குறளின் குரல் – 137

26th  Aug, 2012

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
                          (குறள் 127:  அடக்கமுடைமை அதிகாரம்) 

Transliteration:
yAkAvArAyinum – Even if none other faculty is  restrained
nAkAkka – one must certainly keep their tongue in control
kAvAkkAl – if not done,
sOgAppar – that will cause them misery
sollizhukkuppattu – because of the inappropriate speech of theirs
This verse is one of the most used verses as a quote. Among the five senses, tongue is just not an organ of taste of food, but tasteful words too. For other sensory organs, there is no way of expressing the happiness or sadness or other emotions, other than the reactions of the organs as a chemical reaction. But the tongue can express in words every emotion.
By saying good things it can bring happiness all around or by saying otherwise, it can bring harm to others as well to the the person of acidic tongue.
Knowing what, where, why, how to say anything that too in a way it is of use to others is an art. Without such restraint, what use is it to have a tongue? Tamil is a unique language, where we have celebrated a person as for his gift of language and the purpose for which it was used by calling him “ThirunAvukkarasar”.  This it self is a thought not to be found in any other world language. The saint poet even shows his blessings as a rightful pride by saying “my tongue is blessed to utter the word namasivaya. Who can be better than I?
This verse says: One must not say anything that is unfit to be said, and that cause, knowingly or unknowingly harm to others. They will only reap the pains of that “sow” hence utmost restraint must be applied to the tongue.
Restraint the tongue, even if others aren’t, is imperative
Else, face respurcussions of pain and grief, distressive.
தமிழிலே:
யாகாவாராயினும் – எப்புலனை அடக்காவிட்டாலும்
நாகாக்க – ஒருவர் தன்னுடைய நாவையாவது அடக்கிக்கொள்ளவேண்டும் (பேச்சுக்காகி வந்தது)
காவாக்கால் – அப்படி அடக்காவிட்டால்
சோகாப்பர் – துன்பமுற்று, சோகத்தை அடைவர்
சொல்லிழுக்குப் பட்டு– தம்முடைய தவறான, குற்றமுள்ள பேச்சினால்
மிகவும் அதிகமாக பேச்சுவழக்கிலே ஆளப்படுக்கிற குறள்களில் ஒன்று. ஐம்புலன்களின்களிலே “நா” என்பது சுவையறிந்து உண்பதற்கான உறுப்பு மட்டுமில்லை. பேச்சிலும் சுவையைக் கூட்டி பிறருக்கு இன்பத்தை தரக்கூடியது. மற்ற உறுப்புகளுக்கில்லாத சிறப்பு கூடிய உறுப்பு. மற்ற புலன்களால் அறியக்கூடிய இன்பமும் துன்பமும் இத்தகையது என்பதைச் சொல்லக்கூடிய உறுப்பு. நல்லன சொல்லி பிறர்க்கு நலனும், அல்லன சொல்லி அதனால் பிறருக்கும், முடிவிலே தனக்குமே துன்பத்தைத் தரக்கூடிய வல்லமை உடைய உறுப்பு.
சொல்லும் சொல்லறிந்து, பொருளறிந்து, சுவையறிந்து, பயனறிந்து சொல்லாமல் போனால், சொற்களைச் சொல்லும் நாவுக்கு என்ன பயன்? நாவால் நற்றமிழில் நாளும் பாடியவரை திருநாவுக்கரசர் என்று வேறெந்த மொழியிலும் இல்லாத ஒரு சிறப்புப் பெயரால் அழைத்துள்ளோம். வேறெந்த உறுப்புக்கும் இல்லாத சிறப்பு இது, வேறெந்த மொழியும் கொள்ளாத சிந்தனையிது.
நாவுக்கரசர் தன் நா செய்த நல்வினையாலே தனக்கு சிவாயநம என ஓதக்கிடைத்தது என்று பெருமிதமே கொள்கிறார். “நான்செய்த புண்ணிய மியாதோ சிவாய நமஎனவே  ஊன்செய்த நாவைக்கொண் டோதப்பெற்றேன்எனை ஒப்பவரார்”
சொல்லத்தகாதவற்றையும், பிறருக்கும் அறிந்து அறியாமலும் துன்பத்தை விளைவிக்கும் சொற்களை சொல்கிறவர்கள் அதனால் பின்விளையும் துன்பங்களுக்கு சோகத்தினை அடைவர். அதனால் ஒருவர் தன்நாவை பயனில சொல்லாமல் காப்பாற்ற வேண்டும்.
இன்றெனது குறள்:
நாவடக்கம் கொள்ளார்க்கு தம்சொல்லால் தாமிழிவு –
காவதன்றோ ஆயின் அழகு?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

3 Responses to குறளின் குரல் – 137

  1. SR says:

    Is Thiruvalluvar saying "You don't have to lie. But, you don't have to say the truth."? I'm a bit confused by what is being proposed here: Isn't honesty about being truthful and straightforward under all circumstances? Sudharsan

  2. அன்பு சுதர்சன்: இது இக்குறளுக்காக நீங்கள் இட்ட கருத்தா? பொய்மையும் வாய்மை எனப்படும் குறளுக்காக இடப்பட்டது என்று நினைக்கிறேன். அவரிட்ட கருத்து ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை நடத்தலாம் என்கிற சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கினை ஒட்டியிருக்கலாம். அரிசந்திரனைப்போல், ஆயிரம் வரினும், இழப்பினும் பொய்சொல்லமாட்டேன் இருந்தவருக்கு தமிழ் சினிமா, தொலைக்காட்சி நாடகங்களைப் போல, இறுதி விநாடிகளிலு வேண்டுமானலும் இன்பமான முடிவாக இருக்கலாம், வாழ்வில் நடைமுறையில் அது எத்துணக் கொடுமையென்று உணர்ந்தவர்களுக்குத்தான் புரியும். ஆனாலும் ஒரு நிலைப்பாடு என்று எடுத்துக்கொண்டு விட்டால், அதில் உறுதி வேண்டும். "எக்காரணம் பற்றியும், எந்தவொரு சூழலிலும் பொய்யில்லா, உண்மையைக் கடைபிடிப்பேன்" என்ற நிலையே உயர்வானது.

  3. .... says:

    Hi, I can't read tamil :).The first line of my comment should have been…Is thiruvallur saying "You should not lie. But, you don't have to say the truth".

Leave a comment