers around the world.
Through this chapter, vaLLuvar tries to bring forth the importance of rains from different perspectives.In the first verse he generally likened the water to nectar of life. In the second verse, he detailed the importance of water for creating and sustaining the food chain including it self being a food. In the third verse, he portrayed a scenario of hunger as a fire engulfing the world if the water creating rains fail the world. Now the fourth verse talks about the rain again from the perspective of farmers and the ploughmen and says if the sumptuous rains don’t fall, there won’t be any work for farmers indicating the source of food chain will be affected.
The word “vAri”, though has two meanings – “income”, “water”; he has used it cleverly to imply both in one word. The research commentary by kI.vA.jA also points out another kuraL (512) where “vAri” has been used as an “income”.  It makes sense to think of “vAri” – water as an income to the world. In the economic sense, it becomes an investment for the farmers to farm for their gains. The connotation is that if the investment diminishes, production also reduces and hence the diminished economic prosperity.
The word “puyal” does not mean calamity-causing hurricane or how it has come to be understool in the language now. It implies the preganant clouds that are bountiful in the wealth of water they carry to give us good rains.
“ Farmers cease to plough and till the land to farm
  When the clouds not profuse in their wealth norm”
ஏரின் – நிலத்தைத் திருத்தும் உழவுக்கருவியாம் ஏர்
உழாஅர் – உழவுத் தொழிலைச் செய்யாமல் போவர்
உழவர் – உழவுத் தொழிலைஇ செய்பவர்கள்
புயல் என்னும் – மழையை நிறைவாகத் தரக்கூடிய நீர் சுமந்த மேகங்கள்
வாரி – நீராகிய வருவாய் (சுமந்த மேகங்கள்)
வளங்குன்றிக் கால் – தங்கள் நீர்வளம் குறைந்து இருந்தால்
தமிழிலே:
நீரென்னும் வருவாயை சுமந்து வரும் மேகங்கள், தங்களுடைய வளம் குன்றி, மழைவளம் குறையுமானால், ஏர்பிடித்து பயிர்விளைக்கும் விவசாயிகளும், தங்கள் தொழிலை செய்யமுடியாமலிருப்பர்.
இந்த அதிகாரம் முழுவதுமே வானிருந்து பொழியும் மழையின் சிறப்பை பல்வேறு கோணங்களில் அலசுகிறது. முதலில் அமுதமாகிய வான்மழைநீர், இரண்டாவதாக உணவுப் பொருள்களை விளைவித்து, உணவுச் சங்கிலியியின் மூலமாக இருப்பதோடு, தானும் உணவாக அமைந்த நீர்,  மூன்றாவதாக எப்படி மழையின்மை பசியென்னும் தீயினால் உலகை அழித்துவிடும் என்கிற உண்மை, நான்காவதான இக்குறளில், மழையின் வளம் குன்ற எப்படி உழவுத்தொழிலும் அற்றுப் போகும் என்கிற பார்வை, என்று பல தளங்களில் ஒரு பொருளைப் பற்றி அழகாக அலசுகிறார் வள்ளுவர்.
“வாரி” என்ற சொல்லுக்கு “நீர்”, “வருவாய்” என்ற பொருள்கள் உண்டு. மழையென்னும் வருவாயே, உழவர்களுக்கு முதலீடாய் இருந்து அவர்கள் வருவாய்க்கு வழி செய்தலால் அச்சொல்லை வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் என்று எண்ணவும் முடியும்.  வள்ளுவரே கூட “வாரி பெருக்கி” (குறள் 512) என்று வருவாய் என்னும் பொருளிலும் கூறியிருப்பது தெரிகிறது. (நன்றி: கி.வா.ஜ வின் ஆய்வுரை)
“புயல்” என்கிற சொல்லும், இன்று கொள்ளப்படும் பொருளான, அழிவைத் தரும் சூறாவளியைப் போன்ற உருவகத்தில் ஆளப்படவில்லை. மாறாக நீரைத் தன்னுள் சுமந்து பொழியவரும் மேகங்களைத்தான் குறிக்கிறது.
இன்றெனது குறள்:
வான்மாரி வற்றுங்கால் வேளாளர் வேளாண்மை
தான்மாறிப் பாழா குமே

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment