குறளின் குரல் – 72

22nd  June, 2012
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
                   (குறள் 62: மக்கட்பேறு அதிகாரம்)
Transliteration:
ezhupiRappum thIyavai thINDA pazhipiRangA
paNbuDai makkat peRin
ezhupiRappum – in all seven births (due to causal effect of our deeds)
thIyavai – ill effects, troubles
thINDA  – wont touch us
pazhipiRangA – if, blame free
paNbuDai  –  virtuously behaved
makkat  –  children
peRin –  we have.
This verse, states that if parents have blamefree children with good virtuous character, their life will not be ill-fated or full of troubles, trials and tribulations, not only in this birth but in all their seven births.

Andal in her two passurams mentions about “eZhEzh piravi”. So  is Sundarmoorthi nAyanAr in his ThiruvAlankATTu padhigam. The concept of eZehEzh piravi makes it “seven times seven” which is 49 births.  vaLLuvar mentions seven births. We don’t how many real births are there, which is a matter beyond our surmise and is cannot be questioned because it is also a matter of theology. Regardless, based on ones good and bad deeds in one life will be the subsequent lives.

Without bothering about the seven births, even in this life, having virtuous children will not let any tribulations affect us a in a big way.

When children are of blamefree character, worries of woes won’t touch
The parents for all their seven births, as they are blessed souls as such
தமிழிலே:

எழுபிறப்பும் – ஏழு பிறவிகளிலும் (வினை வயத்தால் நமக்கு கிடைக்கும் ஏழு பிறவிகளிலும்)
தீயவை – துன்பங்களும், நன்மையல்லாதவையும்
தீண்டா – அடையாது (நம்மை)
பழிபிறங்காப் – பழிச்சொல்லுக்கு ஆளாகாத
பண்புடை  – பண்பு குணநலங்களை உடைய
மக்கட் – மக்கட்செல்வம்
பெறின் – கிடைக்கப்பெற்றால்
இக்குறள், பழிச்சொல்லுக்காளாகாத, பண்பு நலன்களை உடைய நன்மக்கட் பேறினால், ஒருவருக்கு அவருக்குண்டான ஏழு பிறவிகளில் எவ்வித துன்பமும் அடையாது என்கிறது.

“இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடே உற்றோமேயாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று” என்கிறது ஆண்டாளின் பாசுரம் ஓரிடத்தில் “இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மையுடையவன் நாராயணன் நம்பி செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் என்கிறாள் நாச்சியார் திருமொழியில். “எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழேழ் படிகால் எமையாண்டபெம்மான் ஈமப் புறங்காட்டிற் பேயோடாடல் புரிவானேஎன்கிறது சுந்தரமூர்த்தி நாயானாரின் திருவாலங்காட்டுப் பதிகம்.

இவர்கள் வாக்குகள் படி ஏழேழ்பிறவி என்பது நாற்பத்தொன்பது பிறவிகள் ஆகிவிடுகிறது. வள்ளுவரோ ஏழு பிறவிகள் என்கிறார். இது என்ன கணக்கு என்று புரிவது ஒருபக்கம் இருந்தாலும், ஒருவர் செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப, அவர்களுக்கு பல பிறவிகள் உண்டு என்பது ஒரு இந்திய நம்பிக்கை.  எண்ணிக்கை எதுவாக இருந்தால் என்ன?  ஏழு பிறப்புகளில் எப்படியோ, இப்பிறப்பிலேயே பண்புநலமிக்க பிள்ளைகளால் பெற்றோருக்கு ஒரு தீமையும் நடவாது என்பதே அறிய வேண்டிய கருத்து.

இன்றெனது குறள்:
தீமைகள் சேரா எழுமையும் தீப்பழிஇல்
நேமமிகு மக்கள் உற.

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment