குறளின் குரல் – 366

13th April 2013
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
                            (குறள் 358: மெய்யுணர்தல்  அதிகாரம்)
Transliteration:
piRapennum pEdhamai nIngach siRappennum
semporuL kaNbadhu aRivu
piRapennum – What is called a rebirth
pEdhamai – an illusory stupor
nIngach – for it to die or be removed
siRappennum – what is considered the ultimate goal, the celestial seat
semporuL – that which is higher truth
kaNbadhu – to see and realized that
aRivu – is sensible
For the ignorance, the reason for birth on earth again to die or be removed, one must be sensible to find out the celestial abode, the glorious one as the highest truth.
In the phrases that “birth as ignorance” and “the heavenly above as the high truth” vaLLuvar cites the deeds as the reasons for ignorance and realizing the high truth respectively. With unnecessary desires, senses are clouded and because of which the misery of birth-death is accorded to a person. Among all that to attain, celestial abode is the best; hence that has been called the best. This verse should not be construed to say that the celestial abode as the best higher truth. Since by reaching the Godhead who is the higher truth, one will beget the celestial abode, which is what is implied here.
“For the ignorance that the birth is, to be removed, heavenly abode,
The higher truth as sensible path must be seen as the one to tread”
தமிழிலே:
பிறப்பென்னும் – மீண்டும் பிறத்தலுக்கு காரணமாய
பேதைமை – அறியாமை அல்லது மயக்கம்
நீங்கச் – ஒழிய, மாய
சிறப்பென்னும் – சிறப்பானதாகக் கொள்ளப்படும் வீட்டுப் பேறு
செம்பொருள் – என்னும் செவ்வியதான மெய்ப்பொருளைக்
காண்பது – கண்டு, உணர்வதே
அறிவு – அறிவுடமையாகும்
மீண்டும் பிறத்தலுக்குக் காரணமாய அறியாமையாகிய மயக்கம், மாய்ந்து போக, அல்லது ஒழிந்துப்பட, சிறப்பென்று கொள்ளப்படுவதான வீட்டு பேறாம் செவ்வியதான மெய்ப்பொருளை, கண்டு உணர்வதே அறிவுடமையாகும்.
பிறப்பென்னும் பேதைமை என்றும் சிறப்பென்னும் செம்பொருள் என்றும் செயல்களை காரணமாக சொல்கிறார்.தேவையில்லாத இச்சைகளினால் அறிவு மயக்கம் ஏற்படும் என்றும் அதனால் பிறந்திறக்கும் அவத்தையும் கூட ஏற்படும். எல்லாப்பொருள்களிலும் சிறந்தது வீடு என்பதால் அதையே சிறப்பு என்று கூறுகிறார். வீடு என்பதை மெய்ப்பொருளாக இக்குறள் சொல்லுவதாகத் தோன்றினாலும் மெய்ப்பொருளாம் இறையுணர்வை அடைய, அதன்காரணமாக வீடென்னும் பேறும் கிடைக்குமாதலால், வீடு என்பதையே மெய்ப்பொருளின் மேல் ஏற்றிச் சொன்னார்.
கம்பன் பல நேரங்களிலும் வள்ளுவன் சொற்களையே தன் பாடல்களில் கையாண்டிருக்கிறான். பிறப்பென்னும் பேதைமை என்பதை, “பேதைமைத் தாய்வரும் பிறப்பை நீக்குவான்” என்று மந்திரப்படலத்திலும், “பிறத்தலாற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை” என்று இராவணன் வதைப் படலத்திலும் சொல்கிறான்
இக்குறளின் முற்றுக்கருத்தையும் சொல்லும்படியாக இவ்வாறும் கம்பன் பாடுகிறான். இதுவும் மந்திரப்படத்தின்கண் வருவது.
“ அருஞ்சிறப் பமைவரும் துறவும் அவ்வழி
  தெரிஞ்சுற வெனவரும் தெளிவு மாய்வரும்
  பெருஞ்சிறை உளவெனிற் பிறவியென்னுமிவ்
  விருஞ்சிறை கடத்தலின் இனிய தியாவதே”
இன்றெனது குறள்:
மயக்கமாம் மாயப் பிறப்புமாய மேன்மை
உயர்பொருள் உள்ளல் உணர்வு
mayakkamAm mAyap piRappu mEnmai
uyarporuL uLLAl uNarvu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment