குறளின் குரல் – 283

20thJanuary, 2013
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
                   (குறள் 274:  கூடாவொழுக்கம் அதிகாரம்)
Transliteration:
thavamaRaindhu allavai seydhal pudhalmaRaindhu
vETTuvan puLsimizth thaRRu
thavamaRaindhu – hiding under the guise of an ascetic
allavai seydhal – doing unfitting deeds to that status is like
pudhalmaRaindhu – hiding behind the bushes
vETTuvan – a hunter
puL – a bird (“puL” is a common word for birds)
simizththaRRu – to entrap or capture.
Hiding behind the mask of an ascetic, doing deeds not befitting the code of conduct for that status, is like a hunter hiding behind the bushes waiting to capture and entrap the birds for killing. Parimelazhagar in his commentary sees a symbolism here. He likens the bird to other women that a rogue ascetic is trying to covet. Whether or not if this women chasing ascetics were common during vaLLuvar’s time, obviously this has been witnessed during Parimelazhagar’s time. In fact it is a record of social ills of his time.
This verse does not say something different from what it has said in other places, except the metaphor of hunter hiding behind the bushes for a bird is new to highlight the same.
“Doing deeds unfitting, under the hood of an ascetic, is like a hunter
 Trying to hide behind the bushes to entrap birds to kill for his hunger”
தமிழிலே:
தவமறைந்து – தவ வேடத்தில் ஒளிந்து கொண்டு
அல்லவை செய்தல் – அக்கோலத்துக்கு ஒவ்வாதன செய்வது
புதல்மறைந்து – புதருக்குப் பின்னால் ஒளிந்து நின்று
வேட்டுவன் – வேடன்
புள் – ஏதேனும் பறவையினை (புள் என்பது பறவையினங்களைக் குறிக்கும் பொதுச் சொல்)
சிமிழ்த்தற்று – பிடித்து அகப்படுத்துவதற்கு
தவவேடத்தில் மறைந்துகொண்டு அக்கோலத்துக்கு ஏற்றவாறு இராமல், அல்லன செய்தல், வேடன் பறவைகளைப் பிடிப்பதற்கு புதருக்குப் பின்னே மறைந்து நின்றலை ஒக்கும். பரிமேலழகர் பறவையைப் பிடிப்பதற்கு இணையாக போலிவேட தவசியர் பிறர்குரிய மகளிரைத் தன்னுடைய தீயெண்ண வலையில் சிக்க வைத்தலை சுட்டுகிறார். சமூகத்தில் வள்ளுவர் காலத்தில் எப்படியோ, பரிமேலழகர் காலத்தில் போலி தவசிகள் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டது தெரியவருகிறது.
பிற இடங்களில் சொல்லப்பட்டகருத்துதான் எனினும், புதர் மறைந்து பறவை பிடிக்கும் வேடுவரின் உவமைக்காக எழுதப்பட்ட குறளாகத்தான் இது தெரிகிறது.

குறளுக்குத் தொடர்பில்லாத ஆனால் சுவையான ஒரு விலகல், அதுவும் குறளில் காண்கின்ற
“புள்” என்பது பறவையினத்தைக்குறிக்கும் சொல்லைப்பற்றி. நளவெண்பாவில்
தாள்நிறத்தால் பொய்கைத் தலம்சிவப்ப – மாண்நிறத்தான் முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்அன்னப்புள் தோன்றிற்றே ஆங்கு” என்று அன்னப்பறவையைக் குறிக்கப் புகழேந்தி சொல்லுவார். அப்பாடலில் “மாண்நிறத்தான் முன்னப்புள்” என்ற சொல்லாடல் கவிநயமிக்கது. “மாண் நிறத்தான் முன்”,  “அப்பு உள்” என்று பிரித்து பொருள்கொண்டால், மாண் நிறத்தானாகிய நளன்முன், நீருள் என்னும் பொருளில் வரும், அன்னங்கள் தங்களைப்பற்றிச் சொல்லும் பாடலொன்றிலும், பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமவள்தன்” என்று அன்னங்கள் தங்களைப் பறவையினங்களாகச் அடையாளம் காட்டுவதைக் காண்க,

இன்றைய குறள்:
வேடர் புதரொளிந்து புள்பிடித்தல் போல்தவ
வேடத்தர் செய்யும் அவம்
vEDar pudharoLIndhu puLpiDithhal pOlthava
vEDaththar seyyum avam

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment