குறளின் குரல் – 386

3rd May 2013
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
                              (குறள் 378: ஊழ் அதிகாரம்)
Transliteration:
thuRappArman thuppura villAr uRaRpAla
UttA kazhiyu menin
thuRappAr man – Will take an ascetic pursuit
thuppura villAr – those who have nothing to enjoy out of poverty
uRaRpAla – misery that befalls because of fate
UttAkazhiyum enin – if they will wither away not botherin
This verse implies that even pursuit of asceticism is the result of fate. When the miseries that befall because of the power of fate, remove themselves, the people that have nothing to enjoy because of poverty will pursue asceticism, is what is said in this verse by vaLLuvar; or it is how, interpreted by most commentators!
It is acceptable that the “reap” of good deeds in previous births is the ascetic path in this birth; also it is true that the people with self-control of senses are the ones who will take that path.  But to interpret that self-control is because of poverty is a stretch of imagination on the part of commentators.
Reading the verse as, “thuppravillAr uRarpA UttAkazhiyum enin thuRappArman”, we can interpret as follows: Those who don’t desire pleasures of senses, and also are devoid of the worldly attachments, both by the design of the fate, will seek ascetic path. This interpretation of fate being the catalyst for ascetic pursuit is more acceptable.
“Free of desires, devoid of miseries, the pure
 Will seek ascetic path driven by fate, for sure.”
தமிழிலே:
துறப்பார்மன்துறவறத்தை மேற்கொள்ளுவர்
துப்புரவில்லார் வறுமையினால் நுகருவதற்குரியன இல்லாதார்
உறற்பால – ஊழ்வலியால் வந்துறும் துன்பங்கள்
ஊட்டாகழியும் எனின்– வந்து வருத்தாமல் நீங்குமானால்
இக்குறள் துறவறமும் ஊழால் அமைவது என்கிறது.  விதியின் வலிமையினால் வந்துறூம் துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால், வறுமையின் காரணமாக நுகருவதற்குரிய ஏதும் இல்லாதார், துறவறத்தை மேற்கொள்ளுவர் என்கிறார் வள்ளுவர் இக்குறளில். இவ்விளக்கமே மற்ற உரையாசிரியர்கள் கூறுவது.
முற்பிறப்புகளின் நல்வினைப்பயனே துறவறம் என்று கொண்டாலும், புலனொடுக்கம் கொண்டவர்களே அதை மேற்கொள்ளுவர் என்பதும் உண்மையானாலும், அந்த புலனொடுக்கம் வறுமையினால் எவ்வித நுகர்ச்சியும் இல்லாததினால் என்பது சரியாக இல்லை. 
“துப்புரவில்லார் உறர்பால ஊட்டாகழியும் எனின் துறப்பார்மன்” என்று படித்தால், இன்பங்களின் நுகர்ச்சியினைக் கொள்ளாதார், ஊழ்வினையால் வந்து உறுத்தும் துன்பங்களாய, உலகியல் பற்றுகள் இல்லாமல் கழியுமானால், துறவறத்தைக்கொள்ளுவர் என்பது துறவறத்துக்கான ஊக்கியாக ஊழ் இருப்பதைக் காட்டுகிறது. இதுவே சரியான பொருளாகவும் இருக்கும்.
இன்றெனது குறள்:
துறவும் வறுமையா னாகும் நுகர்ச்சி
அறதுன்பும் அற்ற தெனின்
thuRavum vaRumaiyA nAgum nugarchchi
aRathunbum aRRa dhenin
படிக்கும்போது,”துறவும், வறுமையான் ஆகும் நுகற்சி அற, துன்பும் அற்றதெனின்” என்று படிக்கவும். இது மற்ற உரையாசிரியர்கள் பொருள் செய்தவறு எழுதப்பட்டது. நான் பொருள் கொண்டவாறும் ஒரு குறள் எழுதியுள்ளேன். அது இதோ.
நுகர்வறுத்தோர், ஊழ்செலுத்தும் துன்புமில்லா தூயோர்
உகந்துலகில் கொள்வார் துறவு
nugarvaRuththOr, Uzhseluththum thubumillA thUyOr
ugandhulagil koLvAr thuRavu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

1 Response to குறளின் குரல் – 386

  1. துப்புரவு – தூய்மை; நுகர்ச்சிப்பொருள்; ஐம்பொறிநுகர்ச்சி; அனுபவம்; திறமை; முறைமை; மேன்மை; வேண்டற்பாடு; அழகு.
    துப்புரவு என்ற சொல்லுக்கு அகராதியில் இடம்பெற்றுள்ள பொருள்களில் நுகர்ச்சிப்பொருள், ஐம்பொறிநுகர்ச்சி, திறமை, முறைமை ஆகிய பொருள்களை எடுத்துக்கொண்டால் இக்குறளுக்கு நல்ல ஒரு பொருள்ளை நாம் கண்டு அடையலாம்

    ஒருவருக்கு நுகர்ச்சிச் செய்கிறப் பொருள்கள் இல்லையேல் அதாவது அவர் வறியவராக இருப்பினும், ஐம்பொறிகள் காட்டும் புலனின்பங்களை நுகர வேண்டும் என்று நாட்டம் இல்லையென்றாலும் (அவர் துறவறம் பூண எல்லா மனதகுதிகளும் இருப்பினும்), ஒருவருக்கு திறமை இல்லையென்றாலும் அதில் இருந்து தப்பிக்க துறவறம் பூண வேண்டும் என்று நினைத்தாலும், ஒருவருக்கு துறவறம் பூண முறைமையில்லை (ஊழ்யில்லை) என்றால் தனது ஊழின் விதியால் அவர் துன்பங்கள் நீங்காமல் அதனை அனுபவிப்பார். அவரால் துறவறம் பூண முடியாது/மாட்டார். ஆதலால் துறவறம் என்பது தப்பித்துக்கொள்ளும் ஒரு வடிகால் அல்ல. துறவறம் பூணுவதற்கும் ஊழ்தனில் விதிக்கபட்டு இருக்கவேண்டும் என்றென்கிறார் திருவள்ளுவர்.

    https://dailyprojectthirukkural.blogspot.com/2020/07/Kural378.html

Leave a comment