குறளின் குரல் – 239

7th December, 2012

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
               (குறள் 230: ஈகை அதிகாரம்)
Transliteration:
sAdhalin innAdha dhillai inidhadhUum
Idhal iyaiyAk kaDai
sAdhalin – Other than the very thought of death or that itself
innAdhadhu – more painful thought
illai – there is none
inidhadhUum – But even that is pleasurable
Idhal – to be charitable
iyaiyAk kaDai – unable to be (charitable)

Death is painful incident, memory, especially when it happens to near and dear ones; it is most feared one also for most people. But even that is pleasurable, compared to not being charitable to the needy. This is an epitome of comparison. A definition of how charity should be. Is it possible in real life or in nature?
In MahAbhAratA, KarNa feels choked that he has nothing to give to the poor brAhmaN who has come to him seeking help. Then when KrishNA in disguise as brAhmaN points out that he can give his accumulated account of good deeds (puNyA) as his charitable giving, without thinking he gives it all to KrishNA. He does it knowingly that he would lose his life if he did that and ArujunA was ready to kill him when this last shield of KarNA was removed. This is a beautiful scene portrayed in the epic MahAbhAratA about the act of charity.
Is death painful? Though the birth and death are part of nature for everything, the thought of not being able to see something ever again is painful. Old Tamizh works like aganAnURu, nAlaDiyAr, and kaliththogai all have verses of poetry that point to the “thought” expressed in this verse.
With this verse, vaLLuvar complete this chapter on charity – once again pointing out the greatness of charity and the act or devoid of that act in people.
“Misery of death is pleasurable when compared
 To the pain of inability to do charity open handed”
சாதலின் – இறந்து போகப்போகிறோம் என்னும் எண்ணமும், இறந்துபடுதலும்
இன்னாதது – துன்பம் தருவன.
ல்லை – ஏதுமில்லை
இனிததூஉம் -ஆனால் அதுவே இனிமை எனலாம்
ஈதல் – பிறர்க்கு ஈதலாகிய நற்செயலை
இயையாக் கடை- செய்யமுடியாமல் போகும்போது
இறப்பு என்பது ஒரு துன்பமான நிகழ்வு, நினைவு, அதுவும் நெருங்கியவர்களுக்கு நிகழ்ந்தால். ஆனால் அதுவும் இன்பமே, பிறர்க்கு ஈதல் செய்ய முடியாமல் போவதை விட. இது ஒரு ஒப்பீட்டின் உயர்ச்சி. ஈகை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதன் வரையறை. இயற்கையில் இது நிகழுமா?
மாபாரதப்போரில் கர்ணன், ஒரு சில விநாடிகள் தன்னை அண்டி, தானம் யாசிக்கும் கண்ணனுக்கு கொடுக்கவொன்றுமில்லையே என்று வருந்தினாலும்,  தன்னுடைய புண்ணியங்களின் பலன்களை கொடுப்பதால், தன்னுடைய உயிரையே இழக்க நேரிடுமென்று அறிந்தும் உவகையோடு கொடுக்கிற காட்சி உண்டு. அது இத்தகைய ஈகையை காட்டும் சித்திரம். தருமம் தலையைக் காக்கும், அது நீங்கினால் தலையை எடுக்கும் என்பதையும் உணர்த்தும் சித்திரம்.
சாதல் என்ன துன்பமா? பிறந்து முடிதல் இயற்கையெனினும், மீண்டும் சேரமுடியாத பிரிவு துன்பமே. “சாதல் அன்ன பிரிவு” என்கிறது அகநானூற்றுப் பாடல், (339:14). கலித்தொகைப் பாடல் (43:26.7), “இன்மையுரைத்தார்க் கதுநிறைக்கா லாற்றாக்கால் தன்மெய் துறப்பான் மலை” என்கிறது, ஈகையை தன் உயிரினும் மேலாக நினைப்பாரை.
நாலடியார் பாடல் பசியால் வாடிவருபவருக்கு, உள்ளிருந்தும், ஒன்றுமே ஈயாதான், இருப்பதைவிட இறந்து வானுலகுக்கு விருந்தாவதே  நன்று என்கிறது. இருந்து-வுக்கு எதுகையாக விருந்து இருந்தாலும், ஈயாத கருமிகள் எப்படி வானுலகிற்கு விருந்தாவர்? வேண்டுமானால் நரகத்திற்கு விருந்தாகலாம்.
உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்(கு)
உள்ளூர் இருந்தும்ஒன் றாற்றாதான் – உள்ளூர்
இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய்
விருந்தினன் ஆதலே நன்று
மற்ற அதிகாரங்களைப் போலவே, மனிதருக்கு இருக்கவேண்டிய பண்பின் பலகூறுகளைக் கூறி, அஃதில்லாமையின் இழிதலையும் கூறி இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார் வள்ளுவர்!
இன்றெனது குறள்:
ஈதல் இயலாத இன்னாவின் மேலினிதாம்
சாதலே துன்பமாயி னும்
Idal iyalAdha innAvin mElinidhAm
sAdhalE thunbamAyi num

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment