குறளின் குரல் – 36

May 15th, 2012
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
                                              (குறள் 25: நீத்தார் பெருமை அதிகாரம்)

Transliteration:
aindhaviththAn AtRal agal visumbuLAr kOmAn
indhiranE sAlum kari
aindhaviththAn – Those who have quelled the desires of the five sense (the ascetic)
AtRal – their might and power
agal  – the wide expanse of the skies
visumbuLAr – those who live in heavenly skies
kOmAn – the head of all heavely skies
indhiranE – Indira
sAlum – can be spoken about as
kari – as a witness (example)
In this verse, vaLLuvar once again talks about the glory and power of ascetics that have renounced the desires driven by the five senses, by subtly reminding the plight of Indira, all powerful chief of heavenly skies, as an example. Indira, being conceited because of his immense power and status the king of heavenly skies, wrongly desired the wife of Sage Gauthama.
When the sage became aware, he cursed Indira with one thousand female genitals (Sahasrayoni), which put him to shame. Sage Gauthama’s power and compassion were once again demonstrated by converting the same in to eyes, when Indira repented and requested salavation from the curse;  and then Indira came to be knows as “thousand eyed” (Sahasraaksha).
There is no doubt or question about vaLLuvar’s belief in the IthihAsas and purANAs during his times, when we read this reference in this verse. Obviously he had known the story of Gauthama and the curse that was given to Indira and perhaps the story of Ahalya’s redemption from the curse of Gauthama through Rama’s feet touching the rock that she was converted to by Gauthama’s curse.
It is definitely believable that he would not have just cited this as an example if he thought this was an imaginary story, especially when he has advocated seriously with sincerity, about being truthful. Even as a metaphor, he would have not mentioned an imaginary character, when he talks about the austere path. When there are many instances of curses, given by similarly powered sages in many other mythological stories, to highlight the fact that even the most powerful can be rendered powerless before such elevated people of austere path, vaLLuvar has chosen this example, which is truly genius of vaLLuvar.
“king of heavens Indira serves , a witness to the might
Of the renouncer of five senses, a cite  by  His plight”
தமிழிலே:
ஐந்தவித்தான் – பொறிகள் ஐந்தையும் அடக்கி வென்றவரின்
ஆற்றல் – திறனுக்கு
அகல்  பரந்து விரிந்திருக்கும் வானகத்து
விசும்புளார் – வாழும்  வானவர்களின்
கோமான் – தலைவனான
இந்திரனே – இந்திரனே (கௌதம முனிவரின் மனைவி மீது ஆசைகொண்டு அவரிடம் சாபம் பெற்ற வரலாறே)
சாலும் – சொல்லக்கூடியது
கரி – சாட்சியாக
இக்குறளிலும் பொறிகளை வென்றவர்களின் சிறப்பைக் கூறும்விதமாக, இந்திரனுக்கு கௌதமமுனிவர் கொடுத்த சாபத்தை நினைவுபடுத்தி, கௌதமுனியின் தவவலிமையினால் எல்லா வல்லமையும் பொருந்திய இந்திரனுக்கே கேடு வருமெனில், அத்தகைய துறந்தாறது பெருமை எத்தகையதாக இருக்கவேண்டுமென்று சுட்டிக்காட்டுகிறார்.
வள்ளுவருக்கு புராண இதிகாசங்களில் நம்பிக்கையிருந்திருக்குமா என்ற சந்தேகம் இக்குறளைப் படிப்போர் எவருக்கும் எழமுடியாது. இந்திரனின் சாபம் பற்றி அறிந்தவருக்கு, அதை கொடுக்கும் ஆற்றலுடைய கௌதமமுனிவரின் வரலாறும், அம்முனிவரின் சாபத்திலே கல்லாய் சமைந்த அவருடை மனைவியாம் அகலிகையின் வரலாறும், அவள் இராமனின் பாதம் பட்டு சாபம் நீங்கப்பெற்ற வரலாறும் நிச்சயமாகத் தெரிந்துதான் இருக்கவேண்டும்.
இதைகூட, சிலர் எடுத்துக்காட்டுக்காகச் சொல்லப்பட்ட ஒரு கற்பனை உருவகமாகச் சொல்லுவர். ஆனால் வாய்மையைப்பற்றியும் அறவொழுக்கத்தைப் பற்றியும் ஆய்ந்து, உணர்ந்து எழுதிய வள்ளுவர், சாட்சியென்று சொல்வதை ஒரு கற்பனைக் கடவுளை வைத்துச் சொல்லுவாரா? 
தவத்தினர் வலிமையைக் கூற எத்தனையோ புராண, இதிகாச எடுத்துக்காட்டுகள் இருந்தாலும், ஒரு உயர்ந்த பதவியிலிருப்போரின் ஆற்றலையும் விஞ்சக்கூடியது என்று, பொதுவழக்கில் எல்லோரும் அந்நாளில் அறிந்திருந்த இவ்வரலாற்றை கூறியது நிச்சயமாக வள்ளுவரின் சிறப்புதான்.
இன்றெனது குறள்:
வான்றலைவன் வாசவனே சான்றாம் பொறிவென்றார்
ஆற்றலினைச்  சாற்றுதற் கே

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

1 Response to குறளின் குரல் – 36

  1. பாரதிரஞ்சித் says:

    ஐந்தவித்தான் – ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவன்
    ஆற்றல் – வலிமை
    அகல் – அகன்ற
    விசும்புளார் கோமான் – வானத்திலிருக்கின்ற அரசன் = இந்திரன்
    சாலுங்கரி – சான்றா கக் கூறகூடியவன் ஆவான்

Leave a comment