குறளின் குரல் – 118

7thAug, 2012

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
                                 (குறள் 108:  செய்நன்றியறிதல் அதிகாரம்)

Transliteration:
nandRi maRappadhu nandRanRu nandRalladhu
andRE maRappadhu nandRu
nandRi  – The help done by someone
maRappadhu  – forgetting that
nandRanRu – is not good or virtuous act for anyone
nandRalladhu – Similarly, if others have done any harm
andRE – the same day
maRappadhu – forgetting it
nandRu – Is good.
We should never forget those who meant good to help us and their help; but we should forget if somebody means and cause harm to us, the same day. This is definitely possible for people of good virtues.
A friendship between two is holds if at least one of them is patient when situations of differences arise. Of course, it can’t be the same person always.  vaLLuvar, in a different verse says that those who mean and cause harm should be forgiven, which stands the best way to punish them (இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் ). Those who have conscience will definitely regret their bad deeds to others and will mend themselves.  In a different chapter on keeping patience, he says that being patient is good, but forgetting harm caused by others is better than that.  There is a subtle psychological binge here by vaLLuvar. Sometimes, being patient for a long time and at the same time keeping the animosity or anger inside can erupt later in the worst form; but forgetting helps to move on without harboring ill feelings inside.
vaLLuvar keeps bringing all these inter-related virtuous thoughts under different headings just to emphasize each virtuous attribute for its own merit and to show the interconnectedness of these; By reading them in different contexts again and again, one must able to imbibe them innately – the power of repetitiveness.
 “Forgetting the good help done by someone is bad
If it is otherwise, forgetting it the same day is good”
தமிழிலே:
நன்றி – ஒருவர் செய்த முன் செய்த உதவியினை
மறப்பது – மறந்து போவது
நன்றன்று – என்றும் ஒருவருக்கு அறமாகாது
நன்றல்லது – அதே போல் பிறர் செய்த தீமைகளை
அன்றே – உடனேயே
மறப்பது – மறந்துவிடுதல்
நன்று – நல்லதாம்
நமக்கு நன்மை தரக்கூடிய உதவிசெய்தவரையும், அவர் செய்த உதவியையும் ஒருநாளும் மறக்கக்கூடாது. நன்றியறிந்த நல்லோர் அவ்வாறு செய்யார். அதேபோல், ஒருவர் நமக்கு நன்மை செய்யாது தீங்கு நினைப்பாராகில், அல்லது தீங்கான செயல்களைப் புரிவாராயின், அவற்றை உடனே மறந்துவிடுதல் நல்லது. இது நல்ல குணத்தை உடையவர்களுக்கு எளிதே.
ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது போல, தீங்கு நினைப்பவர்களிடத்தில் பொறுமையைக் கடைபிடிக்கும் நல்ல குணத்தினருக்கு, நட்பு வலுப்படும்.  “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்று வள்ளுவரே கூறியிருப்பதால், தீங்கை மறத்தல் நல்லது என்பதால், அதுவே இன்னா செய்தாரை தண்டிக்கும், அவர்கள் மனசாட்சியை உறுத்தக்கூடியதாக இருக்கும். பொறுத்தலைக் விட மறத்தல் சிறந்ததென பொறையுடைமை அதிகாரத்தில் வள்ளுவர் கூறுகிறார், இவ்வாறு: “ பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று”. 
மறக்கச் சொல்வதில், ஒரு உளவியல் நிலைப்பாடும் தெரிகிறது. பொறுமை என்ற பெயரில் அடக்கிவைத்து, ஆத்திர ஊற்றாகப் பெருக்கெடுப்பதைவிட மறந்துவிட்டால், உள்ளே புகைந்திகொண்டிருப்பது எரிமலையாயிராது என்பதனால் மறத்தலை இரு இடங்களிலும் வற்புறுத்தியது.
ஒன்றுக்கொன்று தொடர்புடைய குணநலன்களைப் பற்றி பேசுகிற வெவ்வேறு அதிகாரங்களில், வள்ளுவர் குணநலன்களின் தொடர்பை வலியுறுத்துகிற, நினைவுறுத்துகிற விதமாக ஒரே போன்ற கருத்துக்களை கூறுவது சிந்திக்கத்தக்கது. அவை நம் மனதில் ஆழமாக வேறூன்றி விடவேண்டும் என்கிற முனைப்பு வெளிப்படுகிறது.  மீண்டும் மீண்டும் சொல்வதின் பயனது.
இன்றெனது குறள்:
நன்றன்றே நன்றி மறத்தல் – மறப்பது
நன்றாமே அல்லவையன் றே

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment