குறளின் குரல் – 29

May 7th, 2012
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
                                                        (குறள் 17: வான்சிறப்பு அதிகாரம்)
Transliteration:
nedunkaDalum thannIrmai kundRum thaDindhezhili
thAn nalgAdhAgi vidin
nedunkaDalum – the wide sea
thannIrmai  – its wealth of water
kundRum – will wane, depreciate, diminish, dwindle
thaDindhu – ezhili – thunderbolts- clouds (clouds with thunderbolts)
thAn  – it self
nalgAdh(u) Agi vidin – fails to gift or give
vaLLuvar understands the eco blance of the world so well, the importance of seas and the sea-borne wealth for the world. He makes an observation that if the clouds with thunderbolts don’t give their seasonal endowments, even the sea with vast waterbody and its hidden wealth will diminish and drain (eventually).
There is no system in the universe that has endless supply gifts without being replenished routinely. There is Tamil adage that comes to mind. ‘kundhith thindRAl, kunDrum kundRum’ (குந்தித் தின்றால் குன்றும் குன்றும்), meaning, if we keep draining a source, without working to get the source replenished, even a mountainous amount of wealth  will diminish and vanish.
Though the verse is written to stress the importance of rains, it also highlights the importance our working for survival, and implies that nothing can sustain without a source of income, including what seems an eternal source of supply.
Reading through the chapter on glory of rains, we can not miss the hidden insistence on the virtue based life for all of us. It is simply not the glory of the rains that seems to be talked about. It is a hidden awareness to make sure that rains continue to pour to sustain life on earth. In a ways, there is an implied chain reaction here. There is a Tamil verse which says thus:
“vEdam Odhiya vEthiyarkku Or mazhai,
nIthi mannar neriyinArkku Or mazhai,
mAthar karpudai mangayarkku Or mazhai
ena mAtham mummAri mazhai peyumE”
So, for orderly functioning of forces of nature also, life on earth should tread the virtuous path.
தமிழிலே:
வள்ளுவர், உலகச் சுற்றுசூழலின் சமநிலையைப் பற்றிய அறிவை மிகவும் நுணுகி அறிந்திருப்பதை இக்குறள் தெரிவிக்கிறது.  கடலும், கடல் சார்ந்த வளமும், உலகத்தின் வாழ்வாதாரங்கள் என்றும், அவையும் கூட குறைந்து மறைந்து விடும், மின்னல் சுமந்த மேகங்கள் பொழியாவிட்டால் என்று  கூறுகிறார்.
கடல் என்றாலே பெரியது. நெடுங்கடல் என்றால், பரந்து விரிந்து, கடல் சார் வளங்களெல்லாம், குறையாத செல்வம் நிறைந்து இருப்பதையே காட்டுகிறது. குந்தித் தின்றால் குன்றும் குன்றும் என்ற பழைய வழக்கிலிருக்கும் வாக்கு நினவுக்கு வருகிறது. “குன்றும் குன்றும்” என்றதை, குறையும் என்பதை அழுத்தி, உரத்துச் சொன்னதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அல்லது குன்றனைய செல்வமும், என்று மலைப்பிற்குரிய அளவைச் சொன்னதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
அது போன்ற மலைப்பிற்கும், குறையவே குறையாது என்ற நினைப்பையும் நம்முள் விதைக்கிற மாபெருங்கடலும், மழையென்னும் பருவம் சார்ந்த கொடையில்லையென்றால், தன்னுடைய வளத்தில் குறைவுபடும் என்பதை வள்ளுவர் நமக்கு நினைவுபடுத்துகிறார். 
ஒன்றைப் பற்றிச் சொல்வது, அதைப்பற்றிய பெருமையை சொல்வதற்காக மட்டும் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அப்பெருமைக்குக் காரணமான அப்பொருளின் வளங்கள் குன்றாமலிருக்க, அதற்குண்டான கொடையாளியும் தன்னுடைய பங்கைச் செய்யவேண்டும்; உலகுள்ளோரும் அதற்குண்டான, அறங்களோடு வாழவேண்டும்; இதற்கான அறநெறி சார்ந்த வாழ்வின் முக்கியத்தைத் தான் மீண்டும் மீண்டும் வள்ளுவரும் வலியுறுத்துவதாக தெரிகிறது.
நெடுங்கடலும் – பரந்த விரிந்த கடலும்
தன்நீர்மை  – தன் வளங்களானது குன்றி (கடல் வளமும் நம் வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று)
குன்றும் – குறைந்து போகும்
தடிந்தெழிலி – தடிந்து எழிலி – மின்னல் மேகங்கள் (மின்னலுடன் கூடிய மேகங்கள்
தான் – அதுவே
நல்காதாகிவிடின் – கொடுக்காமல் விட்டால்
Wide seas wane in wealth of water when
The clouds with thunderbolts gift none.
இன்றெனது குறள்:
குன்றிடுமே நீள்கடலும் தன்வளத்தில் வான்மேகம்
தின்றுவாரி பெய்யா தெனின்

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment