குறளின் குரல் – 440

2nd July 2013
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
                            (குறள் 433: குற்றம் கடிதல் அதிகாரம்)
Transliteration:
thinaiththuNaiyAm – the size of a morsel
kuRRam varinum – even if the faults are of that size
panaththuNayAk – Of the size of a palm tree
koLvar – will take
pazhi – the blame
nANuvAr – will feel the shame
Even if the inadvertent fault committed is only of a millet’s size, a righteous ruler would feel it is of the magnitude of a palm tree and would feel shameful for the blame it brings. The same comparison of millet to palm tream has been used on other verses also. The first one has been seen in the chapter of gratitude for the benefit. (“thinaiththuNai nanRi seyinum panaiththuNaiyAgak koLvar payan therivAr”). The current verse is the 2nd place where it is again been used. A third verse much later in the chapter of “yearning for union with the love” he has used the same comparison again. ( “thinaiththuNaiyum UDAmai vENDum panaththuNAiyum kAmam niRaiya varin”).
This seems to be a favorite comparison of vaLLuvar when he wanted to paint a vast magnitude of difference. He could have used other objects to show and exaggerate the difference, but he chose to  use the objects that are seen everyday, everywhere and by everybody.  The chapter on “Rightful scepter” also use the same words “kutRam kaDidhal” to indicate this as the work of a rightful ruler.
“Though may be only a tiny millet’s size, a fault may seem
The size of a palm tree for those who fear shame of blame”
தமிழிலே:
தினைத்துணையாம் – ஒரு சிறிய தினையளவே (அரிசியைப் போல தானியம்)
குற்றம் வரினும் – குற்றம் வந்தாலும்
பனைத்துணையாக் – அதை ஒரு நெடிதிருக்கும் பனைமரத்தின் அளவிலே
கொள்வர் – எடுத்துக்கொண்டு, அதற்காக வருந்துவர்
பழி – பழி அதனால் வரும் பாவங்களுக்கு
நாணுவார் – வெட்கப்படுகிறவர்
சிறிய தினையளவே குற்றம் செய்தாலும் அதையே பனைமரமளவுக்குப் பெரிதாக எண்ணி அதனால் வரும் பழிக்கு அஞ்சி நாணுவதே ஆள்வோரில் உயர்ந்தவர்கள் செய்யும் செயல் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.  தினைத்துணை-பனைத்துணை என்ற ஒப்புமையை பயன்படுத்தியுள்ள இரண்டாவது குறள் இது. முதற்குறள் செய்நன்றி அறிதல் அதிகாரத்தில் வரும் “தினைத்துண நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார்”என்ற குறள். பின்னால் வரப்போகும் காமத்துப்பாலின் புணர்ச்சி விதும்பல் அதிகாரத்தில், “தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின்” என்னும்  குறள் மூன்றாவது குறளாகும்.
இந்த ஒப்புமை மிகச் சிறியது, மிகப்பெரியது என்கிற வேற்றுமையைக் காட்டவேண்டு வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். குற்றங்கடிதலைப் பற்றி வள்ளுவரே செங்கோன்மை அதிகாரத்திலும், அரசர்களுக்கு இருக்கவேண்டிய  பண்புகளைப் பற்றி கூறும்போது, “குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்” என்பார். சிறியது, பெரியது என்ற வேற்றுமையைக் காட்டும் போது, வள்ளுவர் வேறு கண்ணுக்குப் புலப்படாத பொருள்களைச் சொல்லியிருக்கலாம். ஆனால் எல்லோராலு, எங்கும்,  ஒவ்வொரு நாளும் பார்க்கப்படக்கூடிய பொருள்களை சொன்னதிலிருந்து, எல்லோருக்கும் விளங்கச் சொல்லவேண்டும் என்கிற முனைப்பு தெரிகிறது,
இன்றெனது குறள்:
சிறுகுற்றம் செய்யினும் வெட்குவர் நல்லோர்
உறுத்தும் பெரும்பழி யென்று
siRukuRRam seyyinum veTkuvar nallOr
uRuththum perumpazhi yenRu

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment