குறளின் குரல் – 59

8th June, 2012
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
                                (குறள் 49: இல்வாழ்க்கை அதிகாரம்)
Transliteration:
aRanenap paTTadhE ilvAzhkkai ahdhum
piRan pazhippdhillAyin nadRu
aRanenappaTTadhE – Of all virtuous paths, the true and greater one is
ilvAzhkkai – the life of household (as it throws a lot of challenges from multiple people on multiple ways)
ahdhum –  that too
piRan – if others (especially the people of virtuous traits)
pazhippdhillAyin – don’t cast aspersions or speak slanderously
nadRu – it is good.
If we have to take the direct and straightforward meaning of this verse, we understand that this glorifies the life of household as “the” virtuous way, that too if if does not subject itself to others aspersions or vilifications.
Commentator Parimelazhagar, has meant the word “ahdum” in the verse as “the lives and ways of ascetics”. When something is highlighted and spoken about in glorious ways, we can say that “that is the best way or thing”, that too subjecting “that” to some specific constraints, limits.  The direct reading conveys that vaLLuvar has also done the same here.
He says that, the household life conducted without vilifications or aspersions is the best virtuous life. Directly or indirectly he does not mean the ascetic path, as it does not fit the context of this verse. It may simply be a good imagination on the part of Parimelazhgar (with all humility, he is still the best commentator of this monumental work) to construe it that way.
AuvayyaAr in her impactful work “kondRai vEndhan” says, ‘illaRamalladhu nallaRam andRu” (There is no greater virtuous way other than the life of a household). Other commentators MaNakkudavar and ParidhiyAr have taken the direct meaning.
What was the need for this kuraL? Having said about the “virtous house holders and households” in comparison with others or other ways, and how they/it should be, he wants to dedicate the last two verses of this chapter to the “glory of householders”. Living the life of a householder, is rid with challenges from many corners, people, situations; that too continually through the long and ordeal years of that path. The life of household is often referred to as “SamsAra sAgaram” (life that is ocean). A successful householder is one who is able to swim across all these and be able to live without slander or words of blams from others.
“Definition of virtuous life is epitomized by the life of household
That too, when it does cast the aspersions of others in the world”
தமிழிலே:
அறனெனப்பட்டதே – இதுதான் அறநெறி என்று சொல்லத்தக்க ஒன்று (“ஏ” கார விகுதி, சிறப்புக்காக)
இல்வாழ்க்கை – இல்லற வாழ்க்கைதான் (மற்ற நெறிகளில் பலவழிகளிலும், பலருடைய பக்கத்திலிருந்தும், சந்திக்க வேண்டிய சவால்களும், சோதனைகளும் குறைவு. இதில் அறநெறியென்பது, கடினமான ஒன்று)
அஃதும் – அந்த இல்லறமும்
பிறன் மற்றவர்கள் (குறிப்பாக நல்லறத்தில் நின்ற மற்றறத்தாரும், பிற இல்லறத்தார்களும்)
பழிப்பதில்லாயின் – பழிக்கும் படியாக, தூற்றும் படியாக வாழும் இல்லறம்
நன்று – மிகவும் நல்ல வாழ்க்கை.
இக்குறளை நேரடியாக பொருள் செய்வோமேயானால், இல்லறத்தை உயர்த்திச் சொல்லுவதாக, அதுவே மற்றைய அறவழிகளில் மேற்பட்டதாக, அதுவும் பிறர் பழிக்கும், தூற்றலுக்கும் ஆளாகாத ஏற்றமுடன் செய்யபடுமானால், சொல்லப்படுகிறது.
பரிமேலழகர் உரையின் படி, “அஃதும்” என்பது துறவறத்தை குறிப்பதாக கொள்ளப்படுகிறது. ஒன்றின் உயர்வைச் சொல்லும் போது, அதுவே சிறந்தது என்று கூறலாம், அதுவும் எப்போது என்று, சில வரையரைகளைச் சொல்லி. அதைத்தான் வள்ளுவரும் செய்துள்ளார். தூற்றப்படாமல் நடக்கும் இல்லறமே, அறவாழ்வு எனப்படுவது என்று மட்டுமே பொருள் கொள்ளவேண்டும். சொல்லப்படாத துறவறத்தை கொண்டு கூட்டி பொருள் கொண்டது, நல்ல கற்பனையென்று வேண்டுமானாலும் கொள்ளலாம்.
இதே பொருளில்தான், ஔவையும், கொன்றை வேந்தனில், “இல்லறமல்லது நல்லறமன்று”  என்றார். மணக்குடவர், பரிதியார் போன்றவர்கள் நேரடிப்பொருளையே கொண்டுள்ளனர்.
இல்வாழ்க்கையைச் சிறப்பித்துச் சொல்ல காரணம், அது மற்ற நெறிகள் போல் அல்லாது, குடும்பம், சமுதாயம் என்று பலரோடு இணந்து அன்றாடக் கடமைகள் செய்து, பல சிக்கல்களையும், சோதனைகளயும், சந்திக்க வேண்டிய வாழ்க்கை. நெறி தவறி நடப்பதற்கான கட்டாயங்களும், சூழல்களும் மிகுந்தது. இதனால்தான் “சம்சார சாகரம்” – “இல்லறக் கடல்” என்றதும்.  இத்தகைய வாழ்க்கையில், பிறர், குறிப்பாக நல்லோரும், மற்றெல்லோரும் தூற்றாமல் நடத்தப்படும் இல்லறமே நல்லறம் என்பதற்காகவே எழுதப்பட்குறள் இது.
இன்றெனது குறள்(கள்):
(நேரடிப் பொருளிலும், பரிமேலழகர் செய்த உரைப்படியும் எழுதப்பட்டவை)
குறள் -1  (நேரடிப் பொருள்)
இல்லறமே ஏற்றமிகு நல்லறமாம் – அல்லறமாய்
நல்லுலகம் தூற்றா தெனின்
குறள் -2 (பரிமேலழகர் உரைப்படி)

ஈரறத்தில் இல்லறமே மேலாம் – துறவறத்தில்
பாரிகிழா பாங்கே சிறப்பு

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment