குறளில் குரல் – 260

 26:  (Shunning Meat eating)

[Some of these chapters reveal the high plane thinking vaLLuvar’s times, of not killing any life for ones own survival. Though the date of vaLLuvar is not clearly known to historians, he is admittedly the first poet to be socially conscious of 3 important tenets of life and wrote about them as part of his colossus work. Only kindered hearts can have such high thinking. It has two important aspects. Kiling of anything unless it is of life threatning nature is sinful; secondly it is only possible for people that are kind at heart. Some people claim vaLLuvar was a Jain, because of his vegetarian orientation. But as part of Sanyasa as prescribed by Adi Sankara, renounced people will not kill other lives for their survival]
28thDecember, 2012
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
               (குறள் 251: அருளுடமை அதிகாரம்)
Transliteration:
thannUn perukkaRkkuth thAnpiRidhu UnUnpAn
enganam Alum aruL
thannUn – ones own flesh (body)
perukkaRkkuth – to grow (flesh)
thAn piRidhu Un UnpAn – One that ears Other lives flesh,
enganam – How can
Alum – have
aruL – kindness?
How will the person, that kills other life forms just to nourish his/her own body, be merciful or kind in heart towards other lives? vaLLuvar has written this verse looking down upon such beings. The body made of flesh is not permanent. Thinking so, to preserve and sustain it, if someone kills other lives, it is a selfish act; Contemporaneous thoughts of similar nature are abound through many literary works of Sangam and later periods.
Sangam literature such as iniyavai nArppadhu (Sweet attributes 40), innA nArppadhu (Bitter attributes 40), siRu pancha mUlam, sIvagachinthAmaNi, all in unison condemn meat eating. All these works have been done mostly by later Bhuddist or Jain poets; those religions categorically denounce meat eating across the board. The Hindu thought on such matters Is more practical and does not advice so for everyone; It understand that people that on go war or out of place on business need to survive first and be able to accept what they get on their way.
The five major kAvyAs of Tamil, mostly the works of monks of Bhuddism and Jainism, all insist on not eating meat. SIvagachinthAmaNi says meat eaters will only goto hell. ILangOvadigaL, author of most celebrated work silappadhikAram insists forcefully, “uN uN thuramin, uyirkkolai nIngumin, uyirkonRuvAzhum nAL seyyanmin” (Forego meat eating, Drop killing, Don’t live your days by killing other lives). Another major work vaLaiyApathi, which is not available in full, has a large number of poems which again preach about this. It calls meat eaters as, people that are not thinking the virtuous ways!
“How would those that kill other lives and selfishly fend
be kind and virtuous in thoughts or acts or think to mend?”
தன்னூன் – (தன் ஊன்) தன்னுடைய (சதையால் ஆகிய) உடம்பை
பெருக்கற்குத் – வளர்ப்பதற்காக
தான் பிறிது ஊனுண்பான் – தான் மற்ற உயிர்களின் உடம்பினை (சதையினை)  உண்பவர்கள்
எங்ஙனம் – எவ்வாறு
ஆளும் – கொள்வார்கள்
அருள் – பிற உயிர்களின் மேல் அருளை?
தன்னுடைய உடலை வளர்ப்பதற்காக பிற உயிர்களை தானே கொன்றோ, அல்லது பிறரைக்கொண்டு கொல்வித்தோ, உணவாகக் கொள்பவர், பிற உயிர்களினிடம் அருளோடு எவ்வாறு இருக்கமுடியும்? ஓர் இகழ்ச்சி ஓசையோடு இதைச் சொல்லுகிறார் வள்ளுவர். சதையால் ஆகிய இவ்வுடல் நிலையாதது; இதை நிலையென்று கொண்டு, இதை வளர்ப்பதற்காக பிற உயிர்களைத் துன்புறுத்தும் மனிதர்கள், நிலையானதொரு பதவியைத்தரும் அருளுடமையை பிற உயிர்களிடத்தில் எவ்வாறு கொள்வர் என்று வினவுகிறார்.
இனியவை நாற்பது, “ஊனைத்தின்று  ஊனைப் பெருக்காமை முன்னினிதே”. என்கிறது. இதையே இன்னா நாற்பது, “ஊனைத்தின்று ஊனைப் பெருக்கல் முன் இன்னா” என்கிறது. சிறுபஞ்சமூலம், “ஓர்த்துடம்பு பேருமென்றூனவாய் உண்ணானேல்” என்கிறது சிறுபஞ்சமூலம். சமண இலக்கியமான சீவகசிந்தாமணியில், “ஊன்சுவைத்து உடம்பு வீக்கி நரகத்தில் உறைதல்” என்று ஊன் உண்ணலை நரகத்தில் வைக்கும் செயலாகச் சொல்லுகிறது.
இளங்கோவடிகளும், சிலப்பதிகாரத்தில், “ஊனூண் துறமின்! உயிர்க்கொலை நீங்குமின்!”உயிர் கொன்றுஉண்டு வாழும்நாள்
செய்யன் மின்;” என்கிறார்.
வளையாபதி என்னும் பெருங்காப்பியத்திலிருந்து, (முழு காப்பியமும் கிடைக்கவில்லையாயினும்), பிற இலக்கியங்களிலும், அவற்றின் உரைகளிலும் காணப்படும் மேற்கோள் செய்யுள்களைத் தொகுத்து, செய்யப்பட்ட “புறப்பாடல் திரட்டு” என்ற நூலும் புலால் மறுத்தலை பல இடங்களில் வலியுறுத்துகிறது. எடுத்துக்காட்டாக இச்செய்யுளைப் பார்க்கலாம். “காது உயிர் கொல்வானின் மிகாமைஇலை பாவம்
அவாவிலையில் உண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலை விலங்காய்ப் பொறாதுபிற ஊன்கொன்று
அவாவிலையில் விற்பானும் ஆண்டு அதுவே வேண்டுமால்.”
இதையும்விட, “அறவகை ஓரா விடக்கு மிசைவோர்”, என்று அறமுறைகளை ஆராய்ந்துணராமல் ஊன் தின்பவர், என்று புலால் உண்பவர்களச் சாடுகிறது.
இன்றெனது குறள்:
மற்றோர் உயிர்கொன்று தம்முடல் பேணுபவர்
அற்றோர் அலவோ அருள்?
maRROr uyirkondRu thammuDal pENUbavar
aRROr alavO aruL?

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment