குறளின் குரல் – 462

24th July 2013
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
                      (குறள் 455: சிற்றினம் சேராமை அதிகாரம்)
Transliteration:
manaththUymai seyvinai thUymai iraNDum
inanthUymai thUvA varum
manath thUymai – The purity of mind
seyvinai thUymai – and the purity of deeds
iraNDum – those two
inan thUymai – depending on a person’s purity of companionship
thUvA varum – will come as the support line.
A simple verse that does not invoke a debate of differences of opinions! Purity of a person’s mind and deeds are dependent on the kind of companionship sought and kept.  People that are in the company of mean-minded, though may not be that way to start with, will eventually turn out to be so. Likewise, people that seek the company and guidance of great, will reflect the same in their mind and deeds.
“” Purity of mind and deeds depend
   On the company that we append”
தமிழிலே:
மனந் தூய்மை  – அகத்தின் தூய்மையும்
செய்வினை தூய்மை  – செயல்களின் தூய்மையும்
இரண்டும்  – ஆகிய இரண்டுமே
இனந் தூய்மைஒருவர் சேர்ந்திருக்கும் இனத்தின் தூய்மையைப் பொருத்து (சிற்றினம் அல்லது பெரியோர்)
தூவா வரும்அவருக்குப் பற்றுக்கோடாய் வரும்
இக்குறள் சொல்லும் கருத்து எளிமையானது, கருத்து வேறுபாடுகளுக்கு இடமில்லாதது. ஒருவருடைய மனம் மற்றும் செயல் தூய்மைகள், அவரின் சேர்க்கையையின் துய்மையைப் பொருத்தே அமையும். சிற்றினம் சேர்ந்தார்க்கு மனமும், அதனால் கூடிய செயல்களும் தூய்மையாய் இராது. அதே போல் பெரியோரைப் பற்றுக்கோடாகச் (தூவா) சேர்ந்தார்க்கு, அவரால் நல்வழிப்படுத்தலும், அதனால் மனத்தூய்மையும் உண்டாம். அதன் வழி அவர்கள் செயல்களும் குற்றமின்றி அமையும்.
கம்பராமாயண சடாயு படலத்தில், “ தீயவர் சேர்தல் செய்தார் தூயவர் அல்லர் சொல்லில் தொன்னெறி தொடர்ந்தோர் என்றான்” என்பார் கம்பர்.
இன்றெனது குறள்:
தூய்மை மனமும் செயலும் உறுமினத்
தூய்மைபற்றுக் கோடாகி டின்
thUymai manamum seyalum uRuminath
thUymaipaRRuk kODagi Din

About ashoksubra

A little of everything is me! Immensely amazed by the concept of Universe and its infinite dimensions. Everything in this perspective seems extremely insignificant spec of a matter! My strength and weakness are one and the same - interest in everything. Focus and Shine is contrary to my belief system because everything shines, un-shines in time. There is nothing like permanent glory, except for the unknown, unseen, yet believed to be smiling at all of us - creator! Sometimes the thought having to go through a whole lot of new learning if I am born again baffles me. At the same time, I feel it may be a new beginning in a clean slate! So, you have figured me out right? I hope not!
This entry was posted in ThirukkuraL (திருக்குறள்). Bookmark the permalink.

Leave a comment