குறளின் குரல் – 110

30th  July, 2012

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
                       (குறள் 100:  இனியவை கூறல் அதிகாரம்)
Transliteration:
Iniya uLavAga innAdha kURal
Kaniiruppa kAi kavarndhtRu
Iniya – sweet words that do good and are vituous
uLavAga  – knowing such words (not possessing exactly. Knowing is appropriate here)
innAdha – useless and harsh words that are painful to others as well as to self at the end.
kURal – speaking such
kaniiruppa  – where there is ripe fruit
kAi  – bitter, sour, hot raw vegetables
kavarndhtRu – desiring and insisting as better taste
When there are words replete with goodness, benefit and virtue, knowingly if someone chooses to use bad, offensive, harsh words towards others, it is like choosing a bitter raw vegetable over a ripe fruit. Whose lose or pain is it? The consumer’s!
Some raw vegetables ripe and become sweet. There are words said with intention to mend somebody, to steer them in the right path or to give a bitter pill for their own goodness. They are not referred to here. Bad and harsh words have no such process to become sweet words with time.
Ripe chillies are still hot and ripe bittergourds are still bitter. Nux vomica (Strychnine) vegetable can cost life for anyone. Such are the words that cause pain to the person consuming them. Some swaggering types do things or say words just to put off and be offensive to others. When someone says that he or she likes the jackfruit, and if the other would insist bittergourd as their choice that would only mean they are simly smug and brash. Who is going to suffer the bitterness and pain associated?
Speaking harsh while sweet words of virtue are a plenty
Is choosing the bitter and bad raw to the ripe fruit, as tasty
தமிழிலே:
இனிய – நன்மையும், அறத்தையும் உணர்த்தும் இனிய சொற்கள்
உளவாக – அறிந்திருந்தும் (இருப்பது என்பது மொழியின் வளம், அறிவது என்பது அறிவனது ஆற்றல்)
இன்னாத – பயன் தராத, கடுஞ்சொற்களை, பிறருக்குத் முதலிலும், முடிவில் தனக்கேயும் துன்பத்தைத் தருகின்ற
கூறல் – பேசுதல்
கனிஇருப்பக் – நல்ல இனிய சுவையுடைய பழங்கள் கையிலே இருக்க அவற்றைப் புறந்தள்ளி
காய் – பாகற்காய், எட்டிக்காய் என்று சுவையில்லாத சொற்களை
கவர்ந்தற்று – சுவையென்று அறியாமையில் எண்ணிச் சொல்வதுபோலாகும்
நன்மையையும், அறத்தையும் உணர்த்தக்கூடிய இனிய சொற்கள் எவ்வளவோ இருக்க, அவற்றை அறிந்தும், பயனிலாத, கடுஞ்சொற்களை பிறறிடத்தில் பேசுதல் என்பது, நல்ல பழவகைகள் இருக்க, துவர்ப்பும், கசப்பும் மிக்க காய்களைத் தேடி உண்ணுவதுபோலாம். இவை உண்பவருக்கே துன்பத்தை விளைவிக்கக்கூடியன.  
சில காய்வகைகள் கனிந்து பழமாகி சுவையாகும் தன்மையுடையன. அதுபோல ஆகும் சொற்கள் ஏதுமில்லை. ஆனால் சிலசமயங்களில் சுடுசொல், கசப்பும் மருந்தாகி விடுதல் போலச் சொல்லப்படுவதுண்டு.  அவற்றைப்பற்றியும் இங்கு கூறப்படவில்லை.
மிளகாய் பழுத்தாலும் காரம்தான். பாகற்காய் பழுத்தாலும் கசப்புத்தான். எட்டிக்காய் பழுத்தாலும் பழுக்காவிட்டாலும், உயிருக்கே உலைவைக்கக்கூடியது.  இவ்வகைக் காய்களைப் போன்றனவாம் துன்பத்தைத் தரும் சொற்கள்.  இக்குறள் ஒருவர் வீம்புக்குத் தெரிவு செய்யும் பாதையையும் குறிக்கிறது. சிலர், உனக்குப் பிடித்தது பலாப்பழமா, எனக்குப் பிடித்தது பாகற்காய் என்பார்கள். யாருக்கு அதனால் வரும் கசப்பும், துன்பமும்? அதுபோன்றதே கனியிருக்க காயே மேல் என்போரது வீம்பும்.
இன்றெனது குறள்(கள்):
கனியதற்கு காயதுவே மேலென்போர் போலாம்
இனியசொற்கள் இல்லாதார் பேச்சு
பழமிருக்க பாகற்காய் போலாமே இன்சொல்
பழகாது இன்னாச் சொலல்

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment