குறளின் குரல் – 215

13thNovember, 2012

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
               (குறள் 206: தீவினையச்சம் அதிகாரம்)
Transliteration:
thIppAla thAnpiRarkaN seyyaRka nOippAla
thannai aDalvENDA dhAn
thIppAla – what is evil or sinful deeds
thAn – a person
piRarkaN  – towards others
seyyaRka – don’t do
nOippAla – harm and sin that come because of such deeds
thannai – to the person
aDal –  to come or surround
vENDAdhAn – if does desire that
Those who desire no sin to come to them or surround them should not do evil deeds or sinful deeds towards others. As every action has an equal or even more than equal – amplified reaction when it comes to sinful, evil deeds, they will yield sinful deeds as well as the pains associated with them towards the doer, multifold.
piRarkkinnA muRpagal seyyin thamakkinnA piRpagal thAmE viLaiyum” is what vaLLuvar says in a different place. This verse says the same thing in the context of this chapter. Another subtle idea is that, at least for the selfish reasons of not having hardship because of own sinful deeds, one may not consider doing such things to others.
To emphasize a single idea, different ways are tried by vaLLuvar in different chapters. By saying good things will result out of good deeds is one way. Another way is to say the same as a con-join of two negatives to suggest a deterant. –  “Bad things will be the result of bad deeds!” Both are agents of action in different ways – one is encourage doing good deeds and the other one is to be devoid of bad deeds.  

Kaliththogai, a significant work of Sangam Anthology, says “ Idhalin kuRaivu kATTAdhu aRanaRindhu ozugiya thIdhilAn selvam pOla”. One is devoid of evil intentions because of knowledge of virtue and practices that. What comes out of such posture? Having all the Wealth is result of such virtuous character. Again here is an incentive to be good is shown. This is the same technique employed by vaLLuvar in the negative context..
“Never do harmful evil things towards others
If desire no pain yielding sins to follow hither”
தமிழிலே:
தீப்பாலதீமையைத் தரக்கூடியவற்றை
தான் – தான்
பிறர்கண்  – மற்றவர்களுக்கு (எவருக்குமே)
செய்யற்க – செய்யாதிருக்க வேண்டும்
நோய்ப்பால – அதனால் விளையும் துன்பங்களும், பாவங்களும்
தன்னை – தன்னை
அடல் – அணுக, சூழ, பின் தொடர
வேண்டாதான் – வேண்டாதவர்கள்
தமக்கு துன்பங்களைத் தரும் பாவங்கள் வராமலும், சூழாமலும், வருத்தாமலும் இருக்க விழைகின்றவர்கள், யார்க்கும் தீவினைகளை செய்யக்கூடாது. பிறருக்கு தீமை செய்பவர்களுக்கு, எதிர் வினையாக பாவங்களும், அதனால் தீமைகளும், அவற்றால் துன்பங்களுமே வந்து சேரும். பிறருக்குத் துன்பங்கள் விளைவிப்பதாக எண்ணி தீமை புரிபவர்களுக்கே தீமைகளும் துன்பங்களும் சேரும்.
“பிறர்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே விளையும்” என்னும் குறளை ஒட்டியதே இக்குறளின் கருத்தும். தவிரவும், தமக்கு துன்பம் வந்துறுமே என்ற சுயநல காரணத்துக்காகவாவது, பிறருக்குத் தீமை செய்யாதிருப்பர் என்ற காரணத்துக்காகவும் இவ்வாறு சொல்லியிருக்கலாம்.
நன்மையைச் சொல்லி தீமையை செய்யாதொழிக்குமாறு அறிவுறுத்துவது ஒரு வகை. செய்யாதிருப்பதால் வந்துறும் துன்பத்தைக்கூறி அச்சப்படுத்தி அறிவுறுத்துவது மற்றொரு வகை. 

கலித்தொகைப் பாடல் : “ஈதலின் குறைவு காட்டாது அறனறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல” என்று கூறும். அறனறிந்து ஒழுகிய தீதிலான் என்று சொல்வதோடு நில்லாமல், அதனால் வருவது செல்வம் என்றதனால் அதுவே தீவினையற்று இருத்தலுக்கு ஒரு ஊக்கியாகிறது. அதேபோல, தீவினை செய்வதால் துன்பம் வரும் என்பதால் தீவினை விலக்கலுக்கு ஊக்கியாகிறது.
இன்றைய குறள்:
துன்பஞ்செய் பாவங்கள் சூழவேண்டார் தீவினையை
என்றென்றும் யார்க்கும்செய் யீர்
thunbanjchei pAvangaL sUzhavENDAr thIvinaiyai
enRenRum yArkkumsey yIr

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment