குறளின் குரல் – 412

3rd Jun 2013
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
                         (குறள் 404: கல்வி அதிகாரம்)
Transliteration:
kallAdhAn oTpam kazhiyanan RAyinum
koLLAr aRivuDai yAr
kallAdhAn – one who is uneducated
oTpam – intelligence
kazhiya – in excess
nanRAyinum – if it is good
koLLAr – won’t be considered seriously
aRivuDaiyAr – educated people
Uneducated, yet genius persons have always lived through the pages of history, accomplishing significantly, sometimes, more than the most educated ones. Undoubtedly, education is important to everyone. But that alone does not guarantee intelligence. There are many past and present examples in the Universe that have shown many gems of individuals that have lived an exemplified life with utmost intelligence.
Regardless how it was during the age of vaLLuvar, the thought expressed in this verse is not an accepted one today, including by the learned. Parimelazhagar compares such intelligence of uneducated to, random lines drawn by snails’ movement, which looks like meaningful text.
The verse says thus: The intelligence of uneducated person, however much appreciable, the educated won’t take it seriously. There are references to similar thought  in Pazhamozhi and Sirupanchamoolam.
“The intelligence of uneducated is never taken seriously
 by the erudite community, however impressive obviously”
கல்லாதான் கல்வி கற்காத ஒருவரின்
ஒட்பம் – அறிவாண்மை
கழியமிகவும்
நன்றாயினும் – பாராட்டத்தக்க ஒன்றாயினும்
கொள்ளார் – அதை ஒருபொருட்டாகக் கொள்ளமாட்டார்
அறிவுடையார் – அக்கல்வி அறிவுடையவர்கள்
படிக்காத மேதை என்று கொண்டாடப்படுபவரெல்லாம் கற்றறிந்தவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்கிறதா இக்குறள்?  கல்வியறிவு என்பது எல்லோருக்கும் தேவையான ஒன்றுதான். ஆனால், “ஏட்டுச்சுரைக்காய் கவைக்குதவாது” என்று வழக்கும் இருக்கிறது. வெறும் கல்வியறிவு மட்டுமே அறிவாகாது என்பதற்கும் எத்தனையோ வாழ்ந்த, வாழ்கின்ற எடுத்துக்காட்டுகள் உள்ளன.
வள்ளுவர் காலத்தில் எப்படியோ, இன்றைய காலகட்டத்தில் இக்குறளின் கருத்தை பெரும்பாலோர் ஒத்துக்கொள்ளமாட்டார்கள், கற்றறிந்தவர்கள் உட்பட. கல்லாதவரின் அறிவாண்மையைப் பரிமேலழகர் ஏரெலெழுத்து(நத்தை ஊரும்போது உண்டாகும் வரி வடிவு) என்பார். அவரது எடுத்துக்காட்டும், “ஆகுமோ நந்துழுதவெல்லாம் கணக்கு” என்னும் பழமொழிப்பாடலை ஒட்டியது.
இக்குறள் சொல்லும் கருத்து இதுதான். “கல்வி கற்காத ஒருவரின் அறிவாண்மை மிகவும் சிறந்திருந்தாலும், அதை கல்வியறிவு உடையவர்கள் ஒரு பொருட்டாகக் கொள்ளமாட்டார்கள்”.
பழமொழிப்பாடல் வரிகள் ஒன்று, “கல்லாதான் கண்ட கழிநுட்பம் காட்டரிதால்” என்கிறது. சிறுபஞ்சமூலப்பாடல் ஒன்று, “கல்லாதான் தான்காணும் நுட்பம்… நல்லார்கள் கேட்பின் நகை” என்கிறது.
இன்றெனது குறள்:
அறிவாளி ஆயினும் கல்லாரைக் கல்வி
அறிவுடையோர் கொள்ளார் மதித்து

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

1 Response to குறளின் குரல் – 412

  1. praba says:

    Otpam na natpu endrum kollalam illaya….

Leave a comment